கிறிசுடோசு சி. டூமாசு

கிரேக்க தொல்பொருள் ஆய்வாளர்

கிறிசுடோசு சார்சியோ டூமாசு (Christos Georgiou Doumas) ( கிரேக்கம்: Χρήστος Γεωργίου Ντούμας‎ ; பிறப்பு : 1933), ஏதென்சு பல்கலைக்கழகத்தில் கிரேக்க தொல்லியல் பேராசிரியர் ஆவார். 1960 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை, இவர் கிரேக்க தொல்பொருள் சேவையில் அட்டிகாவில் (ஏதெனியன் அக்ரோபோலிசில் ), சைக்கிளடெசு, டோடெகனீசு தீவுகள் மற்றும் வடக்கு ஏசியன் தீவுகளில் பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கும் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். மேலும் அகழ்வாராய்ச்சிகளை நடத்தினார். கிரேக்கத்தின் பல்வேறு பகுதிகளில் பல அருங்காட்சியக கண்காட்சிகளை ஏற்பாடு செய்தார். ஏதென்சின் தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தின் வரலாற்றுக்கு முந்தைய சேகரிப்புகளின் கண்காணிப்பாளராகவும் டூமாசு பணியாற்றினார். மேலும், கெலனிக் கலாச்சார அமைச்சகத்தில் தொல்பொருட்களின் இயக்குநராகவும், பாதுகாப்பு இயக்குநராகவும் ஆனார். 1975 ஆம் ஆண்டு முதல், சிபைரிடன் மரினாடோசின் வாரிசாக, தேரா தீவில் (சாண்டோரினி) அக்ரோதிரியில் அகழ்வாராய்ச்சி இயக்குநராக இருந்தார். ஏசியன் தொல்லியல் மற்றும் குறிப்பாக ஏசியன் தீவுகளின் கலாச்சாரங்கள் பற்றி பல புத்தகங்கள் மற்றும் அறிவார்ந்த கட்டுரைகளை வெளியிட்டார்.

கிறிசுடோசு சி. டூமாசு
2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அக்ரோதிரியின் தளத்தை கிறிசுடோசு டூமாசு விளக்குகிறார் - லுவோ லின்குவான்
பிறப்பு1933 (வயது 90 - 91)
பட்ராசு, கிரீசு
தேசியம்கிரேக்கம்
பணிதொல்பொருள் ஆய்வாளர்
அறியப்படுவதுஅக்ரோதிரி அகழ்வாராய்ச்சிகள்

வெளியிடப்பட்ட படைப்புகள் (தேர்வு)

தொகு
  • டூமாசு, சி.; பாபசோக்லு, எல். (1980). "ரோட்சில் இருந்து சாண்டோரினி டெப்ரா". நேச்சர் 287 (5780): 322–324. doi:10.1038/287322a0. 
  • டூமாசு, சி. (1992). தேராவின் சுவர் ஓவியங்கள். ஏதென்சு: தேரா அறக்கட்டளை. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 960-220-274-2.
  •  டூமாசு, சி. (1988) "மக்களாட்சி நிறுவனங்களின் வரலாற்றுக்கு முந்தைய ஏசியன் தொட்டில்" (கிரேக்க மொழியில்) பக்கம். 24–29
  • டூமாசு, சி. (1997) "ஏசியன் தீவுகள் மற்றும் நாகரிக வளர்ச்சியில் அவற்றின் பங்கு" புதிய கற்காலம், சால்கோலிதிக் மற்றும் ஆரம்பகால வெண்கல யுகத்தில் ஏசியன் சர்வதேச சிம்போசியத்தின் நடவடிக்கைகள், உர்லா-இசுமிர், அக்டோபர் 13-19,1997, எச். எர்கனல், எச். காப்ட்மேன், வி. சாகோக்லு, மற்றும் ஆர். டன்செல் ஆகியோரால் திருத்தப்பட்டது, அங்காரா பல்கலைக்கழக அச்சகம் (2008) பக்கம். 131–140
  • டூமாசு, சி. (1996), பால் சின்க்ளேரில் "ஏசியனில் மத்திய அதிகாரத்தின் தோற்றம்" (எட்) தி டெவலப்மென்ட் ஆப் அர்பனிசம் ப்ரம் எ குளோபல் பெர்சுபெக்டிவ், உப்சாலா பல்கலைக்கழகம், https://www.arkeologi.uu.se இணையதளத்தில் கிடைக்கிறது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிசுடோசு_சி._டூமாசு&oldid=3874913" இலிருந்து மீள்விக்கப்பட்டது