காளிங்கராயன் அணை

காளிங்கராயன் அணை (Kalingarayan Anicut) தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் துணை ஆறான பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையாகும் பவானி ஆறும் காவிரி ஆறும் சந்திக்கும் பவானியின் கூடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது.[1]. காளிங்கராயன் கால்வாய் இதிலிருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டத்தை செழிக்கச் செய்கிறது.

காளிங்கராயன் அணை
காளிங்கராயன் அணை is located in தமிழ் நாடு
காளிங்கராயன் அணை
Location of காளிங்கராயன் அணை in தமிழ் நாடு
நாடுஇந்தியா
புவியியல் ஆள்கூற்று11°26′31.8″N 77°40′35.5″E / 11.442167°N 77.676528°E / 11.442167; 77.676528
நிலைசெயல்பாட்டில் உள்ளது
திறந்தது1283; 741 ஆண்டுகளுக்கு முன்னர் (1283)
அணையும் வழிகாலும்
வகைதடுப்பணை
நீளம்902.5 m (2,961 அடி)

வரலாறு

தொகு

காளிங்கராயன் என்ற கொங்கு நாட்டுத் தலைவனால் 13 ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. வேளாண்தொழிலுக்குப் பயன்படும் விதமாக காளிங்கராயன் வாய்க்காலுக்குத் தண்ணீரைத் திருப்பி விடுவதற்காக இவ்வணை கட்டப்பட்டது. பவானி ஆறு, நொய்யல் ஆறு இரண்டையும் இணைக்கும் இந்த அணை, பண்டைய ஆறுகளை இணைக்கும் பண்டையத் திட்டங்களுள் ஒன்றாக விளங்குகிறது. [2] [3]

மேம்பாடு

தொகு

2016 இல் தமிழ்நாடு அரசு, இந்த அணையின் கரைகளை வலுப்படுத்தி மேம்படுத்தியது.[4]

சுற்றுலாத் தலம்

தொகு

தமிழ்நாடு அரசு சுற்றுலா ஈர்ப்புத் தலமாக்கத் திட்டமிட்டுள்ளது.[5] இங்கு ஒரு குழந்தைகள் பூங்கா, நினைவு மண்டபமும் சிலையும் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2017 இல் திறக்கப்பட உள்ளது.[6] [7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kalingarayan Anicut A00214". India-WRIS. பார்க்கப்பட்ட நாள் 23 December 2016.
  2. Kalingarayan Canal Water Quality Study பரணிடப்பட்டது 2017-07-13 at the வந்தவழி இயந்திரம், |publisher-Central Pollution Control Board, accessdate=23 December 2016
  3. "Memorial in Honour of Kalingarayan-CM". New Indian Express. http://www.newindianexpress.com/states/tamil-nadu/2013/sep/20/Memorial-in-honour-of-Kalingarayan-CM-518235.html. பார்த்த நாள்: 23 December 2016. 
  4. "Strengthening work of Kalingarayan Anicut in concluding". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Strengthening-work-of-Kalingarayan-Anicut-at-concluding-phase/article14413336.ece. பார்த்த நாள்: 23 December 2016. 
  5. "Kalingarayan sluices opened, Erode-all set for farming". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kalingarayan-sluices-opened-erode-all-set-for-farming/article2119326.ece. பார்த்த நாள்: 23 December 2016. 
  6. "Soon, a memorial for Kongu chief who built a grand canal". Times of India. http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Soon-a-memorial-for-Kongu-chief-who-built-grand-canal/articleshow/21813475.cms. பார்த்த நாள்: 23 December 2016. 
  7. "Kalingarayan Manimandapam project progressing well". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Kalingarayan-Manimandapam-project-progressing-well/article14556761.ece. பார்த்த நாள்: 23 December 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிங்கராயன்_அணை&oldid=3760802" இலிருந்து மீள்விக்கப்பட்டது