கி. விஜயகுமார்
கி. விஜயகுமார் முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரி ஆவார். இவரது தலைமையிலான சிறப்புக் காவல் படையினர் சந்தன கடத்தல் வீரப்பனை 2004 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இவரது புகழ் மக்களிடையே பரவிற்று.
கி. விஜயகுமார் | |
---|---|
இந்திய காவல் பணி | |
பிறந்த நாள்: 15 செப்டம்பர் 1952 | |
பணியிலிருந்த ஆண்டுகள் | 1975–2012 |
பிறபணிகள் | மூத்த பாதுகாப்பு ஆலோசகர், இந்திய உள்துறை அமைச்சகம் |
ஆரம்ப வாழ்கை
தொகுவிஜயகுமார் செப்டம்பர் 15, 1952 ஆம் ஆண்டு கிருஷ்ணன் நாயர், கௌசல்யா தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் செயின்ட் ஜோசப் கல்லூரி திருச்சிராப்பள்ளியில் இளங்கலை பட்டமும், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவர் 1975ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணிக்குத் தேர்வானார். இவரது தந்தை ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆவார்.
பணிகள்
தொகுவிஜயகுமார், திருச்சி மற்றும் பட்டுக்கோட்டையில் துணைக் கண்காணிப்பாளராகவும், 1977 முதல் 1985 வரை காவல் கண்காணிப்பாளராக தர்மபுரியிலும் பணியாற்றினார். தர்மபுரியில் பணியாற்றிய காலத்தில் வால்டர் தேவாரத்துடன் இணைந்து பணியாற்றினார்.
இவர் 2008 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் அகாடமிக்குத் தலைமைப் பொறுப்பேற்றார். அதே போல் இந்தியாவின் துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படையான சி.ஆர்.பி.எஃப் க்கு 2010 முதல் 2012 வரை தலைமை தாங்கினார்.[1]
2012-இல் ஓய்வு பெற்ற விஜயகுமார், திசம்பர் 2012 முதல் இந்திய உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் சூன் 2018 முதல் அக்டோபர் 2019 முடிய ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் உள்துறை ஆலோசகராக இருந்தார். 6 6 திசம்பர் 2019 அன்று இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் மற்றும் நக்சல்வாதிகள் இருக்கும் பகுதிகளுக்கான பாதுகாப்பு ஆலோகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் அவர் ஓராண்டு இருப்பார்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
- ↑ "அமித்ஷாவின் ஆலோசகராக முன்னாள் போலீஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்". Archived from the original on 2019-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
- ↑ பட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர் வரை: யார் இந்த விஜயகுமார்?