காமாத்திபுரம்

காமாத்திபுரம் (Kamathipura or Kamthipura)[1] இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலாத்தின் தலைநகரான மும்பை பெருநகரத்தில் பாலியல் பெண் தொழிலாளர்கள் கொண்ட பகுதியாகும். மும்பையின் ஏழு தீவுகளை ஒன்றாக இணைப்பதற்கு முன்னர் 1795ஆம் ஆண்டில் காமாத்திபுரம் பகுதி நிறுவப்பட்டது. துவக்கத்தில் இப்பகுதியில் கட்டுமானத் தொழிலாளர்கள் அதிகம் இருந்ததால் இதற்கு லால் பஜார் (சிவப்பு கடைவீதி) எனப்பெயரிடப்பட்டது. பின்னர் இப்பகுதியில் பாலியல் தொழிலாளர்கள் அதிகம் குடியேறியதால் காமாத்திபுரா பெயரிடப்பட்டது.

காமாத்திபுரா
காமாத்திபுரா is located in Mumbai
காமாத்திபுரா
காமாத்திபுரா
மும்பை நகரத்தில் காமாத்திபுராவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°58′N 72°49′E / 18.96°N 72.82°E / 18.96; 72.82
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
பெருநகரம்மும்பை
நிறுவப்பட்ட ஆண்டு1795
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
ஏற்றம்
4 m (13 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400008
வாகனப் பதிவுMH-01

1990களின் இறுதியில் காமாத்திபுரா பெண்களுக்கு எயிட்சு நோய் தொற்றியதால், இப்பகுதிவாழ் பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு வேறு வேலை வாய்ப்புகள் வழங்கவும்; வேறிடங்களுக்கு குடியேற்றவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.[2]

1992ஆம் ஆண்டில் பெருநகரமும்பை மாநகராட்சி காமாத்திபுரா பகுதியில் 45,000 பாலியல் தொழிலாளர்கள் இருந்ததாக கணக்கெடுத்தனர். 2009ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கையை 1,600 ஆகவும்[3]; 2018ஆம் ஆண்டில் 5,00 ஆகவும் மும்பை மாநகராட்சி குறைத்தது.[4][4]

வரலாறு

தொகு
 
மும்பை மாநகரத்தில் காமாத்திபுரா பகுதியின் வரைபடம், ஆண்டு 1924
 
17ஆம் நூற்றாண்டில் இருந்த மும்பையின் ஏழு தீவுகள்

17ஆம் நூற்றாண்டின் இறுதியில் மும்பை நகர வளர்ச்சிக்காக மும்பையின் ஏழு தீவுகள் ஒன்றாக இணைப்பதற்கு கட்டுமானப் பணிகள் தொடங்கியது. 1795ஆம் ஆண்டின் துவக்கத்தில் கட்டுமானத்தில் வேலை செய்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் காமாத்திபுரா (காமாத்தி என்பதற்கு மராத்தி மொழியில் தொழிலாளர் எனபபொருளாகும்) பகுதியில் குடியேறினர்.

இதன் வடக்கில் பெல்லாசிஸ், தெற்கில் தெற்கு மும்பையின் கோன்தேவி பகுதி இருந்தது.[5][6] பின்னர் காமாத்திபுரா பகுதியின் கர்செட்ஜி சுக்லாஜி தெருவில் ஐரோப்பிய பாலியல் தொழிலாளர்கள் குடியேறினர். 1916ல் காமாத்திபுரா பகுதியில் பால்வினை நோய்களுக்கான முதல் மருத்துவமனை கட்டப்பட்டது.[3]

இந்திய விடுதலைக்குப் பின்னர் இப்பகுதியில் நேபாள நாட்டு இளம் பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக குடியேறினர்.[7] இப்பகுதியில் பாலியல் தொழில் வளர்ச்சியுற்ற காரணத்தினால் 3,000 கட்டிடங்கள் பாலியல் தொழிலுக்கு நிறுவப்பட்டது.[8] 2005 மகாராட்டிரா மாநில நகரங்களில் இரவு கேளிக்கைக்கான நடன & இசை விடுதிகளை மாநில அரசு தடைசெய்தது. இதனால் இரவு நடன மங்கைகள் வேறு வேலை இன்றி, பாலியல் தொழில் ஈடுபட்டனர். 2005ஆம் ஆண்டின் காவல் துறை அறிக்கையின்படி, மும்பை மாநகரத்தில் 1,00,000 பாலியல் பெண் தொழிலாளர்கள் இருந்தனர்.[9]

தற்போது காமாத்திபுரம் பகுதியில் 200 பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.[8]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

14 தெருக்கள் கொண்ட காமாத்திபுரா பகுதியில் வாழும் பெரும்பாலோனர், பிற மாநிலத் தொழிலாளர்கள் ஆவார்.[10] 2007ஆம் ஆண்டில் காமாத்திபுரா பகுதியில் 55,936 வாக்காளர்கள் கொண்டிருந்தனர்.[8]

காமாத்திபுரா படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. name=toi2009
  2. "Beyond brothels: How real estate and online sites are changing red light areas". 29 April 2017.
  3. 3.0 3.1 "Red light district swaps sin for skyscrapers". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 November 2009 இம் மூலத்தில் இருந்து 9 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130909012642/http://articles.timesofindia.indiatimes.com/2009-11-28/mumbai/28060014_1_prostitutes-kamathipura-aids. 
  4. 4.0 4.1 Kamath, Naresh (6 January 2018). "Maharashtra government pushes for revamp of Mumbai's Kamathipura area". www.hindustantimes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 December 2018.
  5. "Kamathipura". Mumbai Pages.
  6. "Bellasis Road". Mumbai Pages, TIFR. 22 July 1997.
  7. யூடியூபில் Selling of Innocents _ Part I – Film by Ruchira Gupta
  8. 8.0 8.1 8.2 "Beedi workers look for saviour". DNA. 25 January 2007. http://www.dnaindia.com/mumbai/report_beedi-workers-look-for-saviour_1076427. 
  9. Watson, Paul (26 March 2006). "Prostitution beckons India's former bar girls". San Francisco Chronicle. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2006/03/26/MNGJ9HSC6R1.DTL&feed=rss.news. 
  10. "Dancing in the dark". The Hindu (Chennai, India). 20 July 2013. http://www.thehindu.com/opinion/editorial/dancing-in-the-dark/article4932416.ece. 

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமாத்திபுரம்&oldid=4098348" இலிருந்து மீள்விக்கப்பட்டது