கார்கில் வெற்றி நாள்
கார்கில் வெற்றி நாள் (Kargil Vijay Diwas) ஜூலை 26 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிற நாள் ஆகும். 1999 ஆம் ஆண்டில் இதே நாளில் பாகிஸ்தானிடம் இழந்த உயர் புறக்காவல் நிலையங்களை இந்தியா வெற்றிகரமான ஆபரேஷன் விஜய் என்று பெயரிடப்பட்ட திட்டத்தினை முன் வைத்து வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டது. கார்கில் போர் 60 நாட்களுக்கு மேலாக நடந்தது, ஜூலை 26 ஆம் நாளன்று இப் போர் முடிவடைந்த போதிலும் இரு தரப்பிலும் உயிர் இழப்பு ஏற்பட்டது. முன்னர் வைத்திருந்த அனைத்து பிரதேசங்களின் மீதும் இந்தியா மீண்டும் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்த பின்னரே போர் முடிவுக்கு வந்தது. இந்த வகையில் பழைய நிலையை மீண்டும் நிலைநிறுத்தியது. [1] கார்கில் வெற்றி நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் நாளன்று கார்கில் போரின் மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கார்கில்– டிராஸ் துறையிலும், தேசிய தலைநகரான புதுதில்லியிலும் கொண்டாடப்படுகிறது, அங்கு இந்தியப் பிரதமர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வாயிலில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். ஆயுதப்படைகளின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. [2]
கார்கில் வெற்றி நாள் | |
---|---|
கார்கில் போர் நினைவகம் | |
கடைபிடிப்போர் | இந்தியா |
நாள் | 26 சூலை |
நிகழ்வு | ஒவ்வோர் ஆண்டும் |
1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தானியப் போருக்குப் பிறகு, இரு அண்டை நாடுகளின் இராணுவப் படைகள் சம்பந்தமாக ஒப்பீட்டளவில் சில நேரடி ஆயுத மோதல்களுடன் நீடித்தது. சுற்றியுள்ள மலைகள் முகடுகளில் இராணுவ புறக்காவல் நிலையங்களை நிறுவுவதன் மூலம் சியாச்சின் பனிப்பாறையை கட்டுப்படுத்த இரு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தபோதிலும். 1980 களில்இராணுவ மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.எவ்வாறாயினும், 1990 களில், காஷ்மீரில் பிரிவினைவாத நடவடிக்கைகள் காரணமாக பதட்டங்கள் மற்றும் மோதல்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. அவற்றுள் சில பாகிஸ்தானின் ஆதரவினால் நடத்தப்பட்டனவாகும். அத்துடன் 1998 இல் இரு நாடுகளும் அணுசக்தி சோதனைகளை நடத்தின. அந்தச் சோதனைகள் போர்க்குணமிக்க சூழலுக்கு அடிகோலியது. நிலைமையைத் தணிக்கும் முயற்சியை மேற்கொண்டு, இரு நாடுகளும் பிப்ரவரி 1999 இல் லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டன, காஷ்மீர்ப் பிரச்சனைக்கு ஒரு அமைதியான மற்றும் இரு தரப்பு நிலையில் அமைந்த வழங்குவதாக உறுதியளித்து ஒத்துககொண்டன. 1998-1999 குளிர்காலத்தில், பாக்கிஸ்தானிய ஆயுதப் படைகளின் சில பிரிவுகள் இரகசியமாக இந்தியக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஓ.சி) இந்தியப் பகுதிக்கு பாகிஸ்தானிய துருப்புக்களையும் துணை ராணுவப் படைகளையும் அனுப்பின. அவற்றுள் சிலமுஜாஹிதீன்களின் போர்வையில் அனுப்பப்பட்டன. இந்த ஊடுருவல் "ஆபரேஷன் பத்ர்" என்று அழைக்கப்பட்டது. காஷ்மீர் மற்றும் லடாக் இடையேயான தொடர்பைத் துண்டித்து இந்தியப் படைகள் சியாச்சின் பனிப்பாறையிலிருந்து விலக வேண்டும் என்பதே பாகிஸ்தானிய ஊடுருவலின் நோக்கமாக இருந்தது. இதனால் பரந்த காஷ்மீர் சர்ச்சைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தும் சூழலுக்கு இந்தியா உள்ளாகிய. பிராந்தியத்தில் காணப்படுகின்ற எந்தவொரு பதற்றமும் காஷ்மீர் பிரச்சினையை உலக அளவிற்கு எடுத்துச் சென்றுவிடும் என்று பாகிஸ்தான் நம்பியது. அதன் காரணமாக விரைவான ஒரு தீர்மானத்தைப் பெறலாம் என்றும் அது நம்பியது. அதன் மற்றொரு முக்கியமான குறிக்கோள், இவ்வகையான நடவடிக்கைகள் மூலமாக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தசாப்த கால கிளர்ச்சியை அதிகரிப்பது என்பதே ஆகும்.
ஆரம்பத்தில், ஊடுருவலின் தன்மை அல்லது அளவைப் பற்றி போதிய அளவில் அனுமானிக்க முடியாததால், அப்பகுதியில் உள்ள இந்திய துருப்புக்கள் ஊடுருவியவர்கள் ஜிஹாதிகள் என்று கருதினர். தொடர்ந்து சில நாட்களுக்குள் அவர்களை வெளியேற்றுவதாக அறிவித்தனர். எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டி வேறு இடங்களில் ஊடுருவல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊடுருவல்காரர்கள் தம் உத்திகளை வேறு வகையில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதன் காரணமாக தாக்குதலின் திட்டம் மிகப் பெரிய அளவில் அமையப்போவதை இந்திய இராணுவம் உணர்ந்தது. அப்போது கைப்பற்றப்பட்ட மொத்த பரப்பளவு பொதுவாக 130 கிமீ² – 200 கிமீ²க்கு இடையே ஆனதாக அமையும்.
200,000 இந்திய துருப்புக்களை அணிதிரட்டிக் கொண்டு ஆபரேஷன் விஜயை செயல்படுத்தியதன் மூலம் இந்திய அரசு சரியான முறையில் பதிலளித்தது. ஜூலை 26, 1999 ஆம் நாளன்று அதிகாரப்பூர்வமாக போர் முடிவுக்கு வந்தது, இதனால் இது கார்கில் வெற்றி நாள் என்று குறிக்கப்படுகிறது.
இந்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 527 வீரர்கள் இந்தப் போரின்போது தம் இன்னுயிரை ஈழந்தனர். [3]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ See Kargil War
- ↑ City to observe Kargil Vijay Diwas today பரணிடப்பட்டது 2009-08-01 at the வந்தவழி இயந்திரம் Allahabad, The Times of India, TNN July 25, 2009.
- ↑ Vijay Diwas பரணிடப்பட்டது 2009-09-30 at the வந்தவழி இயந்திரம் The Hindu, July 27, 2009.