கால்சியம் குளுக்கோனேட்டு
கால்சியம் குளுக்கோனேட்டு (Calcium gluconate) என்பது ஒரு கனிமச் சேர்க்கைப் பொருளாகும். குளுக்கோனிக் அமிலத்தை சுண்ணாம்பு அல்லது கால்சியம் கார்பனேட்டுடன் சேர்த்து நடுநிலையாக்கம் செய்வதன் மூலமாக கால்சியம் குளுக்கோனேட்டு தயாரிக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
calcium (2R,3S,4R,5R)- 2,3,4,5,6-pentahydroxyhexanoate
| |
இனங்காட்டிகள் | |
299-28-5 | |
ATC code | A12AA03 D11AX03 |
ChemSpider | 8932 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9290 |
| |
UNII | SQE6VB453K |
பண்புகள் | |
C12H22CaO14 | |
வாய்ப்பாட்டு எடை | 430.373 கி/மோல் |
தோற்றம் | தூள் |
மணம் | நெடியற்றது |
உருகுநிலை | 120 °C (248 °F; 393 K) (சிதைவடையும்) |
மெதுவாகக் கரையும் | |
கரைதிறன் | ஆல்ககால் மற்றும் கரிம கரைப்பான்களில் கரையும். |
காடித்தன்மை எண் (pKa) | 6-7 |
தீங்குகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அடிப்படையான சுகாதாரத்திற்குத் தேவையான மிக முக்கியமான மருந்துகளின் பட்டியலில், கால்சியம் குளுக்கோனேட்டு ஒரு அத்தியாவசியமான மருந்து என உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.[1]
மருத்துவப் பயன்கள்
தொகுசுண்ணாம்புச்சத்துக் குறைபாடு
தொகுஇரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு 10% கால்சியம் குளுக்கோனேட்டுக் கரைசலை நரம்புகள் வழியாக உட்செலுத்தி சிகிச்சை அளிப்பது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சிகிச்சை முறையாகும். செலுத்தப்படும் கால்சியத்தின் இவ்வடிவம் கால்சியம் லாக்டேட்டு[2]வாக உறிஞ்சப்படுவதில்லை. மற்றும் அது 0.93 (930 மி.கி / டெ.லி) சதவீத கால்சியம் அயனியை மட்டுமே கொண்டிருக்கிறது. (1 கிராம் எடையுள்ள கரைபொருள் 100 மி.லி கரைப்பானில் கரைந்து 1 சதவீதக் கரைசலை எ/ப உருவாக்க வேண்டும் என்பது வரை யறையாகும்.) எனவே இரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை கடுமையாக இருக்கும் நிகழ்வுகளில் கால்சியம் குளுக்கோனேட்டுக்குப் பதிலாக கால்சியம் குளோரைடு கொடுக்கப்படுகிறது.
மிகை மக்னீசியம் சல்பேட்டு கட்டுப்படுத்தியாக
தொகுஎப்சம் உப்பு எனப்படும் மக்னீசியம் சல்பேட்டு [3]தேவைக்கு அதிகமாக உடலில் அளவு மீறும் போது அதைக் கட்டுப்படுத்த கால்சியம் குளுக்கோனேட்டு பயன்படுத்தப்படுகிறது. திடீர் நோய் தாக்கத்தில் இருந்து கருவுற்ற பெண்களைக் காப்பாற்ற முன்காப்பாக எப்சம் உப்புகள் கொடுக்கப்படுவது வழக்கமாகும்.கருவுற்ற மகளிர் குறைப்பிரசவத்திற்கு ஆளாகும் போது தொடர்ந்து மக்னீசியம் சல்பேட்டு கொடுக்கப்படுவதில்லை. பக்க விளைவில்லாத மேம்பட்ட வேறு மகப்பேறு மருந்துகள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. அளவுக்கு மீறிய மக்னீசியம் சல்பேட்டு நஞ்சாக உடலுக்கு தீங்கிழைக்கிறது. இதனால் சுவாசக் குறைவும் தசைநாண் மீட்சிகளில் தொய்வும் ஏற்படவும் கூடும். இவ்விடத்தில்தான் கால்சியம் குளுக்கோனேட்டு எதிர்வினை புரிந்து மக்னீசியம் சல்பேட்டைக் கட்டுப்படுத்துகிறது.
