கருமாத்தூர் கலியுகநாத சாமி கோயில்
கருமாத்தூர் கலியுகநாத சாமி கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், கருமாத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]
அருள்மிகு கலியுகநாத சாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மதுரை |
அமைவிடம்: | கருமாத்தூர், உசிலம்பட்டி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | உசிலம்பட்டி |
மக்களவைத் தொகுதி: | தேனி |
கோயில் தகவல் | |
மூலவர்: | கலியுகநாதசாமி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகாசிவராத்திரி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
அமைத்தவர்: | இராணிசோழத்தேவர் |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] எட்டு கள்ளர் நாட்டு மக்களுக்கும் பொதுவான கோவிலாகவும், மக்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யும் ஒரு நீதிமன்றமாகவும் விளங்கியது
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் கலியுகநாதசாமி சன்னதியும், விநாயகர், நவக்கிரகம், நந்தி, நாகர், வீரபத்திரர், பாப்பார கருப்பசுவாமி, துர்க்கை உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. கருமாத்தூர்நாடு.பிறமலை கள்ளர் சமூகம் மதுரை கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு தென்னகத்தின் எல்லைகளை வந்தடைந்த #கள்ளர் குல மக்கள் , ஆதியில் வடதிசை இருந்து தென்னகம் வந்த தெய்வங்கள் குலம் காக்க குடிபுகுந்தன...#ஈஸ்வரன் ஐம்பெரும் தலங்களில் #பஞ்சபூதங்களாக எழுந்தருளியுள்ளதுபோல் #ஆதிசங்கரர் சீடரான #இராஜகோபால அய்யர் சிவ பீடங்கள் அமைக்கின்றார்... அதிலுள்ள பஞ்சபூத பீடங்கள்
- ஆகாயம் - #கலியுகநாதர்
- நீர் - #விருமாண்டி
- நிலம் - #நல்லகுரும்பன்
- நெருப்பு - #கோட்டை மந்தை கருப்பு
- காற்று - #ஆங்காள ஐயன்
சிவனின் சைவசமயத்தை அழிக்க நினைத்து சமணர்கள் செய்த பாவங்களை அடக்க #கழுமரத்தில் ஏற்றி தண்டித்தனர் பாண்டிய மன்னர்கள் ... அப்படி அவர்களை #கழுமரம் ஏற்றி சைவ சமயத்தை நிலைநாட்டியதனால் #கழுவநாதன் என்ற பெயர் வந்தது ... சிதம்பரம் நடராஜர் கோயிலைப்போல பலவித இரகசியங்கள் அடங்கிய கோயில் என்பதால் உருவமில்லாத வழிபாடு செய்யப்படுகிறது ... சக்தி வாய்ந்த கலியுக நாதரின் மேன்மையால் முதல் மரியாதை இந்த ஆலயத்திற்கே .... இதுவே பலவித கள்ளர் நாட்டு கோயில்களில் #பெரியகோவில் என்ற பெயர் பெற்றது ... அதனால் தான் மகாசிவராத்திரி அன்று மாசிப்பச்சை 22 கிராம மணியோசை முழங்க நள்ளிரவு உச்சி பூசை நடக்கிறது ..
இராணிசோழ தேவன் மூத்த தாரம் .. இராணி சோழச்செட்டி கழுவன் பூசாரி .. இராணிசோழத்தேவன் இளைய தாரம் விருமன் பேச்சி பூசாரி .. #முப்புரம் ,#மூனு வாசல் ,#மூனு கோயில் காவல்காரன் விருமன் ..
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)