காந்தி சாகர் காப்பகம்
காந்தி சாகர் காப்பகம் (Gandhi Sagar Sanctuary) என்பது இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மண்டோசோர் மற்றும் நீமச் மாவட்டங்களின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு காப்பகமாகும். இது இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தை ஒட்டியுள்ள 368.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இது 1974-இல் அறிவிக்கப்பட்டு மேலும் சில பகுதிகள் 1983-இல் சேர்க்கப்பட்டது. சம்பல் ஆறு சரணாலயத்தின் வழியாகச் சென்று இதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. மேற்குப் பகுதி நீமச் மாவட்டத்திலும், கிழக்குப் பகுதி மண்டோசோர் மாவட்டத்திலும் உள்ளன. இது கத்தியார்-கிர் உலர் இலையுதிர் காடுகளின் சுற்றுச்சூழல் பகுதியில் உள்ளது.[2]
காந்தி சாகர் காப்பகம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
சம்பல் ஆற்றில் காந்தி சாகர் காப்பகம் | |
அமைவிடம் | மண்டோசோர் & நீமச் மாவட்டங்கள் மத்தியப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 24°34′59″N 75°42′43″E / 24.583°N 75.712°E[1] |
பரப்பளவு | 368.62 km2 (142.32 sq mi) |
நிறுவப்பட்டது | 1974 |
தாவரங்களும் விலங்கினங்களும்
தொகுகாந்தி சாகர் காப்பகத்தினை ஆண்டு முழுவதும் பார்வையாளர்கள் காணலாம். காடுகள் வறண்ட, கலப்பு மற்றும் இலையுதிர் காடுகளாக இருப்பதால், காந்தி சாகர் அணை நீரில் மூழ்கியுள்ள தட்டையான புல்வெளிகள், பல்வேறு வகையான வனவிலங்குகளைக் காண ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தச் சரணாலயத்தில் காணப்படும் முக்கிய மர இனங்கள் கைர் (அகேசியா கேட்சு) சாலாய், கர்தாய், தவ்தா, டெண்டு, புரசு போன்றவை ஆகும்.
காந்தி சாகர் காப்பகத்தில் வசிக்கும் முக்கிய விலங்கு இனங்கள் மான் ஆகும். இங்கு சின்காரா அல்லது இந்தியச் சிறுமான், நீலான் மற்றும் கடமான் ஆகியவை மிகவும் எளிதில் காணப்படுகின்றன. மேலும் இந்தியச் சிறுத்தை, தென்வெளிச் சாம்பல் குறங்கு, இந்தியச் செந்நாய், மயில், நீர்நாய் மற்றும் சதுப்புநில முதலை ஆகியவையும் உள்ளன.
தொல்லியல் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்
தொகுஇக்காப்பகப் பகுதியில் வரலாற்று, தொல்லியல் மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. இவை சௌரசிகர், சதுர்பஜ்நாத் கோயில், பட்காஜி பாறை ஓவியங்கள், நர்சிங்ஜார், இங்லாஜ்கர் கோட்டை, தட்சகேசுவர் கோவில் போன்றவை ஆகும்.
- விஷ்ணுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சதுர்பூஜ்நாத் கோவில் காந்தி சாகர் அணையிலிருந்து சுமார் 8 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- இங்லாஜ்கர் அல்லது இங்லாஜ் கோட்டை மத்தியப் பிரதேசத்தின் மண்டோசோர் மாவட்டத்தின் பான்புரா வட்டத்தில் நவாலி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு பண்டைய கோட்டை ஆகும்.
- தக்சகேசுவர் கோவில் அல்லது தகாஜி மண்டோசோர் மாவட்டத்தில் உள்ள மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.
- பான்புரா அருங்காட்சியகம்: பான்புராவில் காந்தி சாகர் அணைக்கட்டுப் பகுதியிலிருந்து சுமார் 30 கி. மீ. (18.6 மைல்) தொலைவிலும், வடகிழக்கு திசையில் மண்டோசோரிலிருந்து 78.9 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மண்டோசோரின் பிரபலமான கலைகளைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம் இதுவாகும்.
- தர்மராஜாஸ்வர் குடைவரைக் கோயில் மண்டோசோரில் 4-5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய பௌத்த மற்றும் இந்து குகைக் கோவில் தளமாகும்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Gandhi Sagar Sanctuary". protectedplanet.net. Archived from the original on 12 December 2013. பார்க்கப்பட்ட நாள் 3 June 2012.
- ↑ "Khathiar-Gir dry deciduous forests". Terrestrial Ecoregions. World Wildlife Fund. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.