காசிராம் கொத்தவால்

காசிராம் கொத்தவால் (Ghashiram Kotwal) என்பது மகாராட்டிராவில் ஒரு உள்ளூர் அரசியல் கட்சியின் எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில் 1972 ஆம் ஆண்டில் நாடக ஆசிரியர் விஜய் தெண்டுல்கர் எழுதிய மராத்தி நாடகமாகும். [1] [2] இந்த நாடகம் ஒரு அரசியல் நையாண்டி, வரலாற்று நாடகமாக எழுதப்பட்டுள்ளது. இது புனேவின் பேஷ்வா அரசவையில் இருந்த முக்கிய அமைச்சர்களில் ஒருவரான நானா பட்நாவிசு (1741-1800) மற்றும் நகரின் காவல்துறைத் தலைவரான காசிராம் கொத்தவால் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதன் கருப்பொருள் அதிகாரத்தில் உள்ள ஆண்கள் தங்கள் நோக்கங்களுக்காக சித்தாந்தங்களை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பதும், பின்னர் அவை பயனற்றதாக மாறும்போது அவற்றை அழிக்கின்றனர் என்பதுவுமாகும். இதை முதன்முதலில் திசம்பர் 16, 1972 அன்று புனேவில் முற்போக்கு நாடக சங்கம் [3] நிகழ்த்தியது. 1973 ஆம் ஆண்டில் ஜாபர் படேலின் நிறுவனம் தயாரித்த இது நவீன இந்திய அரங்கில் ஒரு உன்னதமானதாக கருதப்படுகிறது. [4]

காசிராம் கொத்தவால்
இயக்கம்ஜாபர் பட்டேல்
கதைவிஜய் தெண்டுல்கர்
போபால்,பாரத் பவனில் காசிராம் கொத்தவால் நாடகம் நடத்தப்படுகிறது

வரலாறுதொகு

தெண்டுல்கர் தனது நாடகத்தை 1863 ஆம் ஆண்டில் எழுத்தாளர்-வரலாற்றாசிரியர் மொரோபா கன்ஹோபாவின் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதினார். அவர் வரலாற்றையும் புனைகதையையும் ஒன்றாக இணைத்து இந்த நாடகத்தை எழுதினார். மேலும் இது ஒரு எளிய அறநெறி நாடகமாகக் கருதப்பட்டது . [5] '

இந்த நாடகத்தின் முதல் செயல்திறன் 1972 திசம்பர் 16 அன்று புனேவில் உள்ள பாரத் நாட்டிய மந்திரில் இருந்தது. இந்த நாடகம் ஆரம்பத்தில் ஒரு பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் அடுத்த ஆண்டுகளில் இது ஒரு வெற்றியாக கருதப்பட்டது. 1980 இல் மேற்கு ஐரோப்பாவின் சுற்றுப்பயணத்தின் போது இந்த நாடகம் வெவ்வேறு இடங்களில் அரங்கேற்றப்பட்டது. 1986 ஆம் ஆண்டில், இந்த நாடகம் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள நகரங்களில் நடத்தப்பட்டது. 1989 ஆம் ஆண்டில், இந்த குழு கிழக்கு ஐரோப்பிய நாடுகளான சோவியத் ஒன்றியம், கிழக்கு ஜெர்மனி, அங்கேரி மற்றும் யூகோசுலாவியா ஆகிய நாடுகளில் அரங்கேற்றப்பட்டது. [6]

கதைச் சுருக்கம்தொகு

புனேவில் ஒழுக்க ரீதியாக ஊழல் நிறைந்த காலத்தில் இந்தக் கதை தொடங்குகிறது. புனேவின் திவானாக (பிரதம அமைச்சர்) இருக்கும் நானா பட்நாவிசும் ஊழல் நிறைந்தவராக இருக்கிறார். இலாவணி நடனக் கலைஞர்களுடன் பணியாற்றும் காசிராம் ஒரு பிராமணராக இருப்பதால் அடுத்த நாள் பேஷ்வாவின் திருவிழாவில் உணவு சேகரிக்க செல்கிறார். இவர் அங்கு மோசமாக நடத்தப்படுகிறார். மேலும் திருட்டுக் குற்றச்சாட்டு சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், இதற்காக அவர் பழிவாங்க முடிவு செய்கிறார்.

