கல்யாணி பிரியதர்ஷன்

இந்திய நடிகை

கல்யாணி பிரியதர்ஷன் நாயர் (Kalyani Priyadarshan) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017இல் வெளிவந்த "ஹலோ" தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகளை தான் நடித்த முதல் படத்திற்காகப் பெற்றுள்ளார்.[1][2]

கல்யாணி பிரியதர்ஷன்
பிறப்பு5 ஏப்ரல் 1993 (1993-04-05) (அகவை 31)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை, கலை இயக்குனர், தயாரிப்பு வடிவமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2013 முதல் தற்போது வரை
பெற்றோர்பிரியதர்சன் (தந்தை)
லிஸ்சி (தாய்)

இளமைப்பருவம் தொகு

கல்யாணி, இந்திய திரைப்பட தயாரிப்பாளரான பிரியதர்சன் மற்றும் மலையாள நடிகை லிஸ்சிக்கும் மகளாகப் பிறந்தார். இவருக்கு, சித்தார்த் என்கிற சகோதரர் இருக்கிறார். ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னையில் தனது பள்ளிப்படிப்பினை முடித்தார். பின்னர், மேற்படிப்பை சிங்கப்பூரில் படித்தார். அங்குள்ள நாடகக் குழுவில் பணிபுரிந்தார். தனது பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, நியூயார்க் நகரத்திலுள்ள "பார்சன்ஸ் ஸ்கூல் ஆப் டிசைன்" கல்லூரியில் சேர்ந்து கட்டிடக்கலை வடிவமைப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இந்த நேரத்தில் அவர் நாடக அரங்கில் தங்கி இருந்தார். தாய்நாட்டில் புதுச்சேரி (நகரம்) ஆதிசக்தி நாடக அரங்கில் நடிப்புத் தொழிற்துறை பயிற்சியில் கலந்து கொண்டார்.[3][4] 2014இல் இவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர்.[5]

தொழில் தொகு

கல்யாணி, கிரிஷ் 3 (2013), பாலிவுட் திரைப்படத்தில் சாபு சிரிலுக்கு துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், 2016இல், துணை கலை இயக்குனராக இருமுகன் (திரைப்படம்) தமிழ்த் திரைப்படத்தில் பணிபுரிந்தார்.[6] அதைத் தொடர்ந்து, 2017இல் தெலுங்கு மொழிப் படமான "ஹலோ"வில் நடிகையாக அறிமுகமானார். இத் திரைப்படத்தில், அகில் அக்கினேனியுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப் படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். இவர் துணை இயக்குனராக பிரியதர்சனிடம் பணிபுரிந்தவர். மேலும், நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா இப் படத்தை தயாரித்துள்ளார்.[7] இத் திரைப்படம் திசம்பர் 22, 2017இல் உலகெங்கும் வெளியானது. இப் படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு, இவர் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றுள்ளார்.[8]

திரைப்படவியல் தொகு

குறி
  இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது
Year Title Role Language(s) Notes Ref.
2017 ஹலோ பிரியா/ஜுன்னு தெலுங்கு [9]
2019 சித்ரலஹரி லஹரி [10]
ரணரங்கம் கீதா [11]
ஹீரோ மீரா தமிழ் [12]
2020 வரனே அவஷ்யமுண்ட் நிகிதா "நிக்கி" மலையாளம் [13]
புத்தம் புது காலை இளம் லட்சுமி கிருஷ்ணன் தமிழ் செக்மென்ட்: "இளமை இதோ இதோ" [14]
2021 மாநாடு சீதாலட்சுமி [15]
மரக்கர்: அரபிக்கடலின் சிங்கம் ஆயிஷா மலையாளம் [16]
2022 ஹிருதயம் நித்யா பாலகோபால் [17]
சகோ அப்பா அண்ணா குரியன் [18]
தள்ளுமாலா பாத்திமா பீவி "பீபாத்து" [19]
2023 சேஷம் மைக்-இல் பாத்திமா பாத்திமா நூர்ஜஹான் "பாத்து" [20]
ஆண்டனி ஆன் மரியா [21]
2024 வார்ப்புரு:Pending film அறிவிக்கப்பட உள்ளது மலையாளம் படப்பிடிப்பு நடந்து வருகிறது [22]
வார்ப்புரு:Pending film அறிவிக்கப்பட உள்ளது தமிழ் படப்பிடிப்பு நடந்து வருகிறது [23]

