கிரண் பலியான்
கிரண் பலியான் மீரட்டைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் 2020 இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 17.14 மீட்டர் தூரம் எறிந்து, பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று தேசிய சாதனை படைத்தார். இவர் 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய தடகள அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | மார்ச்சு 6, 1999 | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
விளையாட்டு | குண்டு எறிதல் | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி
தொகுகிரண் பலியான் 1999 இல் பிறந்தார். இவர் உத்தரப் பிரதேசம் முசாபர்நகர் மாவட்டம் புர்பலியான் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை மீரட் போக்குவரத்து காவல்துறையில் தலைமை காவலராக உள்ளார்.[1]
வாழ்க்கை
தொகு2015: நவம்பரில், ராஞ்சியில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட இந்திய தேசிய தடகள சாம்பியன் போட்டியில், 12.49 மீட்டர் தூரம் எறிந்தார்.[2]
2016: நவம்பரில், கோயம்புத்தூர் இந்திய 18 வயதுக்குட்பட்ட இந்திய தேசிய தடகள சாம்பியன் போட்டியில் 14.62 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
2017: மே 6 அன்று ஓப்ராவில் நடந்த ஒரு தடகள சந்திப்பில் அவர் 15 மீட்டர் தூரம் எறிந்தார். பின்னர் நவம்பர் 2017 இல், விஜயவாடாவில் நடந்த 20 வயதுக்குட்பட்ட இந்திய தேசிய தடகள சாம்பியன் போட்டியில் 14.54 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். ஒரு மாதம் கழித்து, டிசம்பரில் மங்களகிரியில் நடந்த இந்திய தேசிய தடகள சாம்பியன் போட்டியில், 14.37 மீட்டர் தூரம் எறிந்து மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தார்.[2]
2018: ஏப்ரலில், கோயம்புத்தூரில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய தேசிய தடகள சாம்பியன் போட்டியில் 15.23 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தைப் பிடித்தார்.[2] அதே ஆண்டில் அவர் இலங்கையில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார், மேலும் கொழும்பில் நடந்த தெற்காசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன் போட்டியில் 14.77 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தைப் பிடித்தார். பின்னர், அவர் ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன் போட்டியில் ஐந்தாவது இடத்தை மட்டுமே பெற முடிந்தது.[2]
2020: 2020 இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 17.14 மீட்டர் தூரம் எறிந்து, பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று தேசிய சாதனை படைத்தார்.[3] அதே ஆண்டு, சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, 2020 தேசிய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியில் தங்கம் வென்றார்.[4]
2023: 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 17.36 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shot putter Kiran Baliyan wins India's first athletics medal in Asian Games". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-09-29. பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Kiran BALIYAN | Profile | World Athletics". worldathletics.org. பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.
- ↑ "मेरठ की किरन बालियान ने रिकार्ड के साथ जीता गोल्ड, पारुल चौधरी को भी स्वर्ण". Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.
- ↑ "Inter-university athletics | Narendra, Komal and Jyothi win second golds" (in en-IN). https://www.thehindu.com/sport/other-sports/inter-university-athletics-narendra-komal-and-jyothi-win-second-golds/article30487399.ece.
- ↑ "Hangzhou Asian Games | Kiran Baliyan ends India’s 72-year wait for a women’s shot put medal". https://www.thehindu.com/sport/athletics/hangzhou-asian-games-shot-putter-kiran-baliyan-wins-indias-first-athletics-medal/article67362930.ece.