காம்ரான் அக்மல்

பாக்கித்தானிய துடுப்பாட்ட வீரர்

காம்ரான் அக்மல் (Kamran Akmal, உருது: کامران اکمل‎, பிறப்பு: டிசம்பர் 12, 1984) பாக்கிஸ்தான் லாகூர், இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார் இவர் பாக்கித்தான் தேசிய அணி, ஆசிய லெவன் அணி, லாகூர்துடுப்பாட்ட அணி, தேசிய வங்கி அணி, பஞ்சாப் அணி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக உள்ளூர்ப்போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.2002 ஆம் ஆண்டில் ஹராரே துடுப்பாட்ட சங்க அரங்கத்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இவர் 53 தேர்வுப் போட்டிகளில் 2648 ஓட்டங்களை எடுத்துள்ளார்.[1] இதில் 6 நூறுகளும் அடங்கும். 137 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2924 ஓட்டங்களை எடுத்துள்ளார். இந்தில் ஐந்து நூறுகளும் அடங்கும். பன்னாட்டு இருபது20 போட்டிகளில் 704 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்[2]. குச்சக் காப்பாளாராக தேர்வு போட்டிகளில் 206 இலக்குகள், ஒருநாள் போட்டிகளில் 169 , இருபது20 போட்டிகளில் 52 இலக்குகளையும் ஆட்டமிழக்கச் செய்தார்.[2]

காமரான் அக்மல்
کامران اکمل
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்காம்ரான் அக்மல்
பிறப்பு13 சனவரி 1982 (1982-01-13) (அகவை 42)
லாகூர், பஞ்சாப்,பாக்கித்தான்
பட்டப்பெயர்கமீ பாய்
மட்டையாட்ட நடைவலது கை
பங்குமட்டையாளர், குச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 172)9 நவம்பர் 2002 எ. சிம்பாப்வே
கடைசித் தேர்வு26 ஆகஸ்டு 2010 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 143)23 நவம்பர் 2002 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாப11 ஏப்ரல் 2017 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப சட்டை எண்23
இ20ப அறிமுகம் (தொப்பி 3)28 ஆகஸ்டு 2006 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப2 ஏப்ரல் 2017 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2005–2012லாகூர் லயன்ஸ்
2012–2014லாகூர் ஈகிள்ஸ்
2008ராஜஸ்தான் ராயல்ஸ்
2015முல்தான் டைகர்ஸ்
2017–தற்போது வரைசெயின்ட் லூசியா ஸ்டார்ஸ்
மூலம்: ESPNricinfo, 1 செப்டம்பர் 2017

இவரின் சகோதரர்களான அட்னான் அக்மல் மற்றும் உமர் அக்மல் ஆகியோரும் பாக்கித்தான் தேசியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளனர். 2006 ஆம் ஆண்டில் அய்ஷா என்பவரை இவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு லைபா எனும் மகளும், அய்யன் எனும் மகனும் உள்ளனர்.[3] இவர் லாகூரில் உள்ள பீகான் ஹவுஸ் ஸ்கூல் சிஸ்டம் என்பதில் இவர் பட்டம் பெற்றார்.[2][4]

சர்வதேச போட்டிகள்

தொகு

தேர்வுத் துடுப்பாட்டம்

தொகு

2002 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 9 இல் ஹராரேவில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[5] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 10  பந்துகளில் ஒட்டங்கள் எதுவும் எடுக்காமல் பிரைசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 49 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 8 நான்குகளும் அடங்கும். இந்தப் போட்டியில் நான்கு வீரர்களை கேட்ச்  பிடித்து வீழ்த்தினார்.[6]

2010 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில்  சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஆகஸ்டு 26  இல் இலண்டனில்  நடைபெற்ற இங்கிலாந்துத்  துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது  தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 21  பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்து பின்னின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 4 பந்துகளில் 1 ஓட்டங்கள் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் .இந்தப் போட்டியில் நான்கு வீரர்களை கேட்ச்  பிடித்து வீழ்த்தினார்.[7]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

தொகு

நவம்பர் 23, 2002  இல் வெலிங்டனில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியில் இவருக்கு துடுப்பாட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தபோட்திலும் குச்சக் காப்பாளராக 2 இலக்குகளை வீழ்த்த உதவினார்.[8]

சான்றுகள்

தொகு
  1. "Pakistan in Zimbabwe Test Series – 1st Test". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2012.
  2. 2.0 2.1 2.2 "Profile: Kamran Akmal". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2012.
  3. "Kamran Akmal Wedding Was Held In 2006". 24 July 2012.
  4. "Pak school kids 'make up' for cricket team's defeat". 14 நவம்பர் 2007. Archived from the original on 9 அக்டோபர் 2008. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2009. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Kamran Akmal", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25
  6. "1st Test, Pakistan tour of Zimbabwe at Harare, Nov 9-12 2002 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25
  7. "4th Test, Pakistan tour of England at London, Aug 26-29 2010", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25
  8. "1st ODI, Pakistan tour of Zimbabwe at Bulawayo, Nov 23 2002", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்ரான்_அக்மல்&oldid=3586571" இலிருந்து மீள்விக்கப்பட்டது