கருந்தலைக் குயில் கீச்சான்

கருந்தலை குயில் கீச்சான்
குசராத்து வதோரா மாவட்டம் சிந்ரோத்தில் ஆண் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பேபாகிடே
பேரினம்:
லாலேஜ்
இனம்:
லா. மெலனோப்டெரா
இருசொற் பெயரீடு
லாலேஜ் மெலனோப்டெரா
(ரூப்பெல், 1839)
வேறு பெயர்கள்

கோராசினா மெலனோப்டெரா

கருந்தலை குயில் கீச்சான் (Black-headed cuckooshrike)(லாலேஜ் மெலனோப்டெரா) என்பது இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு குயில் கீச்சான் சிற்றினம் ஆகும்.

பெயர்கள்

தொகு

தமிழில் : கருந்தலை குயில் கீச்சான்

ஆங்கிலத்தில் : Black-headed cuckooshrike

அறிவியல் பெயர் :Coracina melanoptera

உடலமைப்பு

தொகு

19 செ . மீ - இதன் தலை முழுவதும் நல்ல கருப்பாகவும் உடல் கருஞ்சாம்பல் நிறமாகவும் இருக்கும். வால் கருப்பாக வெள்ளை முனையுடன் கூடியது.

 
கருந்தலை குயில் கீச்சான்

காணப்படும் பகுதிகள் & உணவு

தொகு

தனியாகவும் சில நேரங்களில் கூட்டாமாகவும் காணப்படும் மின் சிட்டு. காட்டுக் கீச்சான், வால்காக்கை ஆகிய இரை தேடும் குழுக்களில் ஒன்றாக இரைதேடும். .புழு பூச்சிகல் சிறு பழங்களையும் உணவாகக்கொள்ளும். பிட்-பிட்-பிட் எனவும் டுவிட்-டுவிட் எனவும் முடியும் சீழ்க்கைக் குரலில் ஆண் பறவை குரல் கொடுக்கும். பெண் இது போலத் தொடர்ந்து குரல் கொடுக்காது ஒரு முறை மட்டும் குரல் கொடுக்கும்.

இனப்பெருக்கம்

தொகு

ஏப்ரல் முதல் சூன் வரை உலர்ந்த புல்லைச் சிலந்தி நூலால் இணைத்து 8 செ.மீ குறுக்களவிலான கோப்பை வடிவிலான கூட்டினை மரங்களில் கவட்டியில் இரண்டு முதல் எட்டு மீட்டர் உயரத்தில் அமைத்து 3 முட்டைகள் இடும். [2]

காட்சிமேடை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Coracina melanoptera". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க . ரத்னம் -மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:109