காடர் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 2,265 பேர்களால் பேசப்படுகிறது. இது காடா, காடிர் என்றும் அழைக்கப்படும். இம்மொழி மலையாளத்துக்கு நெருக்கமானது என்றும், தமிழுக்கு நெருங்கியது என்றும், மலையாளக் கூறுகளுடன் கூடிய தமிழின் வேறுபாடு எனவும் பலரும் பலவாறாகக் கூறியுள்ளனர். இம்மொழியைப் பேசும் மக்களிடையே தங்கள் முதல் மொழியிலான கல்வியறிவு வீதம் 1% மட்டுமே.

காடர்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கேரளாவின் எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்கள்; தமிழ்நாடு, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்கள்; ஆந்திரப் பிரதேசம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (2,265 காட்டடப்பட்டது: 1981)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kej

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடர்_மொழி&oldid=2077201" இலிருந்து மீள்விக்கப்பட்டது