கிரெக் ருதர்போர்ட்

ருதர்போர்ட் (Greg Rutherford)(பிறப்பு:1986 நவம்பர் 17) [1] இவர் ஓர் ஓய்வுபெற்ற பிரித்தானிய [2] தடகள வீரராவார். இவர் நீளம் தாண்டுதலில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் ஒலிம்பிக்கிலும், உலகப்போட்டிகளிலும், ஐரோப்பிய போட்டிகளிலும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் இங்கிலாந்தையும்பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் 2019 ஆம் ஆண்டிற்கான மாஸ்டர்செப் பிரபல வெற்றியாளருமாவார்.

கிரெக் ருதர்போர்ட்
2012 கோடை ஒலிம்பிக்கின்
வெற்றி விழாவில் ருதர்போர்ட்
தனிநபர் தகவல்
முழு பெயர்கிரிகோரி ஜேம்சு ருதர்போர்ட்
பிறப்பு17 நவம்பர் 1986 (1986-11-17) (அகவை 38)
மில்டன் கெய்னசு, இங்கிலாந்து
உயரம்1.88 m (6 அடி 2 அங்)
எடை87 kg (192 lb)
விளையாட்டு
நாடு பெரிய பிரித்தானியா
 இங்கிலாந்து
கழகம்மார்ஷல் மில்டன் கெய்ன்ஸ் தடகள சங்கம்
தொழில்முறையானது2005
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)நீளம் தாண்டுதல் 8.51 நிமிடம் (2014)
100 மீ 10.26
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் தடகளம்
நாடு  பெரிய பிரித்தானியா
ஒலிம்பிக் விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2012 இலண்டன் நீளம் தாண்டுதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 இரியோ டி செனீரோ நீளம் தாண்டுதல்
உலகப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2015 பெய்ஜிங் நீளம் தாண்டுதல்
ஐரோப்பியப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 சூரிச் நீளம் தாண்டுதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 ஆம்ஸ்டர்டாம் நீளம் தாண்டுதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2006 கோத்தன்பர்க் நீளம் தாண்டுதல்
ஐரோபிய இளையோர் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 கௌனாசு நீளம் தாண்டுதல்
நாடு  இங்கிலாந்து
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 கிளாக்சோ நீளம் தாண்டுதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 தில்லி நீளம் தாண்டுதல்

இவர், 2012 கோடைகால ஒலிம்பிக், 2014 பொதுநலவாய விளையாட்டு, 2014 , 2016 ஐரோப்பிய தடகளப் போட்டிகள், 2015 உலக தடகளப் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும் இந்த நிகழ்வில் 2015 ஐஏஏஎஃப் டயமண்ட் லீக் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். 2015 செப்டம்பர் 4 முதல், சூரிச்சில் நான்காவது நிகழ்வு வெற்றியுடன் இவரது டயமண்ட் லீக் வெற்றி உறுதி செய்யப்பட்டபோது, சூன் 2016 இல் நடந்த பிரிட்டிசு தடகளப் போட்டிகளிலிருந்து இவர் விலகும் வரை, இவர் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு உயரடுக்கு வெளிப்புற பட்டத்தையும் பெற்றார். தேசிய, கண்ட, உலக, ஒலிம்பிக், டயமண்ட் லீக் மற்றும் பொதுநலவாயம் போன்றவை. இவர் தற்போதைய பிரித்தானிய சாதனை படைத்தவராக உள்ளார். வெளியரங்கங்களிலுன், உள்ளரங்கரங்களிலும், இந்த நிகழ்விற்காக இவரது தனிப்பட்ட சிறப்புகள் 8.51 மீ (வெளிப்புறம்) மற்றும் 8.26 மீ (உட்புறம்).

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் பிளெட்ச்லே என்ற இடத்தில் வளர்ந்தார். அங்கு இவர் டூ மைல் ஆஷ் தொடக்கப்பள்ளியில் பயின்றார். பின்னர், டென்பிக் பள்ளிக்குச் சென்றார். ஒரு இளைஞராக இவர் கால்பந்து , இரக்பி, பூப்பந்தாட்டம் உள்ளிட்ட பல விளையாட்டுகளை விளையாடினார். இவர் தனது 14 வயதில் பிரீமியர் லீக் கால்பந்து சங்கமான ஆஸ்டன் வில்லாவுடன் தடகளத்தில் ஒரு தொழில் முறை வீரரக விளையாட்டைத் தொடர முடிவு செய்தார்.

