கான்கேரி குகைகள்
கான்கேரி குகைகள் (Kanheri Caves) (சமக்கிருதம்: कान्हेरीगुहाः Kānherī-guhāḥ) பௌத்தக் குடைவரை குகைகளின் தொகுப்பாகும். இக்குகைகள் மகாராட்டிரா மாநிலத் தலைநகரான மும்பை நகர்புறத்தின், மேற்கே உள்ள போரிவலி பகுதியின் சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவின் மலைப்பாங்கானப் பகுதியில் அமைந்துள்ளது.
இக்குகைகள், கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி 10ஆம் நூற்றாண்டு முடிய உள்ள காலத்திய பௌத்த சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் கொண்டது. கான்கேரி எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு கறுப்பு (கிருஷ்ணர்) மலை எனப் பொருளாகும்.[1][2]
விளக்கம்
தொகுகான்கேரி குகைகளின் வளாகம் 109 குகைகளின் தொகுப்பாகும். இவைகள் சுண்ணாம்புக் கல் மலைக் குகைகள் ஆகும்.[3] சிறு மலைகளில் உள்ள குகைகளுக்குச் செல்வதற்கு பாறைப் படிக்கட்டுகள் உள்ளது.
இக்குகைகளில் கிபி மூன்றாம் நூற்றாண்டில் கௌதம புத்தர் மற்றும் போதிசத்துவர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. கிபி மூன்றாம் கொங்கண் கடற்கரையில் கான்கேரி குகைகள் பௌத்த பிக்குகள் நிரந்தரமாக தங்கி பௌத்த தத்துவங்களை கற்பதற்கும், தியானம் செய்வதற்கும் ஏற்ற விகாரங்களாகவும், சைத்தியங்களாகவும் இருந்தது.[4]
போதிசத்துவர் அவலோகிதரின் சிற்பங்கள் இக்குகைகளில் இடம் பெற்றுள்ளது. மேலும் இக்குகைகள் வணிக மையமாகவும் செயல்பட்டுள்ளது. கல்யாண், நாசிக், உஜ்ஜைன், பைத்தான் ஆகிய நகரங்களுக்கு இடையே செல்லும் வணிகர்கள் இக்குகைகளை ஓய்வு அறைகளாக பயன்படுத்திக் கொண்டனர். மௌரியப் பேரரசு மற்றும் குசான் பேரரசு காலத்தில் கான்கேரி குகைகள் பௌத்த சமயப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது.[1]
980-1054ல் வாழ்ந்த பௌத்த பிக்கு அதிசர் (Atisha) என்பவர் கான்கேரி குகைகளில், பௌத்த குரு இராகுலகுப்தர் கீழ் தியானம் பழகியவர்.[5]
கல்வெட்டுகள் & குறிப்புகள்
தொகுகான்கேரி குகைகளில் பிராமி மற்றும் தேவநாகரி எழுத்துகளுடன் கூடிய 51 கல்வெட்டுகளும், சுவர் எழுத்துக்களும் மற்றும் 3 பகலவி எழுத்துக்களுடன் கூடிய குறிப்புகளும் கல்வெட்டுகளும் உள்ளது[6] எழுத்துக்கள் 90வது குகையில் காணப்படுகின்றன..[1][7] ஒரு கல்வெட்டில், சாதவாகன ஆட்சியாளர் வசிஷ்டிபுத்திர சதகர்மிக்கும், மேற்கு சத்ரபதி மன்னர் ருத்திரதாமனின் மகளுக்கும் நடைபெற்ற திருமணத்தை குறித்துள்ளது.[8]
மேலும் ஒரு கல்வெட்டுக் குறிப்பில் கிபி 494-495ல் திரைகுடக வம்சத்தைப் பற்றிக் குறித்துள்ளது.[9]
குகைச் சிற்பங்கள் & ஓவியங்கள்
தொகுகுகை எண் 34ன் கூரையில் முடிவு பெறாத புத்தரின் ஓவியங்கள் காணப்படுகிறது.
-
மலையடிவாரத்திலிருந்து கான்கேர் குகைகளின் காட்சி
-
கான்கேரி குகையின் பாறைப் படிகள்
-
குகைகளின் முதன்மை நுழைவு வாயில்
-
குகை எண் 1
-
குகை எண் 3
-
நீளமான கல் தரைப் படுக்கைகள்
-
மேற்கு இந்தியாவில் பௌத்த சமய மையமாக கான்கேரி குகைகள்
-
புத்தரின் புடைப்புச் சிற்பம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Kanheri Caves". Archived from the original on 2009-06-15. பார்க்கப்பட்ட நாள் 2007-01-28.
- ↑ Rajen Noir (2006-10-31). "Mumbai's Ancient Kanheri Caves" இம் மூலத்தில் இருந்து 2008-02-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080205041733/http://english.ohmynews.com/articleview/article_view.asp?menu=c10400&no=326138&rel_no=1. பார்த்த நாள்: 2007-01-31.
- ↑ "Mumbai attractions". Archived from the original on 2007-11-09. பார்க்கப்பட்ட நாள் 2007-01-28.
- ↑ "Kanheri Caves Mumbai". பார்க்கப்பட்ட நாள் 2007-01-31.
- ↑ Ray, Niharranjan (1993). Bangalir Itihas: Adiparba in Bengali, Calcutta: Dey's Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7079-270-3, p. 595.
- ↑ West, E.W. (1880). "The Pahlavi Inscriptions at Kaṇheri". The Indian Antiquary 9: 265–268.
- ↑ Ray, H.P. (2006). Inscribed Pots, Emerging Identities in P. Olivelle ed. Between the Empires: Society in India 300 BCE to 400 CE, New York: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-568935-6, p.127
- ↑ "A Note on Inscriptions in Bombay". Maharashtra State Gazetteers-Greater Bombay District. Government of Maharashtra. 1986. பார்க்கப்பட்ட நாள் 2012-11-23.
- ↑ Geri Hockfield Malandra (1993). Unfolding A Mandala: The Buddhist Cave Temples at Ellora. SUNY Press. pp. 5–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780791413555.
வெளி இணைப்புகள்
தொகு- Kanheri Caves Mumbai | Archaeological Site - காணொலி
- Kanheri Caves Decoded Part 1 - காணொலி
- Kanheri Caves Decoded Part 2 - காணொலி
- Walking through the Historical Timeline of Buddhism பரணிடப்பட்டது 2017-08-16 at the வந்தவழி இயந்திரம்
- Kanheri Caves பரணிடப்பட்டது 2009-06-15 at the வந்தவழி இயந்திரம்
- Kanheri Caves Decoded is an online documentary video
- A detailed Review of Kanheri Caves and Sanjay Gandhi National Park: Read this before you go. பரணிடப்பட்டது 2017-01-10 at the வந்தவழி இயந்திரம்
மேலும் படிக்க
தொகு- Nagaraju, S. (1981). Buddhist Architecture of Western India, Delhi: Agam Kala Prakashan.