காசுமீர் அக்கரோட்டு மரச்செதுக்கல்
காசுமீர் அக்கரோட்டு மரச்செதுக்கல் (Kashmir Walnut Wood Carving) என்பது காசுமீர் பள்ளத்தாக்கில் அதிகம் வளரும் அக்கரோட்டு மரத்தில் கைகளால் செய்யப்படும் மரச்செதுக்கல் சிற்ப வேலைப்பாடு ஆகும். பாரம்பரியமாக நாகஸ் என அறியப்படும் மரச்செதுக்கல் சிற்ப வேலைப்பாட்டுக் கைவினைஞர்கள் இதில் ஈடுபடுகின்றனர். அக்கரோட்டு மரம் அதிகம் பாரம் அற்ற எடையையும், இதன் இழையமைப்புக் கட்டமைப்பு கயிறு போன்ற வடிவமைப்பையும், சிறப்பு வண்ண முறைகளுடன் கூடிய அமைப்பு முறையையும் கொண்டுள்ளது.[1] இந்த மரச்செதுக்கல் உற்பத்தியானது, சிறியது முதற் கொண்டு பெரியது வரை ஆபரணப் பெட்டிகள், மேசைகள், தட்டங்கள் எனப் பல வகைகளிலும் காணப்படுகின்றது. சிறிநகர் பகுதியில் தங்கி வாழ்வதற்கான படகுவீடுகளின் அலங்கார நேர்த்தி முறை அவ்வடிவமைப்புகளின் உயிர்ப்பூட்டுதலை வழங்குகின்றது.[2]
காசுமீர் அக்கரோட்டு மரச்செதுக்கல் | |
---|---|
அக்கரோட்டு மரச்செதுக்கல் சிற்ப வேலைப்பாடு | |
குறிப்பு | அக்கரோட்டு மரச்செதுக்கல், காசுமீர் |
வகை | கைத்தொழில் |
இடம் | சம்மு காசுமீர் |
நாடு | இந்தியா |
பதிவுசெய்யப்பட்டது | 2007–2008 |
பொருள் | மரம் |
இந்த உற்பத்தி, அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தின் புவியியல் சார்ந்த குறியீடு பாதுகாப்பின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் புவியியல் சார்ந்த குறியீடு சட்டம் 1999 இல் "காசுமீர் அக்கரோட்டு மரச்செதுக்கல்" (Kashmir Walnut Wood Carving) என 182 வது பொருளாக 2011 - 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ளது.[3][4]
வரலாறு
தொகுபாரம்பரிய ஈரான் மரச்செதுக்கல் வேலைப்பாடு பாரசீகர்களால் காசுமீர் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, காசுமீர் அக்கரோட்டு மரச்செதுக்கல் என தற்போது வழங்கப்படுகிறது. பாரசீக மரச்செதுக்கல் கைவினைஞர்கள் ஆர்மீனியா அரசன் காலம் தொட்டு மரச்செதுக்கலில் ஈடுபட்டுள்ளனர். இந்திய நூக்க மரங்களுக்கு (Dalbergia sissoo) அவர்கள் நாட்டிலும், பலுச்சிசுத்தானத்திலும் தட்டுப்பாடு நிலவியதும், பாரசீகத்தைவிட்டுப் புலம்பெயர்ந்தனர்.இந்திய நூக்க மரங்கள் மரக்கரி உற்பத்தி போன்ற பாரிய தேவைகளுக்கு அக்காலத்தில் பயன்பட்டதால் அதற்கு தட்டுப்பாடு நிலவியது. காசுமீருக்கு புலம்பெயர்ந்த அக்கைவினைஞர்கள் இந்திய நூக்க மரத்திற்குப் பதிலாக அக்கரோட்டு மரங்களை பயன்படுத்தினர். 1817 இல் முகலாய ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியதும், சில மரச்செதுக்கல் கைவினைஞர்களின் குடும்பங்கள் பள்ளத்தாக்கினை விட்டு வேறு இடங்களில் வாழத் தொடங்கனர். மற்றவர்கள் பாக்கித்தானின் முல்தான் என்ற இடத்திற்கும், வேறு சிலர் சகாரன்பூர் மற்றும் வேறு சில இடங்களான ஆக்ரா போன்ற இடங்களுக்கும் குடியேறினர்.[5]
அக்கரோட்டு மரத்தில் மரச்செதுக்கல் செய்வதில் சிக்கலை எதிர் கொண்டவர்கள் நேரடியாக சகாரன்பூர் பகுதிக்குச் சென்றனர் எனவும் கூறப்படுகிறது.[5]
ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜின் புது தில்லிப் பேரவையின் வாயிலிலுள்ள முகப்பு காசுமீர் அக்கரோட்டு மரச்செதுக்கல் வேலைப்பாட்டினால் அலங்கரிக்கப்பட்டது. மகாராசா பிரதாப் சிங் மரச்செதுக்கல் வேலைப்பாட்டினை முக்கியமானவர்களுக்கும் அரச குடுப்பத்தினருக்கும் அறிமுகப்படுத்துவதில் பங்காற்றினார்.[6]
உற்பத்தி
