கா. ப. கோபால் ராவ்

இந்தியக் கடற்படைத் தளபதி

தளபதி காசர்கோடு பட்னசெட்டி கோபால் ராவ் (Kasargod Patnashetti Gopal Rao) மகா வீர சக்கரம், விசிட்ட சேவா பதக்கம் (13 நவம்பர் 1926 - 9 ஆகஸ்ட் 2021) ஓர் இந்தியக் கடற்படை அதிகாரியாவார். இவர், இந்திய-பாக்கித்தான் போரில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைக் கொண்டிருந்தார். இந்தப் போரில் கராச்சி துறைமுகத் தாக்குதல் மிக முக்கியமானது. பாகித்தானிலிருந்து கடல் வழியாக துருப்புகளும், ஆய்தங்களும் வர வழியில்லாமல் செய்தார். இதனால் இலட்சக்கணக்கான கிழக்கு பாக்கித்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். இந்த திரிசூலம் படைநடவடிக்கைக்காக இவருக்கு முதல் முறையாக மகா வீர சக்கரம் விருது வழங்கப்பட்டது.[2]

கமாடோர்

காசர்கோடு பட்னசெட்டி கோபால் ராவ்

பிறப்பு(1926-11-13)13 நவம்பர் 1926
மங்களூர், தென் கன்னட மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்போது கருநாடகம்)
இறப்பு9 ஆகத்து 2021(2021-08-09) (அகவை 94)
சென்னை, தமிழ்நாடு, India
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியக் கடற்படை
தரம் கமாடோர்
படைப்பிரிவுமேற்குக் கடற்படை
போர்கள்/யுத்தங்கள்
விருதுகள் மகா வீர சக்கரம்[1]
விசிட்ட சேவா பதக்கம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கோபால் ராவ், 13 நவம்பர் 1926இல் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் இராவ் பகதூர் கே. பி. ஜனார்த்தன் ராவ். இவரது மூத்த சகோதரர் மேஜர். கே. பி. எஸ். இராவ் இரண்டாம் உலகப் போரின் போது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார்.

இராணுவ வாழ்க்கை தொகு

இவர், 21 ஏப்ரல் 1950 அன்று இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டார். ஜனவரி 1971இல், இவரது சிறப்பான சேவைக்காக விசிட்ட சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

1971 போரின் போது, இவர் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களுக்குத் தளபதியாக இருந்தார். திரிசூலம் படைநடவடிக்கையின் போது கராச்சி துறைமுகத்தை 4 டிசம்பர் 1971இல் தாக்கிய படைக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தது. இரண்டு கப்பல்களும் தனது உயர்ந்த கதிரலைக் கும்பா மூலம் இலக்கு கையகப்படுத்துதலை நடத்துவதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பிற்கும் பணிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், இரண்டு பாக்கித்தானியக் கப்பல்களையும், ஒரு சரக்குக் கப்பலையும், எரிபொருள் கொட்டகைகளையும் பிற நிறுவல்களையும் மூழ்கடித்தது.[3] [4] இந்த சிறந்த பணிக்காக, இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த இராணுவ அலங்காரமான மகா வீர சக்கரம் வழங்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இவர் ஆகஸ்ட் 9, 2021 அன்று தென்னிந்திய நகரமான சென்னையில் தனது 94 வயதில் இறந்தார்.[5]

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "CDR KP GOPAL RAO MAHA VIR CHAKRA". Gallantry Awards, Ministry of Defence, Govt of India website.
  2. Shivakumar, C. (9 August 2021). "Indian Navy war hero Commodore Gopal Rao who led Karachi Port attack in 1971 dies at 95". https://www.newindianexpress.com/cities/chennai/2021/aug/09/indian-navy-war-hero-commodore-gopal-rao-who-led-karachi-port-attack-in-1971-dies-at-95-2342310.html. 
  3. "The Veer Ahir who set Karachi ablaze". 23 June 2013. https://www.hindustantimes.com/chandigarh/the-veer-ahir-who-set-karachi-ablaze/story-Qn5CTypParRpoT36AGQeoJ.html. 
  4. Chakravorty, B. (1995) (in en). Stories of Heroism: PVC & MVC Winners. 180: Allied Publishers. பக். 387. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170235163. https://books.google.com/books?id=uzizVBSb4YsC&pg=PA180&lpg=PA180&dq=Kasargod+Patnashetti+Gopal+Rao#q=Kasargod%20Patnashetti%20Gopal%20Rao. 
  5. "War hero who bombarded Karachi port in 1971 no more". The Indian Express (in ஆங்கிலம்). 2021-08-09. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._ப._கோபால்_ராவ்&oldid=3246763" இலிருந்து மீள்விக்கப்பட்டது