கிரா நாராயணன்
கிருபா என்ற "கிரா" நாராயணன் [1] (பிறப்பு 26 ஜனவரி 1994),இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நாடக நடிகையும், இசைக்கலைஞரும் விளையாட்டு வர்ணனையாளருமாவார். மலேசியா நாட்டில் படித்து வளர்ந்த இவர், ஸ்டார் விளையாட்டு அலைவரிசையில் மட்டைப்பந்தாட்ட விளையாட்டினை தொகுத்து வர்ணனை செய்ததற்காகவும், பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி நிறுவனம் மற்றும் நுழைவுச்சீட்டு இணைய தளமான புக் மை ஷோ நிறுவனமும் இணைந்து 2011 ம் ஆண்டு நடத்திய மிகப்பெரும் இசைவடிவில் நிகழ்த்தப்பட்ட நாடக நிகழ்ச்சியான அலாவுதீனில் கதாநாயகியான இளவரசி ஜாஸ்மின் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காகவும் எல்லாராலும் அறியப்பட்டுள்ளார்,
கிரா நாராயணன் | |
---|---|
பிறப்பு | கிருபா நாராயணன் ஜனவரி 26, 1994 |
தேசியம் | இந்திய மலேசியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி |
பணி | மேடை நாடக கலைஞர், திரைப்பட நடிகை |
அறியப்படுவது | இளவரசி ஜாஸ்மின், மட்டைப்பந்து விளையாட்டு தொகுப்பாளர். |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகிரா, மலேசியாவின் கோலாலம்பூரில் வளந்தரவராவார். அவரது குழந்தைப் பருவத்திலேயே கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியம் போன்றவைகளைக் கற்றுள்ளார், மேலும் ஓவியக்கலை மற்றும் டென்னிஸ் விளையாட்டுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு காணப்பட்ட கிரா தனது 13 வயதில் அவரது பள்ளியில் நடத்தப்பெற்ற இசைநாடகத்தில் நடித்தபோது நடிப்பை தொழிலாகக் கொள்வதாக உணர்ந்துள்ளார். கார்டன் இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த கிரா,[1]இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில், உளவியலில் இளங்கலை படிப்பை முடித்துள்ளார், அதே நேரத்தில் நியூயார்க் பிலிம் அகாடமியில் (நியூயார்க்) திரைப்படத்திற்கான நடிப்பில் டிப்ளமோ பெற்றுள்ளார், அத்தோடு கிரேட் பிரிட்டனின் (லண்டன்) நேஷனல் யூத் தியேட்டரில் உறுப்பினராகவும் பதிவு செய்துள்ளார்,
திரைப்பட வாழ்க்கை
தொகுதொலைக்காட்சி
தொகுவிவோ ப்ரோ கபடி பாகம் 7 (2019) நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியாவிற்கான ஆங்கில தொலைக்காட்சியில் விளையாட்டு தொகுப்பாளராக முதன்முதலாக திரைத்துறையில் கிரா அறிமுகமானார். பின்னர் அவர் மாயாண்டி லாங்கர் இல்லாதபோது " மட்டைப்பந்தாட்ட நிகழ்ச்சியிலும்" தொகுப்பாளராக அவ்வப்போது நடத்தியுள்ளார். 2020 ம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் 2021 ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா/இங்கிலாந்து டெஸ்ட், ODI மற்றும் T20I தொடர்களை தொலைக்காட்சிகளில் தொகுத்து வழங்கினார். மட்டைப்பந்தாட்ட விளையாட்டின் பிரபலங்களும், வீரர்களுமான சுனில் கவாஸ்கர், பிரையன் லாரா, பிரட் லீ, விவிஎஸ் லக்ஷ்மண், கவுதம் கம்பீர், கிரீம் ஸ்வான், லிசா ஸ்தலேகர், இர்பான் பதான், ஹர்பஜன் சிங் மற்றும் டீன் ஜோன்ஸ் போன்றோருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார்.[2][3][4]
நாடக மேடை
தொகுபொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி நிறுவனம் மற்றும் நுழைவுச்சீட்டு இணைய தளமான புக் மை ஷோ நிறுவனமும் இணைந்து 2011 ம் ஆண்டு நடத்திய மிகப்பெரும் இசைவடிவில் நிகழ்த்தப்பட்ட நாடக நிகழ்ச்சியான அலாவுதீனில் கதாநாயகியான இளவரசி ஜாஸ்மின் என்ற பாத்திரத்தில் இயக்குனர் டெஸ் ஜோசப்பால் [5] தேர்வு செய்யப்பட்டு நடித்ததற்காகவும் எல்லாராலும் அறியப்பட்டுள்ளார்.[6] இது அந்நிறுவனம் 1992 ம் ஆண்டில் தயாரித்து வெளியிட்ட அலாவுதீன் என்ற திரைப்படத்தின் மேடை நாடகமாகும்.[7][8][9][10]
