கார்பன் இருசெலீனைடு

வேதிச் சேர்மம்

கார்பன் இருசெலீனைடு (Carbon diselenide) CSe2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். கார்பன் இருசல்பைடை ஒத்த வரிசைச் சேர்மமாகக் கருதப்படும் இச்சேர்மம் மஞ்சள் ஆரஞ்சு நிறத்தில் எண்ணெய் பசை கொண்ட நீர்மமாகக் காணப்படுகிறது. ஒளி உணரியான இச்சேர்மம் நீரில் கரையாது ஆனால் கரிமக் கரைப்பான்களில் கரையும்.

கார்பன் இருசெலீனைடு
Carbon diselenide
பெயர்கள்
வேறு பெயர்கள்
கார்பன் செலீனைடு, டைசெலீனாக்சோமெத்தேன், மெத்தேன்டைசெலோன், கார்பன் டைசெலீனைடு
இனங்காட்டிகள்
506-80-9 Y
ChemSpider 61481 N
InChI
  • InChI=1S/CSe2/c2-1-3 N
    Key: JNZSJDBNBJWXMZ-UHFFFAOYSA-N N
  • InChI=1/CSe2/c2-1-3
    Key: JNZSJDBNBJWXMZ-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68174
  • [Se]=C=[Se]
UNII WD123H448C Y
பண்புகள்
CSe2
வாய்ப்பாட்டு எடை 169.93 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிற நீர்மம்
அடர்த்தி 2.6824 கி/செ.மீ3
உருகுநிலை −43.7 °C (−46.7 °F; 229.5 K)
கொதிநிலை 125.5 °C (257.9 °F; 398.6 K)
0.054 கி/100 மில்லி
கரைதிறன் CS2, தொலுயீன் போன்றவற்றில் கரையும்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
219.2 கிலோயூல்/மோல் (நீர்மம்)
நியம மோலார்
எந்திரோப்பி So298
263.2 யூல்/மோல் கெல்வின் (வாயு)
வெப்பக் கொண்மை, C 50.32 யூல்/மோல் கெல்வின் (வாயு)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 30 °C (86 °F; 303 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

கார்பன் இரு செலீனைடு D∞h என்ற சீரொழுங்குடன் ஒரு நேரியல் மூலக்கூற்று கட்டமைப்பைக் கொண்டுள்ளது. செலீனியம் தூளுடன் இருகுளோரோமெத்தேன் ஆவியை 550 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து கார்பன் இருசெலீனைடு தயாரிக்கப்படுகிறது. [1]

2 Se + CH2Cl2 → CSe2 + 2 HCl

கிரிம் மற்றும் மெட்சுகெர் இருவரும் ஐதரசன் செலீனைடுடன் கார்பன் டெட்ரா குளோரைடை சூடான குழாயில் வைத்து சூடுபடுத்தி கார்பன் இருசெலீனைடை தயாரித்தார்கள். [2] கார்பன் இருசல்பைடைப் போலவே கார்பன் இரு செலீனைட்டும் உயர் அழுத்தத்தில் பலபடியாகிறது. இப்பலபடியின் கட்டமைப்பு –[Se–C(=Se)–C(=Se)–Se]– என்ற முதுகெலும்பு வடிவத்தில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உருவாகும் பலபடி ஓர் குறைகடத்தியாகும். [3] அறை வெப்பநிலையில் இந்த பலபடியின் மின்கடத்துத்திறன் மீட்டருக்கு 50 சிமென்சு அளவாகும். கார்பன் இருசெலீனைடானது டெட்ராசெலீனாபல்வேலீன்கள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாகும். டெட்ராதயாபல்வேலீன் சேர்மத்தை ஒத்த செலீனியம் வரிசைச் சேர்மம் டெட்ராசெலீனாபல்வேலீனாகும். [4] மேலும், கரிமக் கடத்திகளையும், கரிம மீக்கடத்திகளையும் தயாரிக்கவும் இச்சேர்ம்ம் பயன்படுகிறது.

