கால்சியம் பெராக்சைடு
கால்சியம் பெராக்சைடு (Calcium peroxide) என்பது CaO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் ஈராக்சைடு, கால்சியம் டையாக்சைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. கால்சியத்தின் Ca2+. பெராக்சைடு (O22−) உப்பாக இது கருதப்படுகிறது. வணிக மாதிரிகள் மஞ்சள் நிறமாக இருக்கலாம், ஆனால் தூய சேர்மம் வெண்மையானது. கால்சியம் பெராக்சைடு தண்ணீரில் கிட்டத்தட்ட கரையாது.[3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
1305-79-9 | |
ChEBI | CHEBI:48233 |
ChemSpider | 14096 |
EC number | 215-139-4 |
Gmelin Reference
|
674257 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C18566 |
பப்கெம் | 14779 |
வே.ந.வி.ப எண் | EW3865000 |
| |
UNII | 7FRO2ENO91 |
UN number | 1457 |
பண்புகள் | |
CaO2 | |
வாய்ப்பாட்டு எடை | 72.08 g·mol−1 |
தோற்றம் | வெள்ளை அல்லது மஞ்சள் தூள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 2.91 கி/செ.மீ3 |
உருகுநிலை | ~ 355 °C (671 °F; 628 K) (சிதைவடைகிறது) |
சிதைவடைகிறது | |
காடித்தன்மை எண் (pKa) | 12.5 |
-23.8·10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.895 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம்[2] |
புறவெளித் தொகுதி | Pna21 |
ஒருங்கிணைவு வடிவியல் |
8[2] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H272, H315, H319, H335 | |
P210, P220, P221, P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313 | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
>5000 மி.கி/கி.கி (வாய்வழி, எலி) >10000 மி.கி/கி.கி (தோல்வழி, எலி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கால்சியம் ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இசுட்ரோன்சியம் பெராக்சைடு பேரியம் பெராக்சைடு சோடியம் பெராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கட்டமைப்பு
தொகுஒரு திடப்பொருளாக, கால்சியம் பெராக்சைடு சிதைவுக்கு எதிராக ஒப்பீட்டளவில் நிலையானது. தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது நீராற்பகுப்பு அடைந்து ஆக்சிசனை வெளியிடுகிறது. அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் ஐதரசன் பெராக்சைடை உருவாக்குகிறது.
தயாரிப்பு
தொகுகால்சியம் பெராக்சைடு கால்சியம் உப்புகளுடன் ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் கால்சியம் பெராக்சைடு தயாரிக்கப்படுகிறது.
- Ca(OH)2 + H2O2 → CaO2 + 2 H2O
கால்சியம் ஐதராக்சைடுடன் நீர்த்த ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கால்சியம் பெராக்சைடின் எண்ணீரேற்று வீழ்படிவாகிறது. சூடுபடுத்தினால் இது நீர்நீக்கத்திற்கு உட்படுகிறது.
பயன்கள்
தொகுவிலைமதிப்பற்ற உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுப்பதை மேம்படுத்த இது முக்கியமாக ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் இரண்டாவது முக்கிய பயன்பாட்டில், இது ஐ எண் ஐ930 என்ற குறியீட்டுடன் உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மாவு வெளுக்கும் முகவராகவும் மேம்படுத்தும் முகவராகவும் கால்சியம் பெராக்சைடு பயன்படுத்தப்படுகிறது.[3]
விவசாயத்தில் நெல் விதைகளை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்ய கால்சியம் பெராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. மேலும், மீன் வளர்ப்பில் நீரை ஆக்சிசனேற்றம் செய்யவும் கிருமிநீக்கம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு துறையில் இது மண் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு மக்னீசியம் பெராக்சைடுக்கு ஒத்த முறையில் இது பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோலியத்தால் மாசுபடுத்தப்பட்ட மண் மற்றும் நிலத்தடி நீரை மேம்படுத்தப்பட்ட தளத்தில் உயிரியல் திருத்தம் மூலம் மீட்டெடுக்கவும் இது பயன்படுகிறது. சில பல் மருந்துகளின் உட்கூறாகவும் இது உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Substance Registry Services | US EPA".
- ↑ 2.0 2.1 Zhao, X.; Nguyen, M.C.; Wang, C.Z.; Ho, K.M. (2013). "Structures and stabilities of alkaline earth metal peroxides XO2 (X = Ca, Be, Mg) studied by a genetic algorithm". RSC Advances 3 (44): 22135. doi:10.1039/C3RA43617A. Bibcode: 2013RSCAd...322135Z. https://zenodo.org/record/1230026.
- ↑ 3.0 3.1 "Peroxo Compounds, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, 2005, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_177.pub2