கல் குருவி

பறவை இனம்
கல் குருவி
புரந்தர், புனே, மகாராட்டிரம்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கிளாரியோடே
பேரினம்:
கர்சோரியசு
இனம்:
க. கரோமேண்டெலிகசு
இருசொற் பெயரீடு
கர்சோரியசு கரோமேண்டெலிகசு
(ஜெமெலின், 1789)
Range of C. coromandelicus

கல் குருவி (Indian courser -- Cursorius coromandelicus) என்பது ஒரு வகைப் பறவையாகும். முக்கியமாக  தென் ஆசியா, கங்கை மற்றும் சிந்து நதி அமைப்புகளால் சூழப்பட்ட சமவெளிகளிலும் காணப்படும்.  இது ஒரு தரைப் பறவை ஆகும்.

விளக்கம்

தொகு
 
முதிர்ந்த பறவை (கேவலாதேவ் தேசியப் பூங்கா)

இது தெற்கு ஆசியா முழுவதுமே பரவலாகக் காணப்படுகிறது. சாம்பல்-பழுப்பு கலந்த மேல்பாகம் மற்றும் மஞ்சள் கலந்த சிவப்பு கீழ் பாகம் கொண்டது; மேலும் கருப்பு அடி வயிறும் செம்பழுப்பு உச்சந்தலையும் பிரதானமான வெள்ளைப்புருவக் கோடும் கருப்பு கண் பட்டையும் இக்குருவியை எளிதில் இனம் காண உதவும் களக்குறிப்புகளாகும்.[2][3]

உடலமைப்பு

தொகு

26 செ.மீ.-தோற்றத்தில் ஆள்காட்டியை ஒத்த இதன் உடல் மணல் பழுப்பாகவும் மார்பும் வயிறும் செம்பழுப்பும் கரும்புமாகவும் இருக்கும். நீண்ட கால்கள், சற்றே வளைந்த அலகு, கண்ணுக்கு மேலான வெண்புருவம் ஆகியன அடையாளம் காட்டுவன. தோல் குருவியைப் போலப் பறக்கும். பறக்கும் போது இறக்கைகளின் அடிப்பாகம் கரும்பழுப்பாகத் தோற்றம் தரும்.

பரவலும் வாழ்விடமும்

தொகு

கல்லும் கரடுமான பகுதிகள், ஊர்ப்புறங்களை அடுத்த மேய்ச்சல் நிலங்கள், புஞ்சைக்காடுகள் ஆகியவற்றில் காணலாம். நீர்வளம் மிக்க நஞ்சைப் பகுதிகளை விரும்புவதில்லை. இது திரியும் தரைப் பகுதியும் இதன் உடல் நிறமும் ஒத்துப் போவதால் இது இருப்பதைக் கண்டு கொள்வது கடினம்.

உணவு

தொகு

அடிக்கடி தலை தாழ்த்தி வண்டு, சில்வண்டு, வெட்டுக்கிளி அகியவற்றைப் பிடிக்கும்.

இனப்பெருக்கம்

தொகு

இவை முக்கியமாக மார்ச் முதல் ஆகஸ்ட் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. தென்னிந்தியா மற்றும் இலங்கையில் மே மாதத்தின் நடுப்பகுதியிலும், தர்பங்காவில் ஏப்ரல் நடுப்பகுதியிலும் இனப்பெருக்கம் செய்கின்றன.[4][5] இவை 2 அல்லது 3 புள்ளிகளுகளுடன் கூடிய முட்டைகளை நன்கு உருமறைப்புடன் வெற்று பாறை நில கூட்டில் இடுகின்றன.[6] குஞ்சுகள் பாதுகாப்பு வண்ணம் ஓடையின்றி அசையாமல் இருக்கின்றன. இவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம்.[7] கூடு அல்லது குஞ்சுகளை நெருங்கும்போது குருவிகள் ஒசை எழுப்புவதில்லை.[8] குஞ்சுகள், பொரித்தவுடன் நகர முடியும். ஆனால் ஆரம்பத்தில் பெற்றோரால் உணவளிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு அவை தானாகவே இரைத் தேடத் தொடங்குகின்றன.[9][10][11]

அச்சுறுத்தல்கள்

தொகு

கல் குருவிகள் பயன்படுத்தும் வறண்ட மற்றும் திறந்தவெளி வாழ்விடங்கள் கட்டுமானம் மற்றும் விவசாயம் போன்ற மனித நடவடிக்கைகளால் அழிக்கப்படுவதால், இவை அச்சுறுத்தப்படுகின்றன. குஜராத்தின் சில பகுதிகளில், குட்டையான புல் மூடிய திறந்தவெளி மற்றும் தரிசு நிலங்களில் இந்த இனம் மிகவும் பொதுவாக காணப்படுகின்றது. ஆனால் பல பகுதிகளில் இவை மறைந்து விட்டது. சில பகுதிகளில், வாகன செயல்பாடு மற்றும் தொழில்மயமாக்கலால் முன்பு இருந்த வாழ்விடங்களும் அழித்துள்ளன.[12]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Cursorius coromandelicus". IUCN Red List of Threatened Species. 2016: e.T22694124A93439977. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22694124A93439977.en. Retrieved 12 November 2021.
  2. Rasmussen PC; JC Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Volume 2. Smithsonian Institution & Lynx Edicions. p. 184.
  3. Sharpe, R Bowdler (1896). Catalogue of the birds in the British Museum. Volume 24. British Museum, London. pp. 39–40.
  4. Inglis, CM (1913). "Breeding of the Indian Courser Cursorius coromandelicus in the Darbhanga District". J. Bombay Nat. Hist. Soc. 22 (3): 631. https://biodiversitylibrary.org/page/30155640. 
  5. Bharos, A. M. K. Sahu, M. (2002). "Breeding by the Indian courser Cursorius coromandelicus in winter in Raipur, Chhattisgarh, India". J. Bombay Nat. Hist. Soc. 99 (2): 299–300. https://biodiversitylibrary.org/page/48604197. 
  6. Oates, Eugene W (1902). Catalogue of the collection of birds' eggs in the British Museum. Volume 2. British Museum. p. 75.
  7. Phillips,WWA (1942). "Some observations on the nesting habits of the Indian Courser, Cursorius coromandelicus [Gmelin"]. J. Bombay Nat. Hist. Soc. 43 (2): 200–205. https://biodiversitylibrary.org/page/48227880. 
  8. Ali, S; S D Ripley (1981). Handbook of the birds of India and Pakistan. Volume 3 (2nd ed.). Oxford University Press. pp. 9–11.
  9. Ali, Salim (1996). The Book of Indian Birds (12th ed.). BNHS & Oxford University Press. p. 155.
  10. Thomas, Gavin H.; Freckleton, Robert P.; Székely, Tamás (2006). "Comparative analyses of the influence of developmental mode on phenotypic diversification rates in shorebirds". Proceedings of the Royal Society B: Biological Sciences 273 (1594): 1619–24. doi:10.1098/rspb.2006.3488. பப்மெட்:16769632. 
  11. Hume, AO (1890). The nests and eggs of Indian birds. Volume 3 (2nd ed.). R H Porter. pp. 323–325.
  12. Munjpara S. B.; I. R. Gadhvi (2009). "Threats to foraging habitat of Indian Courser (Cursorius coromandelicus) in Abdasa Taluka, Kachchh, Gujarat, India". J. Bombay Nat. Hist. Soc. 106 (3): 339–340. https://biodiversitylibrary.org/page/51679238. 
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cursorius coromandelicus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்_குருவி&oldid=4119281" இலிருந்து மீள்விக்கப்பட்டது