கிருயெல்லா

கிருயெல்லா அல்லது க்ருயெல்லா (ஆங்கில மொழி: Cruella) என்பது 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு குற்றவியல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது 'டோடி சிமித்' என்பவர் எழுத்தில் 1956 ஆம் ஆண்டு வெளியான புதின கதையான தி ஹண்ட்ரெட் அண்ட் ஒன் டால்மேஷனின்[3] தோன்றியா 'கிருயெல்லா டே வில்' என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ், மார்க் பிளாட் புரொடக்ஷன்ஸ் மற்றும் கன் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.

கிருயெல்லா
இயக்கம்கிரேக் கில்லெஸ்பி
தயாரிப்பு
 • ஆண்ட்ரூ கன்
 • மார்க் பிளாட்
 • கிறிஸ்டின் பர்
மூலக்கதைதி ஹண்ட்ரெட் அண்ட் ஒன் டால்மேஷன்
படைத்தவர் டோடி சிமித்
திரைக்கதை
 • டானா பாக்சு
 • டோனி மெக்னமாரா
இசைநிக்கோலஸ் பிரிட்டெல்
நடிப்பு
ஒளிப்பதிவுநிக்கோலஸ் கரகட்சனிஸ்
படத்தொகுப்புடாடியானா எஸ். ரீஜெல்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுமே 18, 2021 (2021-05-18)(எல் கேபிடன் தியேட்டர் )
மே 28, 2021 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$100–200 மில்லியன்[1][2]
மொத்த வருவாய்$224.4 மில்லியன்

இப்படமானது கிரேக் கில்லெஸ்பி என்பவர் இயக்கத்தில், டானா பாக்சு மற்றும் டோனி மெக்னமாரா ஆகியோரின் திரைக்கதையில் அலின் பிரோஷ் மெக்கென்னா, கெல்லி மார்செல் மற்றும் இசுடீவ் ஜிஸிஸ் கதையில் உருவாக்கப்பட்டுளள்து.[4] எம்மா ஸ்டோன் என்பவர் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் எம்மா தாம்சன், ஜோயல் ஃப்ரை, பால் வால்டர் ஹவுசர், எமிலி பீச்சாம், கிர்பி ஹோவெல் பாப்டிஸ்ட், மார்க் ஸ்ட்ரோங் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படமானது 1970 ஆம் ஆண்டு லண்டனில் நடப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இது எஸ்டெல்லா மில்லர் என்பவரையும் அவரது கனவான ஆடை வடிவமைப்பு பற்றியும் சொல்லப்படுகின்றது. இவர் எப்படி எதனால் 'கிருயெல்லா டே வில்' என அழைக்கப்பட்டு ஒரு பிரபல ஆடை வடிவமைப்பாளராக மாற வழிவகுக்குகின்றது என்பது தான் கதை.[5]

கிருயெல்லா படம் லாஸ் ஏஞ்சல்ஸில் 18 மே 2021 அன்று திரையிடப்பட்டது, கோவிட்-19 பெருந்தொற்று நோய் தொடங்கிய பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதனால் பலரின் கவனம் இப்படம் மீது இருந்தது, அதனால் பெரிய சிவப்பு கம்பள நிகழ்வு மூலம் அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளிலும் மற்றும் மே 28 அன்று டிஸ்னி+ ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்த படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான நேர்மறை விமர்சனங்களை பெற்று உலகளவில் $224 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது, இது 2021 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த ஏழாவது படமாக அமைந்தது. இந்த படம் இந்தியாவில் ஆகஸ்ட் 27 இல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் என்ற ஓடிடி தளத்தில் வெளியானது.[6]

மேற்கோள்கள் தொகு

 1. Mendelson, Scott (May 29, 2021). "Box Office: 'Cruella' Nabs Non-Fabulous $7.7 Million Friday". Forbes இம் மூலத்தில் இருந்து June 8, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210608141320/https://www.forbes.com/sites/scottmendelson/2021/05/29/box-office-cruella-emma-stone-disney-nabs-8-million-friday/?sh=cdb8a172e83b. 
 2. Bahr, Lindsey (May 28, 2021). "In a Punk 'Cruella,' Dogs Play Second Fiddle to the Designs". NBC News இம் மூலத்தில் இருந்து June 8, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210608141322/https://www.nbcbayarea.com/news/local/in-a-punk-cruella-dogs-play-second-fiddle-to-the-designs/2557387/. 
 3. Radish, Christina (May 3, 2021). "'Cruella' Costume Designer Jenny Beavan Explains How She Made Pre-Dalmatian Fashion for the Disney Prequel". Collider இம் மூலத்தில் இருந்து May 25, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210525164814/https://collider.com/cruella-costumes-jenny-beavan-interview/. பார்த்த நாள்: May 25, 2021. 
 4. "Cruella". Writers Guild of America West. January 25, 2021 இம் மூலத்தில் இருந்து February 12, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210212092057/https://directories.wga.org/project/1185562/cruella/. 
 5. Navarro, Melanie (2021-07-03). "Villains as our new heroes: Review on Disney's "Cruella"" (in en-US). https://www.sbstatesman.com/2021/07/02/villains-as-our-new-heroes-review-on-disneys-cruella/. 
 6. "When Will Cruella Release On OTT In India? Here Are All The Details Of This Film" (in en). https://www.republicworld.com/entertainment-news/hollywood-news/when-will-cruella-release-on-ott-in-india-here-are-all-the-details-of-this-film.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருயெல்லா&oldid=3267041" இருந்து மீள்விக்கப்பட்டது