கார்காத்தார்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
கார்காத்தார் (Karkathar) அல்லது கார்காத்த வெள்ளாளர் எனப்படுவோர் தமிழ்நாட்டில் வாழுகின்ற இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வெள்ளாளர் சமூகத்தில் ஒரு உட்பிரிவாகும். இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர்.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
இந்து (சைவம்) | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தமிழர், வேளாளர் |
இவர்கள் கார்காத்தார், காரைக்காட்டார், கார்காத்த வேளாளர், காரைக்காட்டு வேளாளர், காரிக்காட்டுப் பிள்ளை என்று சில பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.[சான்று தேவை] தமிழ்நாட்டில் இச்சாதியினர் தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், கடலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர்.
பெயர்க் காரணம்
தொகுகளவேள்வி நாட்டில் வேளாளர் குடியேறி இருந்து வரும் காலத்தில் ஒரு நாள் உக்கிரபாண்டியன் என்னும் அரசன் பொதியமலைச் சாரலில் வேட்டையாடச் சென்ற போது புட்கலா வர்த்தம் (பொன்), சங்காரித்தம் (பூ), துரோணம் (மண்), காளமுகி (கல்) என்னும் நான்கு மேகங்கள் பாண்டியன் பகுதியில் மழை பொழியாமல் மேயக் கண்டு, கோபமுற்று அவற்றை சிறையிலடைத்து விட்டான். இதனை அறிந்த இந்திரன் சேனைகளுடன், பாண்டியனோடு பொருதுவதற்கு வந்து ஆற்றாதவனாகி திரும்பச் சென்று பாண்டியனுக்கு முடங்கல் வரைந்தான். அதாவது, பாண்டிய நாட்டில் மாதமொரு மழை பொழிய ஏற்பாடு செய்கிறேன். மேகங்களை விடுவித்து விடவும் என எழுதினான். அதைக் கண்ட பாண்டியன், இந்திரனின் கூற்றுக்கு யார் பிணை எனக்கேட்டான். அப்போது வேளாளன் ஒருவன் பிணையாக இருந்து மேகங்களை விடுவித்ததாக திருவிளையாடற் செய்யுள் 57, 58 ஆகியவைகளில் அறியக் கிடைக்கிறது.
- இட்டவன் சிறையை நீக்கி யெழிலியை விடாது மாறு
- பட்டசிந் தையனே யாகப் பாகசா தனனுக் கென்றும்
- நட்டவ னொருவே ளாள னான்பிணை யென்று தாழ்ந்தான்
- மட்டவிழ்ந் தொழுகு நிம்ப மாலிகை மார்பி னானும். (திருவிளையாடற் செய்யுள் 57)
- இடுக்கண்வந் துயிர்க்கு மூற்ற மெய்தினும் வாய்மை காத்து
- வடுக்களைந் தொழுகு நாலா மரபினா னுரையை யாத்தன்
- எடுத்துரை மறைபோற் சூழ்ந்து சிறைக்களத் திட்ட யாப்பு
- விடுத்தனன் பகடு போல மீண்டன மேக மெல்லாம். (திருவிளையாடற் செய்யுள் 58)
மேற்கூறியவாறு காருக்கு (மேகத்திற்கு) பிணை கொடுத்ததால் அந்த வேளாளனுக்கு கார்காத்தான் என்ற காரணப்பெயர் வந்தது. கார்காத்தார், காராளர் என இரண்டும் காரணப் பெயர்கள். இதற்கு ஆதாரமாக கடம்புவன் புராணம், சிலப்பதிகாரம், திருவிளையாடற் புராணம் ஆகியவைகளில் பாக்கள் உள்ளன. மேகங்களைக் கட்டி வைத்த இடம் கட்டனூர் என்றும், சிறையிடப் பெற்ற இடம் இருஞ்சிறை எனவும் வழங்கப் பெற்றது. இவ்வூர்கள் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ளது.