2019 ஆம் ஆண்டில் வெளியான, ரேல் பதம்ஸியின் மை ஃபேர் லேடி" என்ற இசை நாடகத்தில் எலிசா டூலிட்டில் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரமாக நடித்ததன் மூலம், இதே கதாபாத்திரத்தில் முன்னதாக நடித்த ஆட்ரி ஹெப்பர்ன் மற்றும் ஜூலி ஆண்ட்ரூஸ் போன்றோரைப் பின்பற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.[11][12][13]
வெப் சீரிஸ்
தொகு2019 ஆம் ஆண்டில் வெளியான மைனஸ் ஒன் என்ற வலைத் தொடரில், இந்திய இணைய நட்சத்திரங்களான ஆயிஷா அகமது மற்றும் ஆயுஷ் மெஹ்ராவுக்கு இணையாக [14] தேவிகா/லாவண்யா என இருவேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது..
திரைப்படம்
தொகுகிரா, 2018 ஆம் ஆண்டு வெளியான கூத்தன் என்ற இசையைப் பற்றிய தமிழ் படத்தில் ஸ்ரீ தேவியாக (பாரம்பரிய நடனக் கலைஞர்) திரைப்படங்களில் அறிமுகமாகியுள்ளார்., இப்படத்தில் இவர், தமிழ் திரையுலகில் பிரபலமான ஊர்வசி, பாக்யராஜ் மற்றும் மனோபாலா போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.[15]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Alumna Kira (Krupa) Narayanan to play Princess Jasmine in Disney India's 'Aladdin' The Musical". alumni.gardenschool.edu.my. பார்க்கப்பட்ட நாள் 7 March 2018.
- ↑ "Kira Narayanan | Latest News & Updates at DNAIndia.com". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
- ↑ "From Kira Narayanan, Neroli Meadows to Sanjana Ganesan: Here's the full list of IPL 2021 anchors". CricketTimes.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
- ↑ "Who is Kira Narayanan? The TV anchor who is grabbing eyeballs during India vs England Test series | Latest News & Updates at DNAIndia.com". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
- ↑ "Aladdin Comes of Age: A musical version of the Disney movie". The Indian Express (in Indian English). 3 July 2018. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
- ↑ "In Broadway style: Aladdin, genie, magic lamp in Mumbai soon to grant you a wish". www.hindustantimes.com (in ஆங்கிலம்). 14 April 2018. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
- ↑ "Aladdin's tale on stage". dna (in ஆங்கிலம்). 31 March 2018. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
- ↑ "5 Things You Should Know About Disney's Aladdin, The Stage Musical". www.bookmyshow.com.
- ↑ Kohli, Diya (13 April 2018). "Fly to a whole new Arabian Night". liveMint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
- ↑ "Review: 'Aladdin' and His Genie Mesmerise With Bambaiyya Flavour". The Quint (in ஆங்கிலம்). 20 April 2018. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
- ↑ "My Fair Lady set for the stage in city, soon - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-24.
- ↑ "Malavika's Mumbaistan: Wouldn't it be lovely?". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-07-04. பார்க்கப்பட்ட நாள் 2019-07-24.
- ↑ "My Fair Lady is like a mini vacation to London in 1912: Kira Narayanan". Latest Indian news, Top Breaking headlines, Today Headlines, Top Stories | Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-24.
- ↑ "Writeous Studios and Qyuki Digital launch quirky web series 'Minus One'". www.buzzincontent.com. September 20, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-10-04.
- ↑ Senthilkumaran, Su (11 October 2018). "கூத்தன் @ விமர்சனம்". Namma Tamil Cinema (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.