கார்த்திகேய சிவசேனாதிபதி
கார்த்திகேய சிவசேனாதிபதி (பிறப்பு 18 அக்டோபர் 1973) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் மற்றும் வேளாண், கால்நடை வளர்ப்பு ஆர்வலர் ஆவார்.
கார்த்திகேய சிவசேனாதிபதி | |
---|---|
தலைவர், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 திசம்பர் 2022 | |
நியமிப்பு | மு. க. ஸ்டாலின் |
முன்னையவர் | பதவி உருவாக்கம் |
செயலாளர், சுற்றுச்சூழல் அணி, திராவிட முன்னேற்றக் கழகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 நவம்பர் 2020 | |
முன்னையவர் | பதவி உருவாக்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 அக்டோபர் 1973 |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் (2020 -) |
வாழிடம் | காங்கேயம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இணையத்தளம் | https://www.karthikeyasivasenapathy.in/ |
தொடக்க வாழ்க்கை
தொகுஇவர், 18 அக்டோபர் 1973 அன்று சிவசேனாதிபதி என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.
கல்வி
தொகுகோயம்புத்தூர் மாநகரின் இரத்தின சபாபதிபுரத்திலுள்ள சிறீ பல்தேவ்தாஸ் கிக்கானி வித்யா மந்திர் உயர்நிலைப்பள்ளியில் (SBKV) பயின்று 1991-இல் பன்னிரண்டாம் வகுப்பை நிறைவு செய்தார்.
வேளாண்மைச் செயல்பாடுகள்
தொகுதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாக உறுப்பினராகப் பணியாற்றினார்[1].
கால்நடை வளர்ப்புச் செயல்பாடுகள்
தொகுசல்லிக்கட்டு, நாட்டு மாடுகள் தன்னார்வலரான இவர், காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத் தலைவராக உள்ளார். சல்லிக்கட்டு போட்டி தொடர்பாக ஆவணப்படம் எடுத்தல், வழக்குகளை நடத்துதல்,நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்.[2] ஆறு கோடி ரூபாய் செலவு செய்து காங்கேயம் காளைகளின் விந்தணுக்களைச் சேமித்து வைத்திருக்கிறார்.[3]
இவர் 2013-ல் மெரீனா கடற்கரையில் மிகச்சில நபர்களுடன் இணைந்து சல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்கு வித்திட்டதாகக் கருதப்படும் இசையமைப்பாளர் "ஹிப்ஹாப் தமிழா" ஆதியின் பாடல் இவருடைய சந்திப்பிற்குப் பிறகே உருவானது.[4]
அரசியல்
தொகு2020-ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தார். அவ்வாண்டு நவம்பர் 23 அன்று திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2021 தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் இவர் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியை எதிர்த்து தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்றார்.
பதவிகள்
தொகு19 திசம்பர் 2022 அன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், இவரை புதிதாக உருவாக்கப்பட்ட வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் தலைவராக நியமித்தார்.
ஒளிப்படங்கள்
தொகு-
கார்த்திகேய சிவசேனாதிபதி மின்னணு ஓவியம்