தொகுஅக்கரோட்டு மரங்கள் கிடைப்பது கடினமானதும் ஆகும். இதன் நெருங்கிய இழையமைப்பு, குறிப்பாக நூலிழையமைப்பு நன்கு விபரமான வேலைக்கும், மேற்பரப்பை இலகுவாக பளபளப்பாக்குவதில் ஏற்றதுமாகும்.[7]
அக்கரோட்டு மரத்தின் மூன்று பகுதிகள் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை வேர், அடிமரம் (தண்டு), கிளை என்பனவாகும். வேரிலிருந்து பெறப்படும் பகுதி மூலம் விலை கூடிய பொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. கிளைகள் மங்கலான நிறத்தைக் கொண்டு காணப்படும். இவற்றின் மூலம் சிறு பெட்டிகள், பெரிய அணிகலகலன்களுக்கான பெட்டிகள் செய்யப்படுகின்றன. மரத்தின் தண்டுப் பகுதியை நிறம் கூடியதாகவும் பலமுள்ளதாகவும் இருக்கும். அதைக் கொண்டு ஒளிப்பட சட்டங்கள், தானிய விதைக் கிண்ணம், பழக்கலவைக் கிண்ணம், தட்டுகள், மரத்தளபாடங்கள் போன்றன செய்யப்படுகின்றன.[8]
நான்கு விதமான நடைமுறைகள் மரச்செதுக்கலில் காணப்படுகின்றன. அந்த நான்கும் உயர்ந்தவை, செதுக்கப்பட்டவை, உள் வெட்டப்பட்டவை, சமமானவை என்பவை ஆகும். உள் வெட்டப்பட்ட முறைக்கு அதிக நுட்பம் தேவையாயினும், செதுக்கப்பட்டவை அதிக பிரபல்யம் பெற்றவை. சமமான மேற்பரப்பு தற்கால பொருட்களான தட்டுகள், மேசைகள், கிண்ணங்கள், கோப்பைகள் போன்றவற்றில் விரும்பப்படுகின்றன. காசுமீர் மரச்செதுக்கல் கைவினைஞர்கள் இயற்கையான வடிவங்களை விரும்புகின்றனர். இதனால் பொதுவான உரோசா, தாமரை, ஐரிஸ் போன்ற பூக்களை அவர்களில் மரச்செதுக்களில் காணலாம். கிளைகளில் பழங்களும் பொதுவான வடிவ முறையாகக் காணபப்டுகின்றன.[9]
உசாத்துணை
தொகு- ↑ Mir, Farooq Ahmad; Ain, Farutal (மே 2010). "Legal Protection of Geographical Indications in Jammu and Kashmir─A Case Study of Kashmiri Handicrafts" (pdf). Council of Scientific and Indusrial Research. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2016.
- ↑ Singh 2009, ப. 1160.
- ↑ "State Wise Registration Details Of G.I Applications" (PDF). Controller General of Patents Designs and Trademarks. Archived from the original (pdf) on 27 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Geographical Indications Journal No. 58" (PDF). Government of India. 9 May 2014. Archived from the original (pdf) on 2 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 5.0 5.1 Jain 2000, ப. 43.
- ↑ Saraf 1987, ப. 109.
- ↑ Saraf 1987, ப. 107.
- ↑ Qazi 2005, ப. 107.
- ↑ Saraf 1987, ப. 108.
துணை நூல்
தொகு- Jain, Dr. Madhu (2000). Wood Handicraft: A Study of Its Origin and Development in Saharanpur. Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-103-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Saraf, D. N. (1 சனவரி 1987). Arts and Crafts, Jammu and Kashmir: Land, People, Culture. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-204-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Singh, Sarina (2009). India. Ediz. Inglese. Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74220-347-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Qazi, S.A. (1 சனவரி 2005). Systematic Geography of Jammu and Kashmir. APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-786-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)