காகோமேண்டிசு

காகோமேண்டிசு
விசிறி வால் குயில், காகோமேண்டிசு பிளாபெல்லிபார்மிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
காகோமேண்டிசு

முல்லெர், 1843
மாதிரி இனம்
காகோமேண்டிசு மெருலினசு[1]
ஜிமெலின், 1788

காகோமேண்டிசு (Cacomantis) என்பது குக்குலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குயில் பேரினமாகும். இப்பேரினத்தின் பெயர் கிரேக்க வார்த்தையான காகோசு என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் தீமை ஆகும். தீர்க்கதரிசி என்பதற்கான மாண்டிசு மற்றும் "மழை" உடன் இவற்றின் தொடர்பிலிருந்து பெறப்பட்டது. இப்பேரினப் பறவைகளில் பெரும்பாலானவை வட்டமான மூச்சுத்துவாரத்தைக் கொண்டுள்ளன. மேலும் இவை முக்கியமாகப் பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் காணப்படும். வால்களில் வரிகள் காணப்படும். பட்டைகள் குறுக்காகவும் சாய்வாகவும் காணப்படும்.[2]

வகைப்பாட்டியல்

தொகு

1843ஆம் ஆண்டில் செருமன் இயற்கை ஆர்வலர் சாலமன் முல்லர் என்பவரால் காகோமேண்டிசு பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இன்னிசைக் குயில் மாதிரி இனமாக உள்ளது. இந்தப் பேரினத்தின் பெயர் பண்டைய கிரேக்க காகோமண்டிசு என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் "அழிவுக்கான தீர்க்கதரிசி" என்பதாகும்.

சிற்றினங்கள்

தொகு

இந்தப் பேரினத்தில் பத்துச் சிற்றினங்கள் உள்ளன:[3]

  • பாலிட் குயில், காகோமேண்டிசு பாலிடசு
  • வெந்தலை குயில், காகோமேண்டிசு லுக்கோலோபசு
  • கசுக்கொட்டை மார்புக் குயில், காகோமேண்டிசு காசுடனேவென்ட்ரிசு
  • விசிறி வால் குயில், காகோமேண்டிசு பிளாபெல்லிபார்மிசு
  • பட்டைக் குயில், காகோமேண்டிசு சொனெராட்டி
  • இன்னிசைக் குயில், காகோமேண்டிசு மெருலினசு
  • சாம்பல் வயிற்றுக் குயில், காகோமேண்டிசு பாசாரினசு
  • தூரிகை குயில், காகோமேண்டிசு வேரியோலோசசு
  • துருவண்ண மார்பு குயில், காகோமேண்டிசு செபுல்கிராலிசு
  • மலுக்கு குயில், காகோமேண்டிசு எருகினோசசு

மேற்கோள்கள்

தொகு
  1. "Cuculidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
  2. Payne, RB (2005).
  3. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Turacos, bustards, cuckoos, mesites, sandgrouse". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகோமேண்டிசு&oldid=4060999" இலிருந்து மீள்விக்கப்பட்டது