தனது மகளை நானா பட்நாவிசிடம் பழக வைத்து புனேவின் கொத்தவால் (காவல்துறைத் தலைவர்) பதவியைப் பெற்ற காசிராம் நகரத்தில் கடுமையான விதிகளை அமல்படுத்தத் தொடங்குகிறார். அவர் எல்லாவற்றிற்கும் அனுமதி பெற வேண்டுமெனத் தெரிவிக்கிறார். மேலும் சிறிய குற்றங்களுக்குக்கூட மக்களை சிறையில் அடைக்கத் தொடங்குகிறார். இதற்கிடையில், காசிராமின் மகள் நானாவால் கர்ப்பமாகி, பிரசவத்தின்போது இறந்துவிடுகிறாள். நகரத்திற்கு வருகை தரும் ஒரு சில பிராமணர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். புனேவின் பிராமணர்கள் பின்னர் பேஷ்வாவிடம் புகார் கூறுகிறார்கள். பின்னர், பேஷ்வாவால் காசிராம் தண்டிக்கப்படுகிறார்.

நடைதொகு

மராத்தி நாட்டுப்புற நாடகங்களில் " தமாஷா " வடிவத்தைப் பயன்படுத்தியதால் இந்த நாடகம் குறிப்பிடத்தக்கது. பாடும் நடனமும் இங்கு நல்ல பலனை ஏற்படுத்துகின்றன. "அபங்கங்கள்" (பக்தி பாடல்கள்) "இலாவணிகள்" (காதல் பாடல்கள்) உடன் கலக்கப்படுகின்றன.

சர்ச்சைதொகு

விஜய் தெண்டுல்கரின் மற்ற நாடகங்களைப் போலவே, இந்த நாடகமும் சித்பவன் பிராமணச் சமூகத்தை புண்படுத்தியதாலும், அரசியல்வாதியான நானா பட்நாவிசை மோசமாக காட்டியதாலும் நிறைய சர்ச்சையை உருவாக்கியது. எனவே நாடகம் மாநிலத்தில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. [7] சிவசேனாக் கட்சியின் தலைவரான மனோகர் ஜோஷி, ஒரு பிராமணர் என்பதால், மும்பையில் நடந்த எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் இருந்தார். 1971-72ல் பெருநகரத்தில் நாடகம் அரங்கேற்றுவதை அக்கட்சி நிறுத்தியது. [5]

வரலாற்று உண்மைதொகு

இந்த நாடகம் வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. [8] அவுரங்காபாத்தில் வசித்த ஒரு வட இந்திய பிராமணரான காசிராம் என்பவர் பிப்ரவரி 8, 1777 இல் பூனாவின் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், வன்முறை சூழ்நிலையில் 1791 ஆகத்து 31 அன்று நடந்த மரணம் வரை தொடர்ந்து அதிகாரியாக இருந்தார். பேஷ்வா நாராயண் ராவின் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட முக்கியமான காலங்களில் அவர் தனது உண்மையுள்ள சேவையால் நானாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார். அவருடைய நிர்வாகம் அவரது முன்னோடிகளை விட மோசமாக இருந்தது. இரகுநாத ராவ் மற்றும் அவரது குடும்பத்தினரின் இயக்கங்கள் மற்றும் திட்டங்களைக் காண நியமிக்கப்பட்டவர் இவர்தான், அவர் தனது நோக்கத்திற்கு ஏற்றவாறு நானாவுக்கு அறிக்கை அளித்தார். அவர் தனக்குக் கீழ் ஒரு நேர்மையற்ற உளவாளிகளைக் கொண்டிருந்தார். அவர்கள் மக்களைத் துன்புறுத்துவதற்கு ஏராளமான வழிகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக காசிராம் என்ற சொல் ஒடுக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கு ஒரு நிரந்தரப் பொருளாக மாறியுள்ளது. காசிராமின் ஆட்சி கொடூரமானதாகவும், கொடுங்கோன்மைக்குரியதாகவும் இருந்தது. [9] இருப்பினும், நாடகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி நானா பட்நாவிசின் சித்தரிப்புக்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. [5] துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு நானா பட்நாவிசு அளித்த முக்கிய பங்களிப்பை இந்த சர்ச்சை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

