காங்கேசன்துறை கலங்கரை விளக்கம்

காங்கேசன்துறை கலங்கரை விளக்கம் (Kankesanthurai Lighthouse) என்பது இலங்கையின் வடக்கே காங்கேசன்துறையில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமாகும்.[1][2][3] இந்த கலங்கரை விளக்கம் 1893-ல் கட்டப்பட்டது. 22 மீட்டர்கள் (72 அடி) உயர கலங்கரை விளக்குத் தூணில் விளக்கு மற்றும் பார்வை மாடத்துடன் கூடிய எண்கோண கொத்து கோபுரம் உள்ளது.[1] இலங்கை ஆயுதப் படையின் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளும், கடற்படைத் தளத்திற்குள் உள்பகுதியில் அமைந்துள்ள இந்த கலங்கரை விளக்கம் இலங்கை உள்நாட்டுப் போரின் போது பெரிதும் சேதமடைந்து செயலற்ற நிலையில் உள்ளது.[1]

காங்கேசன்துறை கலங்கரை விளக்கம்
அமைவிடம்காங்கேசன்துறை
வட மாகாணம்
இலங்கை
ஆள்கூற்று09°48′58.15″N 80°02′42.4″E / 9.8161528°N 80.045111°E / 9.8161528; 80.045111
கட்டப்பட்டது1893
கட்டுமானம்கொத்து கோபுரம்
கோபுர வடிவம்பார்வை மாடத்துடன் விளக்கு கொண்ட எண்கோண கோபுரம்
குறியீடுகள்/அமைப்புவெள்ளை கோபுரம் மற்றும் விளக்கு
உயரம்22 மீட்டர்கள் (72 அடி)
குவிய உயரம்25 மீட்டர்கள் (82 அடி)
வீச்சு14 கடல் மைல்கள் (26 km; 16 mi)
சிறப்பியல்புகள்Fl (3) W 15s.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Rowlett, Russ (13 February 2006). "Lighthouses of Sri Lanka". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Kankesanturaï Light". Amateur Radio Lighthouse Society.
  3. "Lighthouse Explorer: Kankesanturai Light". Lighthouse Digest.

வெளி இணைப்புகள்

தொகு