காஞ்சிபுரம் கடகேசுவரர் கோயில்

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

காஞ்சிபுரம் கடகேசுவரர் கோயில் (கடகேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். காமாட்சி அம்மையார் இறைவனை வழிபட்டு கடகம் தரித்துக்கொண்ட தலமாகும்.[1] மேலும், இவ்விறைவரை அம்பிகை வழிபட்டதாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளன.[2]

காஞ்சிபுரம் கடகேசம்.
காஞ்சிபுரம் கடகேசம். is located in தமிழ் நாடு
காஞ்சிபுரம் கடகேசம்.
காஞ்சிபுரம் கடகேசம்.
புவியியல் ஆள்கூற்று:12°50′37″N 79°42′15″E / 12.843530°N 79.704280°E / 12.843530; 79.704280
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் கடகேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கடகேஸ்வரர்.
தீர்த்தம்:கடக தீர்த்தம் (கம்மாளத் தெரு தீர்த்தம்)

தல வரலாறு

தொகு

கங்கணேசத்தில் பொன்னாலான காப்புநாணை (கங்கணம்) அணிந்து கொண்ட அம்பிகை, மற்றுமோர் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து வழிபட்டு, கடகம் அணிந்து கொண்டாள். அதுவே கடகேசம் எனப்பட்டதாக இத்தல வரலாறு உள்ளது.[3]

தல பதிகம்

தொகு
  • பாடல்: (1) (கடகேச்சரம்)
நவமணிக் கடகம் பூணும் ஞாங்கருங் கடகே சானச்
சிவபரஞ் சுடரைப் பூசை செய்துதன் கரத்திற் பூண்டாள்
அவிர்மணி நகையாள் போற்றும் அக்குறி இரண்டுங் கண்டோர்
தவலரு மலநோய் மாற்றி முத்தியில் தவிர்ந்து வாழ்வார்.
  • பொழிப்புரை: (1)
நவமணிகள் பதித்த கடகத்தை அணிந்த அப்பொழுதும் கடகேசப்
பிரானாரைத் தாபித்துப் பூசை செய்து அதனைக் கரத்திற் றரித்தனர்.
விளங்கும் முத்தனைய முறுவலார் போற்றிய கங்கணேசர் கடகேசராகிய
சிவிலிங்கப் பிரானாரைக் கண்டு வணங்கினோர் கெடலரிய ஆணவமல
நோயைக் கெடுத்து முத்தியில் நிலைபெற்று வாழ்வார்.
  • பாடல்: (2)
அன்னணம் அருச்சித் தேத்தி ஆளுடை எம்பி ராட்டி
உன்னுவோர் பிறவி மாய்க்கும் உள்நகர் வரைப்பின் முற்ற
மன்னிய வளங்க ளெல்லாம் மனங்களி பயப்ப நோக்கிப்
பன்னரும் பெருமை சான்ற பரவெளிப் பிலத்தை யுற்றாள்.
  • பொழிப்புரை: (2)
அவ்வகை அருச்சித்துப் போற்றி எம்மை அடிமையாக உடைய
பிராட்டியார் நினைப்பவர்தம் பிறவியைப் போக்கும் நகரில் நிலை பெற்ற
செல்வங்கள் யாவற்றையும் மனமகிழும்படி முற்றவும் கண்டு விவரித்
துரைத்தற்கும் அடங்காத பெருமை அமைந்த பரவெளியாகிய பிலத்தை
அண்மினர்.[4]

அமைவிடம்

தொகு

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் சின்னகம்மாளத் தெருவில் கங்கணேசம் அருகில் கடகேசம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி இறவாத்தானத்திற்கு செல்லும் சாலையில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5]

போக்குவரத்து

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "palsuvai.net | 33. ஸ்ரீ கடகேஸ்வரர் காஞ்சிபுர சிவலிங்கங்கள்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-04-13.
  2. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 61. தழுவக்குைழந்த படலம் (2023- 2449) | 2155 கடேகச்சரம்
  3. "shaivam.org | (கடகேசம்) கடகேஸ்வரர்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-04-13.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | தழுவக் குழைந்த படலம் | கடகேச்சரம் | பாடல்கள்: 133 / 134 | பக்கம்: 627
  5. dinaithal.com | கடகேசம் கடகேஸ்வரர் கோயில்
  6. tripadvisor.in 15 temples in Kanchipuram

புற இணைப்புகள்

தொகு