கரோட்டி
கரோட்டி ( Kharoti ) என்பது கில்ஜி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பஷ்தூன் பழங்குடியாகும். இவர்கள் ஆப்கானித்தானின் பாக்டிகா மாகாணத்தின் மத்தியப் பகுதியில் இருந்து வந்தனர். ஆனால் நாட்டின் பிற பகுதிகளிலும் இவர்கள் உள்ளானர். கரோட்டிகள் 1945 இல் பிரித்தானிய இந்தியாவில் (நவீன பாக்கித்தான் ) குவெட்டாவில் உள்ள கரோத்தாபாத்தில் குடியேறினர்.
பாக்டிகா மாகாணத்தில் உர்குன், பர்மால், சர் அவ்சா, சர்குன் சகர், ஓம்னா, சுரோபி, மற்றும் கசுனி, சாபுல் , பாக்டியா, கோசுட், லோகார், வர்தகு காபுல் , நங்கர்கர், கோமல், பன்னு மர்மந்து தேரா இசுமாயில் கான் மற்றும் குவெட்டா போன்ற பகுதிகளில் கரோட்டி மக்கள் அதிகம் உள்ளனர்.[1]
முக்கியத்துவம்
தொகுகில்ஜி கூட்டமைப்பின் பஷ்தூன்களான, கரோட்டிகளின் முக்கியத்துவம் நாசர்-நசீர் குடும்பத்தின் ஆட்சிகளின் உச்சத்தில் இருந்தது. 18 ஆம் நூற்றாண்டில் போட்டியாளரான துரானி கூட்டமைப்பின் எழுச்சியுடன், கரோட்டிகள் ஆப்கானிய அரசியலில் தங்கள் முக்கிய பங்கை இழந்தனர். ஆனால் கிராமப்புற ஆப்கானித்தான் பிராந்தியங்களில் வலுவாக இவர்கள் இருந்தனர். இருப்பினும், இவர்கள் பெரும்பாலும் தங்களை "உண்மையான பஷ்தூன்கள்" என்றும், கில்ஜியாக இருப்பதால், ஆப்கானித்தானின் உரிமையுள்ள தலைவர்களாகவும் கருதுகின்றனர்.[2]
குறிப்பிடத்தக்க கரோட்டியின்
தொகு- குல்புதீன் எக்மத்யார், அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் பிரதமர், இவர் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பின் போது ஆப்கானித்தானின் படைத் தலைவராக இருந்தார். (ஹிஸ்ப்-இ-இஸ்லாமி தலைவர்)
- சேர்கான் நாசர், லோ கான் (கிராண்ட் கான்) இசுபின்சர் பருத்தி நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் குந்தூசின் நிறுவனரும் ஆவார்
- கோலம் செர்வார் நாசர், கான் (1922-1984), இசுபின்சர் பருத்தி நிறுவனத்தின் தலைவர்
- டாக்டர் அக்மத் சா கரோட்டி, ஆப்கானித்தானின் நிதி மற்றும் நிர்வாகத்தின் பொது இயக்குனர் மற்றும் கரோட்டி பழங்குடியினரின் மூத்தவர்.
- கோலாம் நபி நாசர், கான் (1926-2010), பாராளுமன்ற உறுப்பினர்
- அபிசுல்லா அமீன், அரசியல்வாதி மற்றும் ஆப்கானித்தானின் அதிபர்
- காஜி மெராசீதீன் கான் கரோட்டி, ஆப்கானித்தானின் முன்னாள் நீதி அமைச்சர் மற்றும் கரோட்டி பழங்குடியினரின் மூத்தவர்.
- அர்சலா கரோட்டி, சோவியத் படையெடுப்பின் போது ஆப்கானித்தானின் படைகளில் பணியாற்றிய புகழ்பெற்ற தளபதி, 2016 முதல் பாக்கித்தானில் உள்ள ஆப்கானித்தான் அகதிகளின் தலைவர்.
- சரோபி பாக்டிகாவைச் சேர்ந்த மலாக் ஆகா முகமது அப்பாசுகிலின் மகன் மலாக் கான் முகமது காக்கி, ஆப்கானித்தானின் தேசிய சட்டமன்றத்தில் செனட்டராக இருந்தார்.
- பர்கத் தர்யா நாசர், கான் (பிறப்பு 1962), பாடகர் மற்றும் இசையமைப்பாளர்
- மிர்வைசு அசரப், ஆப்கானித்தான் தேசியத் துடுப்பாட்ட வீரர்
- சராபுதீன் அசரப், ஆப்கானித்தான் தேசியத் துடுப்பாட்ட வீரர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Paktika Personalities: An Examination of the Tribes and the Significant People of a Traditional Pashtun Province - Timothy S. Timmons and Rashid Hassanpoor (2007)
- ↑ "Paktya Province". The Program for Culture & Conflict Studies. பார்க்கப்பட்ட நாள் 19 March 2015.