ஐதரோ புளோரிக் அமிலத் தீக்காயச் சிகிச்சையில்
தொகுஐதரோ புளோரிக் அமிலத்தினால் உண்டாகும் தீக்காயங்களுக்குச் சிகிச்சை அளிக்க கால்சியம் குளுக்கோனேட்டு கூழ்மங்கள் பயன்படுகின்றன[4][5]. இவை ஐதரோ புளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து கரையாத நச்சுத்தன்மையற்ற கால்சியம் புளோரைடாக மாறிவிடுகிறது.
உயர் பொட்டாசியம் அளவைக் கட்டுப்படுத்துவதில்
தொகுஇரத்தத்தில் பொட்டாசியம் அளவு மிகுதியாகும் பொழுது இதயத்தை பாதிப்பிலிருந்து காக்கும் முகவராக கால்சியம் குளுக்கோனேட்டு பயன்படுகிறது. பொட்டாசியம் அளவில் எந்தவிதமான மாற்றத்தையும் இது செய்வதில்லை என்றாலும் இதயத் தசைகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கிறது. இதயத் துடிப்பின் சீர்பிறழ்வுகள் வளர்வதைக் குறைக்கிறது[6].
கருப்பு விதவைச்சிலந்தி கடிச் சிகிச்சையில்
தொகுபெருஞ்சிலந்தி குடும்ப வகையைச் சார்ந்த கருப்பு விதவைச்சிலந்தி கடியினால் உண்டாகும் குழைமசந்திச் சீர்குலைவு சிகிச்சையில் கால்சியம் குளுக்கோனேட்டு பயன்படுகிறது[7]. பெரும்பாலும் தசைத் தளர்த்தியாக இது ஒன்றிப்போகிறது. இருந்தாலும் இச்சிக்கிச்சை நடைமுறைப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது.[8][9]
பக்க விளைவுகள்
தொகுகுமட்டல் , மலச்சிக்கல், வயிற்று எரிச்சல் போன்ற பக்க விளைவுகளை கால்சியம் குளுக்கோனேட்டு உண்டாக்குகிறது. விரைவாக இதை நரம்பு வழியாகச் செலுத்தும்போது அதிகளவு கால்சியம் இரத்தத்தில் மிகுந்து அதனால் நாளவிரிவு மற்றும் இதயத்துடிப்பு பிறழ்வுகள், இரத்த அழுத்தக் குறைவு மற்றும் குறை இதயத் துடிப்பு முதலிய பாதிப்புகள் உண்டாகலாம். குழாய் கசிவினால் வெளியாகும் கால்சியம் குளுக்கோனேட்டால் உயிரணு அழற்சி ஏற்படலாம். நரம்புகள் வழியாக இதைச் செலுத்தும் போது அப்பகுதியில் திசு இறப்பு மற்றும் சீழ்கட்டிகள்[10] தோன்றலாம். சிறுநீர்ப் பெருக்கம், உப்புமிகைச் சிறுநீர், சிறுநீரகத்தில் பிளாசுமா ஓட்டம் முதலான பாதிப்புகள்[11][12], குளோமருல நீரகவழல் விகிதம்[13] மற்றும் இரைப்பை சுரப்படக்குதல் ஆகிய பாதிப்புகளும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.[14]
மேற்கோள்கள்
தொகு- ↑ "WHO Model List of EssentialMedicines" (PDF). World Health Organization. October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.
- ↑ Spencer, H.; Scheck, J.; Lewin, I.; Samachson, J. (1966). "Comparative absorption of calcium from calcium gluconate and calcium lactate in man". The Journal of nutrition 89 (3): 283–292. பப்மெட்:4288031. https://archive.org/details/sim_journal-of-nutrition_1966-07_89_3/page/283.
