கீதா மகாலிக்

ஒடிசி நடனக் கலைஞர்

கீதா மகாலிக் ( Geeta Mahalik, பிறப்பு 1948 ) [1] என்பவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இந்திய பாரம்பரிய நடன வடிவமான ஒடிசியின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்களில் இவர் ஒருவர் என்று பலரால் கருதப்படுகிறார் . [2] ஒடிசி நடனமானது இந்தியாவின் பாரம்பரிய நடன வடிவங்களில் மிகப் பழமையானது என்று பலரால் கருதப்படுகிறது. [3] [4] இந்திய கலை மற்றும் கலாச்சாரத் துறைக்கு இவர் செய்த சேவைகளுக்காக இந்திய அரசு 2014 ஆம் ஆண்டில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் நாட்டின் நான்காவது மிக உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது. [5]

கீதா மகாலிக்
பிறப்புகோராபுட்

வாழ்கை வரலாறு தொகு

கீதா மகாலிக் மிகச் சிறிய வயதில் இருந்தே நடனம் ஆடத் துவங்கினார். இவர் புகழ்பெற்ற நடன குருவான டெபா பிரசாத் டாஷிடம் மிகச் சிறிய வயதிலேயே நடனம் கற்கத் தொடங்கினார். [6] இந்த குருவைத் தொடர்ந்து குரு மாயதர் ரவுத்திடம் நடன பயிற்சி பெற்றார். இவரிடம் பெற்ற பயிற்சியானது கீதா மகாலிங்குக்கு என்று ஒரு தனித்த நடன பாணியை உருவாக்கிக் கொள்ள உதவியாக இருந்தது. [2]

கீதா மகாலிக் தன் நடன நிகழ்ச்சிகளை பிரான்ஸ் நாடு, சுவிட்சர்லாந்து நாடு, சீன நாடு, இத்தாலி நாடு, ஸ்பெயின் நாடு, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா நாடு, ஜெர்மனி நாடு, போர்ச்சுகல் நாடு, கிரீஸ் நாடு, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகள் என உலகம் முழுவதும் பயனித்து தன் ஆடற் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [7] [8] இந்தியாவின் பல மாநிலங்களில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நடன விழாக்களில் குறிப்பாக, கசுரகோ நடன விழா, எல்லோரா நடன விழா, எலிபண்டா நடன விழா, கொனாரக் நடன விழா, மாமல்லபுரம் நடன விழா, முக்தேஷ்வர் நடன விழா, பத்ரி கேதார் உற்சவம், தாஜ் விழா, உஜ்ஜெயினியில் காளிதாஸ் சமரோ விழா, கங்கை மகோத்சவம் விழா மற்றும் மாண்டு விழா போன்ற விழாக்களில் தன் நடனத்தால் கலா ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

கீதா மகாலிக் தற்போது தில்லியில் வசிக்கிறார். [3]

மரபுரிமை தொகு

கீதா மகாலிக் பொதுவாக ஒடிசி நடனத்தின் பாரம்பரிய பாணிக்கு ஒரு தேசிய சுவையை வழங்கிய பெருமைக்குரியவர். இவர் 'ரச' ( முக பாவனைகள் ) பாவங்களில் தேர்ந்த ஒரு கலைஞர் என்றும் பரவலாக அறியப்படுகிறார். [8] [9]

விமர்சன ரீதியாக பல பாராட்டுக்களைப் பெற்ற லாவன்யாவதி, கிருஷ்ணபிலாஷா மற்றும் திரௌபதி - அந்திம் பிரஷ்ணாபோன்ற பல நாட்டிய நாடகங்களில் கீதா மகாலிக் நடனமாடியுள்ளார். இவர் தனது நடனத்தின் மூலம் பல புதுமையான விளக்கங்களையும் மத மற்றும் மதச்சார்பற்ற கருத்துகளையும் [9] கொண்டு வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. [2]

கீதா மகாலிக் கலை மற்றும் கலாச்சாரத்தை, குறிப்பாக ஒடிசி நடனத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன் தில்லியை மையமாகக் கொண்ட ஒரு அரசு சாரா அமைப்பான கீதாஸ் உபாசனா என்ற அமைப்பை நிறுவியுள்ளார். [10] [11] இந்த அமைப்பு தில்லி மற்றும் வெளி ஊர்களிலும், வெளி நாடுகளிலும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

பதவிகள் தொகு

  • நிறுவனர் இயக்குனர் - கீதாஸ் உபாசனா [2]
  • உறுப்பினர் - ஒடிசி நடனம் குறித்த நிபுணர் குழு - கலாச்சார அமைச்சகம் [7]
  • உறுப்பினர் - பொது கவுன்சில் - சங்கீத நாடக அகாதமி
  • பொதுக்குழு உறுப்பினர் - ஒடிசா சங்கித நாடக அகாதமி

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் தொகு

கீதா மகாலிக் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் கலைஞர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார் . [7]

குறிப்புகள் தொகு

  1. "Odissi" பரணிடப்பட்டது 2 ஏப்பிரல் 2015 at the வந்தவழி இயந்திரம் Sangeetnatak.com
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "About me". About me.com. 2014. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
  3. 3.0 3.1 "Odissi and Chhau dance" (PDF). Orissa Reference Manual. 2004. Archived from the original (PDF) on 26 August 2014. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
  4. "Archaeology". Odissi Kala Kendra. August 2014. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
  5. 5.0 5.1 "Padma Awards Announced". Circular. Press Information Bureau, Government of India. 25 January 2014. Archived from the original on 2 March 2014. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.
  6. "Deba Prasad Dash". Narthaki.com. 6 November 2010. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
  7. 7.0 7.1 7.2 7.3 "Hindu". The Hindu. 20 February 2010. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
  8. 8.0 8.1 8.2 "Indian Express 2". The New Indian Express. 20 February 2010. Archived from the original on 26 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. 9.0 9.1 "Orissa diary". February 16, 2010. Orissa diary.com. Archived from the original on 26 August 2014. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
  10. "Upasana". India Mapped.com. 2014. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
  11. "Halabol". Halabol.com. 2012. Archived from the original on 2014-08-26. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
  12. "Odisha Sangeet Natak Akademi". Odisha Sangeet Natak Akademi. 2010. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
  13. "Indian Express 3". The New Indian Express. 24 March 2012. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_மகாலிக்&oldid=3604404" இலிருந்து மீள்விக்கப்பட்டது