காந்திகிரி

புதுக் கொள்கை

காந்திகிரி (Gandhigiri) என்பது இந்தியாவில் ஒரு புதுக் கொள்கைகளாகும். காந்தியத்தின் கோட்பாடுகளை (சத்தியாக்கிரகம், அகிம்சை சத்தியத்தை உள்ளடக்கிய மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் கருத்துக்கள்) சமகாலத்தில் வெளிப்படுத்த பயன்படுகிறது. 2006ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான லாகே ரஹோ முன்னா பாய் என்ற படத்தின் மூலம் இந்த வார்த்தை பிரபலமானது.[1] [2]

காந்தி சத்தியாகிரகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாக உப்பு சத்தியாகிரகத்தை வழிநடத்துகிறார்.

மராத்தி, இந்தி, தமிழ் உட்பட இந்தியாவில் பல்வேறு மொழிகளில் "காந்திகிரி" என்பது மகாத்மா காந்தியின் கொள்கைகளின் நடைமுறையைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.[3] இது காந்தியத்தின் பேச்சுவழக்கு வடிவமாகும். காந்தியம் என்பது மகாத்மா காந்தியின் தத்துவங்களை சுருக்கமாகக் கூற முயற்சிக்கும் ஒரு சொல். காந்தியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் சத்தியமும் சத்தியாகிரகமும் அடங்கும்: சத்யா: "உண்மை", ஆக்ரஹ: "சத்தியத்திலிருந்து அல்லது அகிம்சையிலிருந்து பிறந்த சக்தி" என்பது பொருள்.[4]

சொல் பிரபலமாதல்

தொகு

2006ஆம் ஆண்டில் வினோத் சோப்ரா தயாரிப்பில் ராஜ்குமார் கிரானி இயக்கத்தில் வெளிவந்த இசை நகைச்சுவைத் திரைப்படமான லாகே ரஹோ முன்னா பாய் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் சஞ்சய் தத் மும்பையின் உள்ளூர் பையன் முன்னா பாயாக நடிக்கிறார். அவர் மகாத்மா காந்தியின் ஆத்மாவைப் பார்க்கத் தொடங்குகிறார். காந்தியின் உருவத்துடனான தொடர்புகளின் மூலம், முன்னா பாய் சாதாரண மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவதற்காக காந்திகிரி என்று அழைப்பதை நடைமுறைப்படுத்தத் தொடங்குகிறார்.

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்திகிரி&oldid=3335711" இலிருந்து மீள்விக்கப்பட்டது