மேற்கோள்கள் தொகு

  1. Winners: 65th Jio Filmfare Awards (South) 2018. Times of India (17 June 2018). Retrieved on 2018-08-14.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-04. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
  3. Kumar, Hemanth (7 January 2018). "Kalyani Priyadarshan on why Hello is the best film that has happened to her career". Firstpost. http://www.firstpost.com/entertainment/kalyani-priyadarshan-on-why-hello-is-the-best-film-that-has-happened-to-her-career-4291265.html. பார்த்த நாள்: 10 January 2018. 
  4. "Kalyani: Biography of actress". My Star Bio. http://mystarsbio.com/kalyani-priyadarshan/. 
  5. Subramani, A. (16 September 2016). "Film director Priyadarshan – actor Lissy divorce formalities complete". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/chennai/Film-director-Priyadarshan-actor-Lissy-divorce-formalities-complete/articleshow/54361266.cms. பார்த்த நாள்: 10 January 2018. 
  6. James, Anu (18 July 2017). "It's official: Kalyani Priyadarshan to debut opposite Akhil Akkineni in Telugu". International Business Times. http://www.ibtimes.co.in/its-official-kalyani-priyadarshan-debut-opposite-akhil-akkineni-telugu-735122. பார்த்த நாள்: 10 January 2018. 
  7. "Debut movie with Akhil". The News Minute. http://www.thenewsminute.com/article/its-official-priyadarshan-and-lissys-daughter-kalyani-debut-akhil-akkineni-film-64912. 
  8. "Kalyani Priyadarshan gets a perfect launch". 123 Telugu.com. http://www.123telugu.com/mnews/kalyani-priyadarshan-gets-a-perfect-launch.html. 
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Hello Kalyani என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  10. "Kalyani Priyadarshan and Nivetha Pethuraj to star in Sai Dharam Tej's 'Chitralahari'". The News Minute. 22 November 2018. Archived from the original on 18 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 May 2019.
  11. R., Manoj Kumar (14 August 2019). "Ranarangam actor Kalyani Priyadarshan: I love gangster movies". The Indian Express இம் மூலத்தில் இருந்து 17 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190817143829/https://indianexpress.com/article/entertainment/telugu/kalyani-priyadarshan-ranarangam-gangster-movies-working-with-father-priyadarshan-5901398/. 
  12. "Hero actress Kalyani Priyadarshan is all praise for co-star Sivakarthikeyan". The Times of India இம் மூலத்தில் இருந்து 30 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191230012448/https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/hero-actress-kalyani-priyadarshan-is-all-praise-for-sivakarthikeyan/articleshow/72966608.cms. பார்த்த நாள்: 12 October 2020. 
  13. Sanjith Sidhardhan (1 September 2019). "Anoop Sathyan ropes in Dulquer and Kalyani for a family-drama". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 10 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200210102021/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/anoop-sathyan-ropes-in-dulquer-and-kalyani-for-a-family-drama/articleshow/70922736.cms. 
  14. "Kalyani Priyadarshan talks about Putham Pudhu Kaalai". Only Kollywood. 15 October 2020. Archived from the original on 22 October 2020. பார்க்கப்பட்ட நாள் 15 November 2020.
  15. "Kalyani Priyadarshan to be seen opposite Simbu in 'Maanaadu'". The News Minute. 31 March 2019. Archived from the original on 31 March 2019. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  16. Sidhardhan, Sanjith (25 September 2018). "Kalyani Priyadarshan and Keerthy Suresh join Mohanlal's Marakkar". The Times of India இம் மூலத்தில் இருந்து 6 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210306095816/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/kalyani-priyadarshan-and-keerthy-suresh-join-marakkar/articleshow/65947798.cms. 
  17. Sidhardhan, Sanjith (14 February 2021). "Pranav Mohanlal and Kalyani Priyadarshan wrap up their portions of Hridayam in Chennai". The Times of India இம் மூலத்தில் இருந்து 15 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210215162754/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/pranav-mohanlal-and-kalyani-priyadarshan-wrap-up-their-portions-of-hridayam-in-chennai/articleshow/80906562.cms. 
  18. Palisetty, Ramya (18 June 2021). "Prithviraj Sukumaran announces his second directorial Bro Daddy with Mohanlal". India Today இம் மூலத்தில் இருந்து 19 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210619201702/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/prithviraj-sukumaran-announces-his-second-directorial-bro-daddy-with-mohanlal-1816663-2021-06-18. 
  19. Service, Express News (14 October 2021). "Tovino and Kalyani to share screen in 'Thallumaala'". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 27 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211027135828/https://www.newindianexpress.com/entertainment/malayalam/2021/sep/14/tovino-kalyani-to-share-screen-in-thallumaala-2358258.html. 
  20. "Kalyani Priyadarshan's film Sesham Mikeil Fathima commences filming". The New Indian Express. Archived from the original on 29 September 2022. பார்க்கப்பட்ட நாள் 17 September 2022.
  21. "Filming of Joju George, Kalyani Priyadarshan's Antony wraps up". Cinema Express. Archived from the original on 15 September 2023. பார்க்கப்பட்ட நாள் 14 September 2023.
  22. "First schedule of Varshangalkku Shesham completed". The New Indian Express. 21 November 2023. Archived from the original on 15 December 2023. பார்க்கப்பட்ட நாள் 27 November 2023.
  23. "Kalyani Priyadarshan is excited about being part of 'Genie'". The Times of India. 6 July 2023. Archived from the original on 8 July 2023. பார்க்கப்பட்ட நாள் 22 September 2023.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணி_பிரியதர்ஷன்&oldid=3932336" இலிருந்து மீள்விக்கப்பட்டது