கருஞ்சில்லை

கருஞ்சில்லை
Black mannikin
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எசுடிரில்டிட்டே
பேரினம்:
இனம்:
உ. இசுடிஜியா
இருசொற் பெயரீடு
உலோஞ்சுரா இசுடிஜியா
(எர்வின் ஸ்ட்ரெஸ்மேன், 1924)
     பரவல்

கருஞ்சில்லை (Black mannikin)(உலோஞ்சூரா இசுடிஜியா) என்பது நியூ கினியாவில் மாண்டம் (பப்புவா, முன்பு ஐரியன் ஜெயா, இந்தோனேசியா என அறியப்பட்டது) முதல் பப்புவா நியூ கினியாவின் டேவிம்பு ஏரி வரை காணப்படும் சிவப்பு குருவி சிற்றினமாகும். இது பொதுவாகப் புன்னிலம், ஈரநிலங்களில் வசிக்கும். அதிகபட்சம் 20 பறவைகள் கொண்ட கூட்டமாகக் காணப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் இவை நெல் பயிர்களிலும் காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்

தொகு

சாவா உருசா மான் (செர்வசு திமோரென்சிசு) அறிமுகம் காரணமாக நாணல் படுக்கைகளின் அழிவால் இந்த சிற்றினம் அச்சுறுத்தப்படுகிறது. மேலும் பன்றிகள் போன்ற கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், புல்வெளிகளில் வனப்பகுதியை ஆக்கிரமிப்பதாலும் இவை அச்சுறுத்தப்படுகின்றன. இது பறவை வர்த்தகத்தால் மோசமாகப் பாதிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Lonchura stygia". IUCN Red List of Threatened Species 2017: e.T22719890A111124460. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22719890A111124460.en. https://www.iucnredlist.org/species/22719890/111124460. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருஞ்சில்லை&oldid=3744119" இலிருந்து மீள்விக்கப்பட்டது