காவேரி பெருவாய்

காவேரி பெருவாய் என்பது இந்திய விஞ்ஞானிகளான கே. ஆர். சுப்ரமண்யா மற்றும் கே.என். பிரகாஷ் நரசிம்மா என்பவர்களால் அடையாளம் காணப்பட்ட ஒரு விண்கல் வீழ் பள்ளமாகும். இது 800 முதல் 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சிறுகோள் தாக்கத்தால் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. நீலகிரிக்கும் கொடைக்கானலுக்கும் இடையில் அமைந்துள்ள இப்பகுதி தெற்கு இந்தியாவில் உள்ளது. இப்பள்ளம் 120 கிலோமீட்டர் விட்டம் கொண்டது என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. காவேரி பெருவாயை செயற்கைக்கோள் படங்கள் மூலம் மட்டுமே காட்சிப்படுத்த முடியும். இது உலகின் நான்காவது பெரிய விண்கல் வீழ் பள்ளமாகும். [1]

பெருவாயை (சிவப்பு வட்டம்) மலைகள் எவ்வாறு சூழ்ந்துள்ளன என்பதை கவனிக்கலாம்

ஆராய்ச்சியாளர்கள் பற்றிய குறிப்பு தொகு

  • கே. ஆர். சுப்ரமண்யா - கடற் சார்ந்த புவியியல் முன்னாள் பேராசிரியர், மங்களூர் பல்கலைக்கழகம், மங்களூர்
  • கே.என்.பிரகாஷ் நரசிம்மா - பூமி அறிவியல் துறை, ப்ரீகாம்ப்ரியன் புவியியலில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான மையம், மைசூர் பல்கலைக்கழகம், மனசகங்கோத்ரி, மைசூர்

குறிப்புகள் தொகு

  1. Subrahmanya, K. R.; Prakash Narasimha, K. N. (1 October 2017). "Kaveri crater – An impact structure in the Precambrian terrain of southern India". Journal of the Geological Society of India 90: 387–395. doi:10.1007/s12594-017-0733-5. 

வெளி இணைப்புகள் தொகு

  • பூமி தாக்க தரவுத்தளம் - நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் கிரக மற்றும் விண்வெளி அறிவியல் மையத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பூமி தாக்க தளங்களின் பட்டியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_பெருவாய்&oldid=3075070" இலிருந்து மீள்விக்கப்பட்டது