இரண்டாம்நிலை அமீன்களுடன் கார்பன் இருசெலீனைடு வினைபுரிந்து ஈரால்கையிருசெலீனோகார்பமேட்டுகளைக் கொடுக்கிறது. :[1]

2 Et2NH + CSe2 → (Et2NH2+)(Et2NCSe2)

முன்பாதுகாப்பு

தொகு

கார்பன் இருசெலீனைடின் ஆவியழுத்தம் அதிகமாகும். இதன் நச்சுத்தன்மையும் மிதமான நச்சுத்தன்மையாகும். உள்ளிழுக்க நேர்ந்தால் அபாயத்தை அளிக்கிறது. எளிதான சவ்வு போக்குவரத்து காரணமாக இது ஆபத்தை உருவாக்கலாம். சேமித்து வைக்கும் போது 30 பாகை செல்சியசு வெப்பநிலையில் மாதத்திற்கு சுமார் 1% மெதுவாக சிதைகிறது. வணிக ரீதியாக தயாரிக்க முற்பட்டால் தயாரிப்பு செலவு மிகவும் அதிகமாகும். [5]

தூய்மையான வடிகட்டிய கார்பன் இருசெலீனைடு கார்பன் டைசல்பைடை ஒத்த ஒரு மணத்தைக் கொண்டுள்ளது. ஆனால் காற்றோடு கலந்தால் மிகவும் ஆபத்தான நெடியை உருவாக்குகிறது. [6][7] 1936 ஆம் ஆண்டில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டபோது உருவான நெடி அருகிலுள்ள கிராம மக்களை வெளியேற்ற கட்டாயப்படுத்தியது. எனவே இத்துர்நாற்றம் காரணமாக கார்பன் இருசெலீனைடின் பயன்பாட்டைத் தவிர்க்க செயற்கை தயாரிப்புப் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. [7] Because of the odor, synthetic pathways have been developed to avoid its use.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Pan, W.-H.; Fackler, J. P. Jr.; Anderson, D. M.; Henderson, S. G. D.; Stephenson, T. A. (1982). "2. Diselenocarbamates from Carbon Diselenide". In Fackler, J. P. Jr. (ed.). Inorganic Syntheses. Vol. 21. pp. 6–11. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132524.ch2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13252-4.
  2. Grimm, H. G.; Metzger, H. (1936). "Über Darstellung und Eigenschaften des Selenkohlenstoffs". Berichte der Deutschen Chemischen Gesellschaft (A and B Series) 69 (6): 1356–1364. doi:10.1002/cber.19360690626. 
  3. Carraher, C. E. Jr.; Pittman, C. U. Jr. (2005). "Poly(Carbon Disulfide), Poly(Carbon Diselenide), and Polythiocyanogen". Inorganic Polymers 21. doi:10.1002/14356007.a14_241. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-527-30673-0. 
  4. Engler, E. M.; Patel, V. V. (1974). "Structure control in organic metals. Synthesis of tetraselenofulvalene and its charge transfer salt with tetracyano-p-quinodimethane". Journal of the American Chemical Society 96 (23): 7376–7378. doi:10.1021/ja00810a042. பப்மெட்:4814748. 
  5. "Carbon Diselenide CSe2". Cse2.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-04.
  6. Wolfgang H. H. Gunther. Organic Selenium Compounds: Their Chemistry and Biology. carbon diselenide has by far the worst odor this author has experienced in his lifetime of working with selenium compounds
  7. 7.0 7.1 Lowe, Derek (2005-03-03). "Things I Won't Work With: Carbon Diselenide". In the Pipeline. Science. Archived from the original on 2015-11-21. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  8. US patent 4462938, Wudl, F., "Process for producing chalcogen containing compounds", issued 1984-07-31, assigned to AT&T Bell Laboratories .
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பன்_இருசெலீனைடு&oldid=3717445" இலிருந்து மீள்விக்கப்பட்டது