நாட்டுக்கோட்டை நகரத்தார் உறவு
தொகு“காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் குலத்துப் பெண்கள் யாருமே உயிரோடு இல்லாத நிலையில் இருந்தனர். நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் இரத்ன மகுட வைசியர் என்பதால் மன்னனின் முடிசூட்டு விழாவை அவர்கள் தான் நடத்தி வைக்க வேண்டும். முடி சூட்டுவதற்குத் திருமணமானவர்களாக தான் இருக்க வேண்டும். என்பதால் உயிர் பிழைத்த ஒன்பது நகரத்து வாலிபர்களுக்கும் ஒன்பது கார்காத்த வேளாளர் குலத்துப் பெண்களைத் திருமணம் செய்து வைத்தார்கள். எங்கள் நகரத்தார் குலத்துப் பெண்கள் அனைவரும் கார்காத்த வேளாளர் குலத்தின் பெண் பிள்ளைகள் ஆவர்." என்று திருமதி தேவகி முத்தையா குறிப்பிடுகிறார்.[1]
98 கூட்டம்/கிளை/குலம்
தொகுகூட்டங்கள்/கிளைகள்/குலங்கள் என்பது ஆண் வழிவம்சாவழியை குறிப்பது ஆகும். தற்பொழுது 32 கூட்டப்பிரிவுகளே/குலப்பிரிவுகளே வழக்கத்தில் உள்ளது.
- அன்னலுடையான்
- அஞ்சலுடையான்
- அங்கலுடையான்
- அங்கத்துடையான்
- அங்கனுடையான்
- அரியனிடையான்
- அச்சுதராயன்
- ஆவுடையான்
- ஆளுங்குடையான்
- ஆலச்சுக்குடையான்
- உகலுடையான்(ஒகுலுட)
- காளப்பாளன்
- களத்துடையான்
- கடம்புடையான்
- கருப்புடையான்
- கருவாளுடையான்
- காருடையான்
- காவலுடையான்
- காலிங்கராயன்
- காங்கயராயன்
- குன்றலுடையான்
- குளத்துடையான்
- குமாரக்குடையான்
- குலாவுடையான்
- குணமாலுடையான்
- குல்லத்திரையான்
- கூடலுடையான்
- கொழுமுடையான்
- கோவுடையான்
- கொற்றத்துடையான்
- கொங்கராயன்
- சாத்தனுடையான்
- சாத்துக்குடையான்
- சீனத்திரையன்
- சீனத்தராயன்
- சேனாதிராயன்
- செம்புதிரையான்
- சேவித்திரையன்
- சேவுடையான்
- தனவாருடையான்
- தாக்குடையான்
- திட்டத்திரையன்
- தீவனுடையான்
- தீபத்திரையன்
- துளாருடையான்
- தென்னவராயன்
- தென்னப்பிரியன்
- தென்னத்திரையன்
- தொழுவுடையான்
- நங்குடையான்
- நன்னருடையான்
- நாக்குடையான்
- நெப்புக்குடையான்
- நெடுவாலுடையான்
- பரிவுடையான்
- பளுவுடையான்
- பனையுடையான்
- பஞ்சத்திரையன்
- பல்லவராயன்
- பாலுடையான்
- பாக்கமுடையான்
- பாண்டித்திரையன்
- மல்லுடையான்
- பூதரமுடையான்
- பூவனுடையான்
- பெண்ணுமுடையான்
- மங்கலமுடையான்
- மணக்குடையான்
- மருங்குடையான்
- மழுவுடையான்
- மாயனுடையான்
- மாலுடையான்
- மளுவத்திரையன்
- மீனவராயன்
- முனையதிரையன்
- இயத்தனுடையான்
- உத்தரக்குடையான்
- உலகுடையான்
- இறையுடையான்
- எருமையுடையான்
- எருக்குடையான்
- வயலுடையான்
- வழுத்தாவுடையான்
- வங்காருடையான்
- வல்லவராயன்
- வசந்தராயன்
- வானாதிராயன்
- வில்லவராயன்
- விசையராயன்
- விழுதுடையான்
- விச்சுடையான்
- விளந்துடையான்
- விருப்பத்திரையான்
- வில்லதிரையான்
- வேளாருடையான்
- வெண்சாருடையான்
- திட்டதுடையான்
- இலூயனுடையான்