கருணா சுக்லா
கருணா சுக்லா (Karuna Shukla)(1 ஆகத்து 1950 - 27 ஏப்ரல் 2021) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்தவரும் ஆவார்.
கருணா சுக்லா Smt. Karuna Shukla | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | சரண் தாசு மொகந்த் |
பின்னவர் | கமலா தேவி பாட்டில் |
தொகுதி | ஜான்கிர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | குவாலியர், மத்திய பாரதம், இந்தியா | 1 ஆகத்து 1950
இறப்பு | 27 ஏப்ரல் 2021 ராய்ப்பூர், சத்தீஸ்கர், சத்தீசுகர், இந்தியா | (அகவை 70)
காரணம் of death | கோவிட்-19 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (2014 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி (1982-2013) |
துணைவர் | மகாதேவ் சுக்லா |
உறவுகள் | அடல் பிகாரி வாச்பாய் (மாமா) |
பிள்ளைகள் | 1 மகன் & 1 மகள் |
As of 25 செப்டம்பர், 2006 மூலம்: [1] |
அரசியல்
தொகுகருணா சுக்லா சத்தீசுகரின் ஜான்ஜ்கிர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் 2013 வரை பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கட்சியின் உறுப்பினராக இருந்தார். இவர் 2009 தேர்தலில் கோர்பா தொகுதியில் மத்திய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த இந்தியத் தேசிய காங்கிரசின் சரண் தாசு மகந்திடம் தோல்வியடைந்தார்.
இவர் 25 அக்டோபர் 2013 அன்று பாஜகவிலிருந்து விலகினார்.[1][2]
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மருமகள் கருணா.
பிஜேபி உடனான தனது 32 ஆண்டுக்கால தொடர்பை முடித்துக் கொண்ட பிறகு, பிப்ரவரி 27, 2014 அன்று, கருணா இந்தியத் தேசிய காங்கிரசில் இணைந்து 2014 மக்களவைத் தேர்தலில் சத்தீசுகரில் உள்ள பிலாசுப்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் பாஜகவின் லகன் லால் சாகுவிடம் 176,436 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கருணா 2018 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜ்நந்த்கானில் போட்டியிட்டார். ஆனால் கருணா, முன்னாள் முதல்வர் சிறீ ரமன் சிங்கால் தோற்கடிக்கப்பட்டார்.
இறப்பு
தொகுஏப்ரல் 27, 2021 அன்று, கருணா கோவிட்-19 நோயால் இறந்தார்.[3]