திரைப்படத் தழுவல்தொகு

இந்த நாடகம் காசிராம் கொத்வால் (1976) என்ற மராத்தி திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இது நடிகர் ஓம் பூரியின் முதல் படமாகும். முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் பெலவாடி மற்றும் மோகன் அகாஷே நடித்தனர். இப்படத்தின் திரைக்கதையை விஜய் டெண்டுல்கர் எழுதியுள்ளார். திரைப்பட தொழில்நுட்பக் கல்லூரியின் 16 பட்டதாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த படத்தை கே.அரிகரன் மற்றும் மணி கவுல் இயக்கியுள்ளனர். [10]

மேலும் படிக்கதொகு

 • Ghashiram Kotwal, Vijay Tendulkar, Sangam Books, 1984. ISBN 81-7046-210-X.
 • Collected Plays in Translation: Kamala, Silence! the Court Is in Session, Sakharam Binder, the Vultures, Encounter in Umbugland, Ghashiram Kotwal, a Friend's Story, Kanyadaan. New Delhi, 2003, Oxford University Press. ISBN 0-19-566209-1.
 • Vijay Tendulkar's Ghashiram Kotwal: a Reader's Companion. M. Sarat Babu, Asia Book Club, 2003. ISBN 81-7851-008-1.
 • Vijay Tendulkar's Ghashiram Kotwal: Critical Perspectives. Vinod Bala Sharma and M. Sarat Babu. 2005, Prestige Books, New Delhi. ISBN 81-7851-002-2.
 • P. Dhanavel, "Subversion of Values in Tendulkar's Ghashiram Kotwal," Voice, Vol.3, No.3, (June 2005),pp. 84–92.

குறிப்புகள்தொகு

 1. "Indo-American Arts Council, Inc". Iaac.us. 2012-02-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-06 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. "Sorry". Indianexpress.com. 2012-11-06 அன்று பார்க்கப்பட்டது.
 3. "पीडीए अर्थात Progressive Dramatic Association बद्दल काही …". 2010-06-06.
 4. https://web.archive.org/web/20071211192140/http://www.4to40.com/art/print.asp?id=54. December 11, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. December 15, 2007 அன்று பார்க்கப்பட்டது. Missing or empty |title= (உதவி)
 5. 5.0 5.1 5.2 "Reign of tyranny". www.telegraphindia.com (in ஆங்கிலம்). 2019-08-12 அன்று பார்க்கப்பட்டது.
 6. 'घाशीराम' आनंदपर्व by Anand Modak
 7. "'My writing has always been honest', Interview with Vijay Tendulkar". The Frontline. 2012-02-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-06 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Journal : The Historical Ghashiram Kotwal". 2012-04-22.
 9. Contemporary Indian dramatists Chapter 6, Ghasiram Kotwal, a study in the. 2007. https://books.google.com/?id=kkq_zBYfeVUC&pg=PA50&dq=pune++Kotwal+dakshina#v=onepage&q&f=false. 
 10. "My writing has always been honest". frontline.thehindu.com. 2019-01-08 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிராம்_கொத்தவால்&oldid=3239124" இருந்து மீள்விக்கப்பட்டது