- ↑ Omu AE, Al-Harmi J, Vedi HL, Mlechkova L, Sayed AF, Al-Ragum NS (2008). "Magnesium sulphate therapy in women with pre-eclampsia and eclampsia in Kuwait". Med Princ Pract 17 (3): 227–32. doi:10.1159/000117797. பப்மெட்:18408392. http://content.karger.com/produktedb/produkte.asp?typ=fulltext&file=000117797.
- ↑ el Saadi MS, Hall AH, Hall PK, Riggs BS, Augenstein WL, Rumack BH (1989). "Hydrofluoric acid dermal exposure". Vet Hum Toxicol 31 (3): 243–7. பப்மெட்:2741315.
- ↑ Roblin I, Urban M, Flicoteau D, Martin C, Pradeau D (2006). "Topical treatment of experimental hydrofluoric acid skin burns by 2.5% calcium gluconate". J Burn Care Res 27 (6): 889–94. doi:10.1097/01.BCR.0000245767.54278.09. பப்மெட்:17091088. https://archive.org/details/sim_journal-of-burn-care-research_2006-12_27_6/page/889.
- ↑ Parham, W. A.; Mehdirad, A. A.; Biermann, K. M.; Fredman, C. S. (2006). "Hyperkalemia revisited". Texas Heart Institute journal / from the Texas Heart Institute of St. Luke's Episcopal Hospital, Texas Children's Hospital 33 (1): 40–47. பப்மெட்:16572868.
- ↑ Pestana, Carlos Dr. Pestana Surgery Notes Kaplan Medical 2013
- ↑ Offerman, Steven (2011). "The Treatment of Black Widow Spider Envenomation with Antivenin Latrodectus Mactans: A Case Series". The Permanente Journal 15: 76–81. பப்மெட்:22058673.
- ↑ Clark, Richard (July 1992). "Clinical presentation and treatment of black widow spider envenomation: A review of 163 cases". Annals of Emergency Medicine 21: 782–787. doi:10.1016/S0196-0644(05)81021-2. http://www.sciencedirect.com/science/article/pii/S0196064405810212. பார்த்த நாள்: 2014-08-09.
- ↑ Yui-Ming Lam, Hung-Fat Tse, Chu-Pak Lau (April 2001). "Continuous Calcium Chloride Infusion for Massive Nifedipine Overdose". Chest 119 (4): 1280–1282. doi:10.1378/chest.119.4.1280. பப்மெட்:11296202. https://archive.org/details/sim_chest_2001-04_119_4/page/1280.
- ↑ Ruilope LM, Oliet A, Alcázar JM, Hernández E, Andrés A, Rodicio JL, García-Robles R, Martínez J, Lahera V, Romero JC. (December 1989). "Characterization of the renal effects of an intravenous calcium gluconate infusion in normotensive volunteers.". J Hypertens Suppl. 7 (6): 170. doi:10.1097/00004872-198900076-00081. பப்மெட்:2632708.
- ↑ Bernardi M, Di Marco C, Trevisani F, Fornalè L, Andreone P, Cursaro C, Baraldini M, Ligabue A, Tamè MR, Gasbarrini G. (July 1993). "Renal sodium retention during upright posture in preascitic cirrhosis.". Gastroenterology. 105 (1): 188–193. பப்மெட்:8514034. https://archive.org/details/sim_gastroenterology_1993-07_105_1/page/188.
- ↑ Wong F, Massie D, Colman J, Dudley F. (March 1993). "Glomerular hyperfiltration in patients with well-compensated alcoholic cirrhosis.". Gastroenterology. 104 (3): 884–900. பப்மெட்:8440439. https://archive.org/details/sim_gastroenterology_1993-03_104_3/page/884.
- ↑ Lahera V, Fiksen-Olsen MJ, Romero JC. (February 1990). "Stimulation of renin release by intrarenal calcium infusion.". Hypertension 15 (2): 149–152. doi:10.1161/01.hyp.15.2_suppl.i149. பப்மெட்:2404858. https://archive.org/details/sim_hypertension_1990-02_15_2/page/149.