காண்டெலேரியா பசிலிக்கா

காண்டெலேரியா அன்னையின் அரசத் திருத்தலப் பேராலயம் (எசுப்பானியம்: Basílica y Real Santuario Mariano de Nuestra Señora de Candelaria; எசுப்பானியம்: Basílica de Nuestra Señora de Candelaria) மிக முக்கிய கத்தோலிக்க திருச்சபையின் பேராலயம் ஆகும். கேனரி தீவுகளில் (ஸ்பெயின்) மரியாவின் பெயரில் கட்டப்பட்ட முதல் ஆலயம் இதுவாகும். இது காண்டெலேரியா நகரின் டெனெரீஃப் தீவில் அமைந்துள்ளது. காண்டெலேரியா அன்னை, கேனரி தீவுகளின் பாதுகாவலர் ஆவார்.[1] இவ்வாலயத்தினை கேனரி தீவுகளின் அரசு கலாச்சார முக்கியத்துவமிக்க இடமாக பகுக்கின்றது.

காண்டெலேரியா அன்னையின் அரசத் திருத்தலப் பேராலயம்
காண்டெலேரியா அன்னையின் பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்காண்டெலேரியா, எசுப்பானியா.
புவியியல் ஆள்கூறுகள்28°21′05″N 16°22′11″W / 28.35139°N 16.36972°W / 28.35139; -16.36972
சமயம்கத்தோலிக்க திருச்சபை
மாகாணம்செவீயா உயர்மறைமாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1959
நிலைஇளம் பேராலயம், மரியாவுக்கன அரசத்திருத்தலம்
இணையத்
தளம்
basilicadecandelaria.wordpress.com
காண்டெலேரியா அன்னை, கேனரி தீவுகளின் பாதுகாவலர்

மரபுப்படி,1390இல் கன்னி மரியாவின் சிலை இரண்டு பழங்குடி இன இடையர்களால் தங்களின் கிடாயைய் மேய்சலுக்கு இட்டுசெல்லும் போது கன்டுபிடிக்கப்பட்டது.

24 ஜனவரி 2011இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இவ்வாலயத்தினை இளம்பேராலயமாக உயர்த்தினார். இவ்வாலயத்தின் விழா நாள் 2 பெப்ரவரி ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Título y dignidad de Basílica para la iglesia de la Patrona de Canarias
  2. Título y dignidad de Basílica para la iglesia de la Patrona de Canarias

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காண்டெலேரியா_பசிலிக்கா&oldid=3239364" இலிருந்து மீள்விக்கப்பட்டது