இன்னிசைக் குயில்

பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Cacomantis|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

இன்னிசைக் குயில் (Plaintive cuckoo) உயிரியல் பெயர்: Cacomantis merulinus ) என்பது குயில் குடும்பத்தில் உள்ள காகோமாண்டிஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு பறவை இனமாகும். இதன் தாயகம் ஆசியா. இது இந்தியா, நேபாளம், சீனா முதல் இந்தோனேசியா வரை காணப்படுகிறது.

இன்னிசைக் குயில்
புக்கெட் மாகாணத்தின் நை யாங்கில்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Cacomantis
இனம்:
இருசொற் பெயரீடு
Cacomantis merulinus
(Scopoli, 1786)

விளக்கம் தொகு

 
இந்தியாவின், மேற்கு வங்கத்தின், கொல்கத்தாவல் முதிர்ச்சியடையாத பறவை.
 
இந்தியாவின், மேற்கு வங்கத்தின், கொல்கத்தாவில்.
 
இந்தியாவின், மேற்கு வங்கத்தின், கொல்கத்தாவில்.

இன்னிசைக் குயில் மிகவும் சிறியது. இது சுமார் 21–24 cm (8.3–9.4 அங்) நீளம் கொண்டனது. முதிர்ந்த ஆண் பறவையின் உடலின் மேற்பகுதி கறுத்த சாம்பல் நிறமும் பழுப்பும் கலந்து காணப்படும். மோவாய், தொண்டை, மார்பு ஆகியன சாம்பல் நிறமாக இருக்கும். வால் கறுப்பாக வெள்ளை விளிம்போடு இருக்கும். வால் ஓர இறகுகளில் வெள்ளைப் பட்டைகள் காணப்படும். கால்களும், பாதங்களும் மஞ்சள் நிறமாகவும், விழிப்படலம் சிவப்பு நிறமாகவும் இருக்கும். அலகின் மேற்புறம் கருப்பாகவும், கீழ்புறம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். பொதுவாக இதில் முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஒன்றுபோல இருக்கும். பெண் பறவை முழுவளர்ச்சி பெறும் முன் சிலகாலம் பல்லுருத்தோற்றமாக செங்குயிலைப் போல தோற்றம் தருகிறது.

ஆண் பறவை பல வகையில் கூவுகின்றது. மென்மையான சீழ்க்கை ஒலி போன்ற இனிய குரலில் விட்டு விட்டுக் கூவும்.

 
ஓடிசாவின், மங்களஜோடியில் ஆண் பறவை
 
ஓடிசாவின், மங்களஜோடியில் பெண் பறவை

பரவலும் துணையினங்களும் தொகு

இதில் நான்கு துணையினங்கள் உள்ளன. C. m. merulinus என்பதுபிலிப்பைன்சில் காணப்படுகிறது, இது பல பெரிய தீவுகளில் பொதுவாக காணப்படுகிறது. C. m. querulus வடகிழக்கு இந்தியா, வங்காளதேசம், தெற்கு சீனா, இந்தோனேசியா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. இது பெரும்பாலான சீனப் பகுதிகளுக்கு கோடைகாலத்தில் செல்கிறது, குளிர்காலத்திற்காக தெற்கே வலசை போகிறது . C. m. threnodes மலாய் தீபகற்பம், சுமாத்திரா, போர்னியோவில் காணப்படுகிறது . C. m. lanceolatus சாவகம், பாலி, சுலாவெசி ஆகிய நாடுகளில் வாழ்கிறது.

சக்களத்திக் குயில் ( C. passerinus ) முன்பு இன்னிசைக் குயிலின் ஒரு துணையினமாக வகைப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது பெரும்பாலும் ஒரு தனி இனமாக கருதப்படுகிறது.

சூழலியல் தொகு

 
இந்தியாவின், மேற்கு வங்கத்தின், கொல்கத்தா, ராஜர்ஹட்டில், முதிர்ச்சியடையாத பறவை

இன்னிசைக் குயில் காடுகளின் விளிம்புகள், நெருக்கமற்ற திறந்தவெளிக் காடுகள், புதர்க்காடுகள், புல்வெளிகள், விவசாய நிலம்ங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவற்றில் வாழ்கிறது. இது முதுகெலும்பிலிகளை உணவாக கொள்கிறது. இது பொதுவாக தனித்து இருக்கும். பார்வைக்கு கிடைப்பது அரிது.

இது பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடக்கூடியது. சிஸ்டிகோலாஸ், பிரினியாஸ், தையல் சிட்டுகள் போன்றவற்றின் கூடுகளில் முட்டையிடும். எந்தக் கூட்டில் முட்டை இடுகின்றனவோ இந்தப் பறவையின் முட்டைகளின் தோற்றத்தில் இதன் முட்டைகள் இருக்கும். ஆனால் இவற்றின் முட்டைகள் பெரியவையாக இருக்கும். சிறிய பறவைகள் பெரும்பாலும் குயிலை தங்கள் கூடுகளில் இருந்து விரட்டுவதற்காக கூட்டமாக திரண்டு செல்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Cacomantis merulinus". IUCN Red List of Threatened Species 2016: e.T22683923A93007953. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683923A93007953.en. https://www.iucnredlist.org/species/22683923/93007953. பார்த்த நாள்: 11 November 2021. 
  • Kennedy, Robert S.; Gonzales, Pedro C.; Dickinson, Edward C.; Miranda, Hector C. & Fisher, Timothy H. (2000) A Guide to the Birds of the Philippines, Oxford University Press, Oxford.
  • MacKinnon, John & Phillipps, Karen (2000) A Field Guide to the Birds of China, Oxford University Press, Oxford.
  • Robson, Craig (2002) A Field Guide to the Birds of South-East Asia. New Holland, London.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்னிசைக்_குயில்&oldid=3927732" இலிருந்து மீள்விக்கப்பட்டது