காம்பாலித குகைகள்
காம்பாலித குகைகள் (Khambhalida Caves) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் கொந்தல் எனுமிடத்தில் அமைந்த மூன்று பௌத்த சமயக் குகைகளின் தொகுப்பாகும்.[1] இக்குகைகள் பிக்குகள் தியானம் செய்வதற்கான சைத்தியம் மற்றும் ஒரு நினைத் தூபியுடன் கூடியுள்ளது.
சைத்தியத்தின் வாயிலின் வலப்புறத்தில் போதிசத்துவர், மற்றும் பத்மபாணி மற்றும் இடப்புறத்தில் வச்ரபானியின் சிற்பங்கள் உள்ளது. இக்குகைகள் இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.
1958ம் ஆண்டில் பி. பி. பாண்டியா எனும் தொல்லியல் ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுண்ணாம்புக்கல் குகைகளில் உள்ள பௌத்த சிற்பங்கள், தியான பௌத்த மரபினரால், கிபி 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.[2] இக்குகைகளுக்கு அருகே தற்போது நவீன பௌத்தக் கட்டிடங்கள் நிறுவப்பட்டுள்ளது.
இதனையும் காண்கதொகு
மேலும் படிக்கதொகு
- TNN (Feb 9, 2011). "Buddha caves to draw tourists". The Times of India. Archived from the original on 2013-12-03. https://web.archive.org/web/20131203052440/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-09/rajkot/28545722_1_buddhist-caves-rajkot-district-tourist-destinations. பார்த்த நாள்: 1 December 2013.
மேற்கோள்கள்தொகு
- ↑ http://www.discoveredindia.com/gujarat/attractions/caves/khambhalid-caves-rajkot.htm
- ↑ Tourism Corporation of Gujarat Limited. "Khambhalida Caves". Gujarat Tourism, Govt. of Gujarat. 27 November 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
Lua பிழை: Module:Navbar:58: Invalid title பௌத்த யாத்திரைத் தலங்கள்.