கால்சியம் நைட்ரைடு
கால்சியம் நைட்ரைடு (Calcium nitride) என்பது Ca3N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். பல்வேறு வடிவங்களில் (சமவளவு) காணப்பட்டாலும் α- கால்சியம் நைட்ரைடு பொதுவாகக் கிடைக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கல்சியம் நைட்ரைடு
| |
வேறு பெயர்கள்
முக்கால்சியம் இருநைட்ரைடு
| |
இனங்காட்டிகள் | |
12013-82-0 | |
EC number | 234-592-9 |
பப்கெம் | 3387080 |
பண்புகள் | |
Ca3N2 | |
வாய்ப்பாட்டு எடை | 148.25 g·mol−1 |
தோற்றம் | செம்பழுப்பு படிகத் திண்மம் |
அடர்த்தி | 2.670 கி/செ.மீ3 2.63 கி/செ.மீ3 (17 °செ) |
உருகுநிலை | 1,195 °C (2,183 °F; 1,468 K) |
சிதைவடைகிறது. | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cI80 |
புறவெளித் தொகுதி | Ia-3, எண். 206 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமைப்பு
தொகுα-கால்சியம் நைட்ரைடு, மாங்கனீசு இரும்பு ஆக்சைடு கனிமமான பிக்சுபைட்டு கனிமத்தின் எதிர் வடிவமைப்பை ஏற்றுள்ளது. Mn2O3 சேர்மத்தின் அமைப்பைப் போல ஆனால் அயனிகளின் இருப்பிடங்கள் அதனிலிருந்து மாறுபட்டு தலைகீழாக அமைந்திருக்கும். கால்சியம் (Ca2+) அயனிகள் ஆக்சைடின் (O2−) இடத்திலும் நைட்ரைடு (N3−) அயனிகள் மாங்கனீசு அயனிகளின் (Mn3+) இருப்பிடத்திலும் மாறுபட்டுக் காணப்படுகின்றன. இவ்வமைப்பில் Ca2+ நான்முகத் தளங்களிலும் நைட்ரைடு மையங்கள் இரண்டு வேறுபட்ட எண்முக தளங்களிலும் ஆக்ரமித்துள்ளன[1]
தயாரிப்பு மற்றும் வினைகள்
தொகுகால்சியம் காற்றில் எரியும்போது உருவாகும் கால்சியம் ஆக்சைடுடன் சேர்ந்து கால்சியம் நைட்ரைடு உருவாகிறது. மற்றும் பகுதிப்பொருட்கள் நேரடியாக வினைபுரியும் போதும் கால்சியம் நைட்ரைடு உருவாகிறது.[2]
- 3 Ca + N2 → Ca3N2
கால்சியம் நைட்ரைடு தண்ணீருடன் வினைபுரிந்து அல்லது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அமோனியா மற்றும் கால்சியம் ஐதராக்சைடு சேர்மங்களைக் கொடுக்கிறது.:[3]
- Ca3N2 + 6 H2O → 3 Ca(OH)2 + 2 NH3
சோடியம் ஆக்சைடு போலவே கால்சியம் நைட்ரைடும் 350 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் ஐதரசனை ஈர்த்துக் கொள்கிறது.
- Ca3N2 + 2 H2 → 2 CaNH + CaH2
மேற்கோள்கள்
தொகு- ↑ Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
- ↑ P. Ehrlich “Calcium, Strontium, Barium Nitrides Ca3N2, Sr3N2, Ba3N2” in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 940-1.
- ↑ Heyns, A. (1998). "The Vibrational Spectra and Decomposition of α-Calcium Nitride (α-Ca3N2) and Magnesium Nitride (Mg3N2)". Journal of Solid State Chemistry 137 (1): 33–41. doi:10.1006/jssc.1997.7672. Bibcode: 1998JSSCh.137...33H.