காசுமீரி சிவப்பு மிளகாய்

அடர் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும், வண்ணம் மற்றும் சுவை சேர்க்கும் திறன் கொண்ட மிளகாய் வகை

 

காசுமீரி சிவப்பு மிளகாய்
இனம்காப்சிகம் அன்னுவம்
பயிரிடும்வகைகள்Kashmiri Mirch, Kashmiri Laal Mirch
வார்ப்புரு:Infobox pepper
உலர்ந்த சிவப்பு காஷ்மீரி மிளகாய்

காசுமீர சிவப்பு மிளகாய் (Kashmiri red chilli) அல்லது காசுமீரி லால் மிர்ச் என்பது உணவுக்கு அடர் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும், வண்ணம் மற்றும் சுவை சேர்க்கும் திறன் கொண்ட மிளகாய் வகையாகும். மேலும் உணவை மிகவும் காரமானதாக மாற்ற அனுமதிக்காது.[1] காசுமிரி சிவப்பு மிளகாய் உற்பத்தியிலும் பயன்பாட்டிலும் இந்தியா மிகப்பெரிய சந்தையினைக் கொண்டுள்ளது.[2] எம்டிஎச், எவரெசுட் மசாலா, சக்தி மசாலா மற்றும் பாட்சா மசாலா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தூள் வடிவில் இம்மிளகாய் வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.[3] இந்தியாவில் உள்ள பெரும்பாலான உணவகத் தொழிலில் காசுமீர மிளகாய் அல்லது மிளாகாய் தூள் பயன்படுத்துவதாக விர் சங்வி தெரிவிக்கின்றார்.[4] சமையல்காரர்கள் கோன் பெரி-பெரி மசாலா உணவுகளுக்கு மாற்றாக காசுமீர மிளகாயைப் பயன்படுத்துகின்றனர்.[4]

காசுமீர மிளகாய்க்கு அதிக தேவை இருப்பதால், பைதாகி மிளகாய் போன்ற மாற்றீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.[3] காசுமீர மிளகாயின் உள்ளூர் வகையை ஆதரிப்பதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும் சம்மு காசுமீரில் அரசாங்க முன்முயற்சிகளும் ஊக்குவிப்புகளும் செயலில் உள்ளன.[5]

சிறப்பியல்புகள்

தொகு

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தின் கூற்றுப்படி, இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ், காசுமீர மிளகாய் முக்கியமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் விளைகிறது. ஆனால் தற்பொழுது கோவா போன்ற இடங்களிலும் பயிரிடப்படுகிறது.[4][6] இவை குளிர்காலத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. அமெரிக்கன் நறுமண வணிக சங்கம் இதன் வண்ண மதிப்பினை 54.10 என மதிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பு மிளகாயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நிறத்தின் அளவைக் கண்டறிய உதவுகிறது.[6] கேப்சைசின் மதிப்பு 0.325% ஆகும்.[6] இவை மென்மையானவை, சுகோவில் அளவுகோலில் 1000 - 2000 எசுஎச்யு வரை இருக்கும்.[7] காசுமீர சிவப்பு மிளகாயில் பல்வேறு குணங்கள் உள்ளன. 1999-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, கேப்சைசின் மதிப்பு 0.126% எனக் கண்டறியப்பட்டது.[8]

இந்தியாவின் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் எவரெஸ்ட் காஷ்மீரி லால் (எவரெஸ்ட் மசாலாப் பொருட்கள்) சுகோவில் அளவுகோலில் 48,000-ல் வைக்கிறது. அதே நேரத்தில் கோல்டன் ஹார்வெஸ்ட் காஷ்மீரி மிர்ச் பவுடர் (கோல்டன் ஹார்வெஸ்ட்) 60,000-ஐ சுகோவில் அளவுகோலில் கொண்டுள்ளது.[9] இந்த சுகோவில் அளவுகோல் நிலை சந்தையில் உள்ள மற்ற வணிகத் தயாரிப்புகளைப் போலவே உள்ளது.[9] இதனுடன் கலப்படம் செய்யப்படும் பொருட்களில் செங்கல் தூளும் ஒன்றாகும்.[10]

பயன்பாடு

தொகு

காசுமீர மிளகாய் தந்தூரி சிக்கன் போன்ற பல்வேறு அசைவ உணவுகளிலும், டைகர் இறால் போன்ற சிற்றுண்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஊறுகாய் மற்றும் சட்னி தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பாவ் பாச்சி, மிசல் பாவ் போன்ற உணவுகளில் நிறத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Kapoor, Sanjeev. "Kashmiri Red Chillies". Sanjeev Kapoor. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  2. "Kashmiri Mirch". NDTV Food. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  3. 3.0 3.1 Christo, Margaret (2015-02-24). "What is Kashmiri Chilli Powder?". Margaret's Home (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  4. 4.0 4.1 4.2 Sanghvi, Vir (2021-07-11). "Rude Food by Vir Sanghvi: Red hot chilli peppers". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  5. "Govt committed to reviving local variety of Kashmiri Lal Mirchi: Director Agriculture". Kashmir Reader. 2021-07-16. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. 6.0 6.1 6.2 "Chilli". www.indianspices.com. Spices Board India, Ministry of Commerce and Industry, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  7. "What is Kashmiri Chilli? (Essential Ingredient in the South Asian Kitchen)". LinsFood | by Azlin Bloor (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2021-01-03. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  8. Krishnamurthy, R; Malve, M K; Shinde, B M (August 1999). "Evaluation of Capsaicin Content in Red and Green Chillis". Journal of Scientific and Industrial Research 58: 629-630. http://nopr.niscair.res.in/bitstream/123456789/17859/1/JSIR%2058%288%29%20629-630.pdf. 
  9. 9.0 9.1 How hot is Chilli Powder? Consumer Education and Research Centre. Environment Information System, Ministry of Environment, Forest and Climate Change, Government of India. Retrieved on 26 July 2021.
  10. Desai, Nilam; Patel, Dharmendra (January 2021). "Identification of Adulteration in Household Chilli Powder from Its Images using Logistic Regression Technique". Reliability: Theory & Applications 16 (RT&A, Special Issue No 1 (60)): 384-391. http://www.gnedenko.net/Journal/2021/SI_012021/RTA_SI_1_2021-38_384-391.pdf. "[...] to identify adulteration in Kashmiri chilli powder by its images. Here, we are considering adulteration as a brick powder mixed with chilli powder.".