இவர் கால்பந்து வீரர் ஜாக் ருதர்போர்டின் பேரன் ஆவார். இவர் நியூகேஸில் யுனைடெட் மற்றும் 11 இங்கிலாந்து கேப்களுடன் மூன்று கால்பந்து லீக் முதல் பிரிவு பட்டங்களை வென்றார். மேலும் அஆர்சனால் கல்பந்துக் கழகத்துக்காக விளையாடிய மிகப் பழைய வீரர் ஆவார்; [3] இவரது தாத்தாவும் ஆர்சனாலுக்காக விளையாடினார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் மில்டன் கெய்ன்சின் புறநகரில் உள்ள வொபர்ன் சாண்ட்ஸ் என்ற நகரத்தில் வசிக்கிறார்.[5] இவருக்கும் இவரது மனைவி சூசி வெர்ரிலுக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். மில்டன் கெய்ன்ஸில் ஒரு உலோக சிலை, இவரது நினைவாக சூன் 2014 இல் அமைக்கப்பட்டது.[6]

இவர் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகத்தின் ஆதரவாளராக இருக்கிறார்.[7] ரைட் டு பிளே என்ற மேம்பாட்டு தொண்டுக்கான உலகளாவிய விளையாட்டின் தடகள தூதராக உள்ளார். ஆகத்து 2014 இல், இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பில் செப்டம்பர் மாத வாக்கெடுப்புக்கு முன்னதாக இசுகாட்லாந்து சுதந்திரத்தை எதிர்த்து தி கார்டியன் என்ற இதழுக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்ட 200 பொது நபர்களில் இவரும் ஒருவராவார்.[8]

குறிப்புகள்

தொகு
  1. "Men's Long Jump Final". Melbourne 2006 Commonwealth Games Corporation. Archived from the original on 26 September 2012. பார்க்கப்பட்ட நாள் 8 August 2012.
  2. "Athlete Profile". thepowerof10.info.
  3. "Golden Greg keen to cap Games triumph". Press Association. 5 August 2012 இம் மூலத்தில் இருந்து 5 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/69hFvAFgZ?url=http://www.google.com/hostednews/ukpress/article/ALeqM5i4PcJoi0RRwu2Ntc5IkqogfIs87Q?docId=N0262001344170532435A. பார்த்த நாள்: 6 August 2012. 
  4. "Right returns to the right investment". 5 August 2012. http://www.livemint.com/2012/08/05212900/Right-returns-to-the-right-inv.html?h=B. பார்த்த நாள்: 6 August 2012. 
  5. McRae, Donald (17 August 2015). "Greg Rutherford: 'UK Athletics is more of a hindrance than a help'". தி கார்டியன். https://www.theguardian.com/sport/2015/aug/17/greg-rutherford-iaaf-uk-athletics-investment-funding-long-jump. பார்த்த நாள்: 11 September 2016. 
  6. "Greg Rutherford Milton Keynes 'Leaping Man' statue completed". BBC News. 9 June 2014. https://www.bbc.co.uk/news/uk-england-beds-bucks-herts-27765793. பார்த்த நாள்: 25 August 2015. 
  7. "Greg Rutherford interview". Sport. 2 August 2012. Archived from the original on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 15 August 2012.
  8. "Celebrities' open letter to Scotland – full text and list of signatories". The Guardian. 7 August 2014. https://www.theguardian.com/politics/2014/aug/07/celebrities-open-letter-scotland-independence-full-text. பார்த்த நாள்: 26 August 2014. 

வெளி இணைப்புகள்

தொகு

[1]

  1. *அதிகாரப்பூர்வ இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெக்_ருதர்போர்ட்&oldid=3315993" இலிருந்து மீள்விக்கப்பட்டது