கீதா கபூர் (நடன இயக்குனர்)
கீதா கபூர் (Geeta Kapoor ; பிறப்பு 5 சூலை 1973) ஓர் இந்திய நடன இயக்குனரும், தொலைக்காட்சி ஆளுமையும் ஆவார். இவர் பாலிவுட் படங்களில் பணியாற்றியதற்காகவும், ; டான்ஸ் இந்தியா டான்ஸ், சூப்பர் டான்சர், இந்தியா கே மஸ்த் கலந்தர் , இந்தியாஸ் பெஸ்ட் டான்சர் போன்ற உண்மைநிலை நடன நிகழ்ச்சிகளில் நடுவர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
கீதா கபூர் | |
---|---|
2020இல் கீதா கபூர் | |
பிறப்பு | 5 சூலை 1973 மும்பை, இந்தியா |
மற்ற பெயர்கள் | கீதா மா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1995–தற்போது வரை |
தொழில்
தொகுகீதா கபூர் தனது 15 வயதில் பிரபல பாலிவுட் நடன இயக்குநர் பராக் கான் குழுவில் சேர்ந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் குச் குச் ஹோத்தா ஹை, தில் தோ பாகல் ஹாய், கபி குஷி கபி கம், மொஹபதீன், ஓம் சாந்தி ஓம், பாம்பே ட்ரீம்ஸ் (2004) உள்ளிட்ட பல படங்களில் உதவி நடன இயக்குநராக பணியாற்றினார்.[1] ஃபிஸா (2000), அசோகா, சாதியா (2002), ஹேய் பேபி (2007), தோடா பியார் தோடா மேஜிக் (2008), அலாதின் (2009), டீஸ் மார் கானின் ஷீலா கி, ஜவானி (2010), தேரே நால் லவ் ஹோ கயா (2011), ஷிரின் பர்ஹத் கி தோ நிகல் படி (2012) உட்பட பல பாலிவுட் படங்களில் இவர் நடன இயக்குநராக இருந்துள்ளார்.[2] கீதா கபூர் விருது விழாக்கள் மற்றும் டெம்ப்டேஷன் ரீலோடட் போன்ற இசை நிகழ்ச்சிகளுக்கும் நடனமாடியுள்ளார். மேலும் பெப்சி இந்தியன் பிரீமியர் லீக் 2013இன் தொடக்க விழாவிற்கும் நடனம் அமைத்துள்ளார்.
கபூர், ஜீ தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்ட டான்ஸ் இந்தியா டான்ஸ் (பருவம்1) என்ற உண்மைநிலை நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். இதில் மிதுன் சக்கரவர்த்தி, ரெமோ டிசோசா, டெர்ரென்ஸ் லூயிஸ் ஆகியோரும் இணை நடுவர்களாக இருந்தனர். கீதா கி கேங் என்று அழைக்கப்படும் ஒரு குழுவிற்கு இவர் பயிற்சி அளித்தார். [3]
சான்றுகள்
தொகு- ↑ PLANET BOLLYWOOD Glittering excess rules in Broadway's new 'Bombay Dreams'[தொடர்பிழந்த இணைப்பு] New York Daily News, 25 April 2004.
- ↑ "Dance India Dance, Watch Geeta Kapur Being Honored in April 18 Episode". Archived from the original on 29 March 2018. பார்க்கப்பட்ட நாள் 5 June 2010.
- ↑ "Dance India Dance Season 1". zee5. பார்க்கப்பட்ட நாள் 28 January 2020.