கலகல்சித் மணல்பரப்பு யுத்தம்

கலகல்சித் மணல்பரப்பு யுத்தம் என்பது மங்கோலியாவின் பழங்குடியினங்களை ஒரே பதாகையின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சியாகத் தெமுஜின் சண்டையிட்ட பல யுத்தங்களில் ஒன்றாகும். சமுக்கா மற்றும் தனது தந்தையின் ஆன்டாவான தொகுருல் கானுக்கு எதிராகத் தெமுஜின் இந்தச் சண்டையை நடத்தினார். அவர்கள் தெமுஜினுக்கு எதிராகத் திட்டம் தீட்டினர். தெமுஜின் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றார். எனினும் அதிகமான இழப்பைச் சந்தித்தார்.[1] தெமுஜினின் 17 வயதுச் சிறுவனான ஒக்தாயி இந்த யுத்தத்தில் தொலைந்து விட்டான். அவன் போர்க்களத்தில் காயமடைந்து இருந்தான்.[2] மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின் படி, தெமுஜினின் தத்துச் சகோதரனும் நண்பனுமான போரோகுலா யுத்தத்துக்குப் பிறகு ஒக்தாயியை மீட்டுக் கொண்டுவந்தார். தன் தந்தை தொகுருல் தன்னை விட தெமுஜினை அதிகம் மதிப்பதன் காரணமாக செங்குமுக்குப் பொறாமை ஏற்பட்டது. எனவே ஆட்களைக் கூட்டி வரத் தொகுருலிடம் செங்கும் கோரினான். தெமுஜினின் மூன்று உறவினர்கள் மற்றும் செங்குமுடன் இணைந்து சமுக்கா பழைய நாடோடிப் பேரரசை மீண்டும் ஒருங்கிணைக்கும் தெமுஜினின் குறிக்கோளைத் தடுக்கத் திட்டம் தீட்டினான்.

கலகல்சித் மணல்பரப்பு யுத்தம்
மங்கோலியக் கூட்டமைப்புகளை இணைத்ததன் ஒரு பகுதி
நாள் 1203
இடம் கலகல்சித் மணல்பரப்பு, மவுவோ சிகரம் மங்கோலியா
போர்சிசின் பின்வாங்கினர்
பிரிவினர்
போர்சிசின் அரசமரபு, மங்குத் கமக் மங்கோல் கூட்டமைப்பின் சதரன் பழங்குடியினம், கெரயிடுகள்
தளபதிகள், தலைவர்கள்
தெமுஜின்
ஒக்தாயி (மகன்)
போரோகுலா (தளபதி)
சமுக்கா ( தெமுஜினின் ஆன்டா)
தொகுருல் கான்
பலம்
2,500 3,000
இழப்புகள்
ஒக்தாயி காயமடைந்து தொலைந்துவிட்டான். இளவரசன் செங்குமுக்குக் கன்னத்தில் காயம்.

உசாத்துணை

தொகு
  1. Twitchett, D.C.; Franke, H.; Fairbank, J.K. (1978). The Cambridge History of China: Volume 6, Alien Regimes and Border States, 907-1368. Alien Regimes and Border States, 907-1368. Cambridge University Press. p. 341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-24331-5. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  2. Powers, J.; Templeman, D. (2012). Historical Dictionary of Tibet. Asian/Oceanian historical dictionaries. Scarecrow Press. p. 493. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-6805-2. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.