கி. பொ. கோபால்
கி. பொ. கோபால் (K. P. Gopal)(பிறப்பு மார்ச்சு 11, 1930) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தேனி மாவட்டம் கூடலூரைச் சார்ந்தவர். திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினையும் சென்னை, மாநிலக் கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் கல்லூரிக் கல்வியினையும் முடித்துள்ளார். கோபால், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகக் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
1971 | கம்பம் | திமுக | 34,483 | 45.53 |
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. Madras: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 104.