கானாபுரம் ஹவேலி
கானாபுரம் ஹவேலி (Khanapuram Haveli), தென்னிந்தியாவில் உள்ள தெலங்காணா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது கம்மம் நகரத்தின் புறநகரில் உள்ளது. இது கம்மம் நகரத்திலிருந்து 8.0 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு கிழக்கே 203.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
கானாபுரம் ஹவேலி | |
---|---|
ஆள்கூறுகள்: 17°16′19″N 80°10′47″E / 17.271908°N 80.179831°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | கம்மம் |
புறநகர் | கம்மம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.70 km2 (4.90 sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 507 318 |
வாகனப் பதிவு | TS-37 |
இணையதளம் | telangana |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 14,555 வீடுகள் கொண்ட கானாபுரம் ஹவேலி நகரத்தின் மக்கள் தொகை 53,442 ஆகும். அதில் ஆண்கள் 26,588 மற்றும் பெண்கள் 26,854 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,541 மற்றும் 2,194 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 90.14%, இசுலாமியர் 7.85%, பௌத்தர்கள் , சமணர்கள் , சீக்கியர்கள் , கிறித்தவர்கள் 1.51% மற்றும் பிறர் 0.50% ஆகவுள்ளனர். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Census Handbook – Khammam" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 28, 380. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "Khanapuram Haveli Population, Religion, Caste, Working Data Khammam, Andhra Pradesh - Census 2011". Archived from the original on 2022-10-03. பார்க்கப்பட்ட நாள் 2022-10-15.