கிரைசோயாசுமினம் உமைல்

கிரைசோயாசுமினம் உமைல் (தாவர வகைப்பாட்டியல்: Chrysojasminum humile) என்பது முல்லைக் குடும்பத்தின் தாவரங்களில் ஒன்றாகும். 1753 ஆம் ஆண்டு இது குறித்த முதல் பதிப்பேடு உள்ளது.[1]. பின்பு, 2014 ஆம் ஆண்டு தாவரவியல் ஆய்வாளர்களால், இத்தாவரம் மல்லிப் பேரினத்தில் இருந்து, மஞ்ச மல்லிப் பேரினத்திற்கு (Jasminum--> Chrysojasminum) மாற்றப்பட்டது.[2][3] இந்த மஞ்ச மல்லிப் பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[4], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[5] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. தோட்டங்களுக்குரிய பல பயிரிடும் வகைகள் உருவாக்கப்பட்டன. இதற்காக ஓரினத்திற்கு(J. reevesii ) , விருதும் [கு 1] வழங்கப்பட்டது [6][7] இதன் இப்போதைய தாவரவியல் பெயர் , Jasminum humile என்பதில் இருந்து, Chrysojasminum humile என மாற்றியமைக்கப் பட்டது.

கிரைசோயாசுமினம் உமைல்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. humile
இருசொற் பெயரீடு
Chrysojasminum humile
Jasminum humile, காட்மாண்டு

வளரியல்பு

தொகு

2.5–4 m (8–13 அடி) உயரம் வளரும்; 3 m (10 அடி) அகலம் பரந்து இருக்கும். இவற்றின் தண்டு வட்ட வடிவிலும், தடித்தும் அமைந்து செடி பருத்து காணப்படும். இலைகள் அடர் பச்சை நிறமாகவும், ஏறத்தாழ 5 செ.மீ நீளமாகவும், 5-7 இலைத்தாளையும் கொண்டிருக்கும். பனிக்காலங்களில் இதன் மொட்டுகள் உறைந்தும் இருக்கும். கோடை, இளவேனிற் காலங்களில் இதன் பூக்கள் மலரும் இயல்புடையது. ஏறத்தாழ ஆறு பூக்கள் ஒன்றாக பூச்செண்டு போல தோற்றமளிக்கும்.[8][9][10]

குறிப்புகள்

தொகு
  1. Royal Horticultural Society's Award of Garden Merit.

மேற்கோள்கள்

தொகு
  1. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:609547-1
  2. https://sisn.pagepress.org/index.php/nhs/article/view/54
  3. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:77144222-1
  4. Angiosperm Phylogeny Group (2016), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV", இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ், 181 (1): 1–20, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/boj.12385
  5. முல்லைக் குடும்பம் (Oleaceae Hoffmanns. & Link First published in Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809) nom. cons.)
  6. "RHS Plant Selector - Jasminum humile 'Revolutum'". பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  7. "AGM Plants - Ornamental" (PDF). Royal Horticultural Society. July 2017. p. 56. பார்க்கப்பட்ட நாள் 14 March 2018.
  8. RHS A-Z encyclopedia of garden plants. United Kingdom: Dorling Kindersley. 2008. p. 1136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1405332965.
  9. Kew World Checklist of Selected Plant Families, Jasminum humile
  10. Kertészeti Dendrológia (Szerk: Dr. Schmidt Gábor) KÉE Házinyomdája, 1991.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jasminum humile
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரைசோயாசுமினம்_உமைல்&oldid=3928918" இலிருந்து மீள்விக்கப்பட்டது