கீத கோவிந்தம் (திரைப்படம்)
கீத கோவிந்தம் (Geetha Govindam) என்பது ஓர் இந்திய தெலுங்குத் திரைப்படமாகும். இதை ஜிஏ2 பிக்சர்ஸ் என்ற பதாகையில் பன்னி வாஸ் தயாரிக்க, பரசுராம் இயக்கியுள்ளார்.[4] இப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் முதன்மைப் பாத்திரத்திலும், சுப்பாராஜூ, ராகுல் ராமகிருஷ்ணா, வெண்ணிலா கிஷோர், நாகு பாபு, மௌரியாணி ஆகியோர் இதர பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இந்தியாவில் 2018 ஆகத்து 15 அன்றும், அமெரிக்காவில் 2018 ஆகத்து 14 அன்றும் வெளியானது. இந்தப் படமானது விமர்சகர்களிடமிருந்து மிக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மேலும் வசூல்ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தத் திரைப்படத்தின் இந்தி மொழிமாற்றுப் பதிப்பு 2019 ஆம் ஆண்டு ஜீ சினிமா தொலைக்காட்சியில் "டார்லிங்பாஸ் 4" என்ற பெயரில் வெளியிடப்படவுள்ளது.[5]
கீத கோவிந்தம் | |
---|---|
இயக்கம் | பரசுராம் |
தயாரிப்பு | பன்னி வாஸ் |
இசை | கோபி சுந்தர் |
நடிப்பு | விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தண்ணா சுப்பாராஜூ ராகுல் ராமகிருஷ்ணா |
ஒளிப்பதிவு | எஸ். மணிகண்டன் |
கலையகம் | ஜிஏ2 பிக்சர்ஸ் |
வெளியீடு | ஆகத்து 15, 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹5 கோடி[1] |
மொத்த வருவாய் | ₹112கோடி[2][3] (உலக அளவில் 12 நாட்கள் நிகர தொகை) |
கதை
தொகுஇப்படமானது கதைத் தலைவனான விஜய் கோவிந்த் (விஜய் தேவரகொண்டா) தன் முன்கதையை அண்ணாவரத்தில் சக பயணியிடம் (நித்யா மேனன்) கூறுவதாக பின்கதை விரிகிறது. விஜய் கோவிந்த், கீதா (ராஷ்மிகா மந்தண்ணா) எனும் பெண்ணை விரும்புகிறார். தன் காதலை அவளிடம்கூறும் சந்தர்ப்பத்தை பார்த்திருக்கிறார்.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இருவரும் ஒரே பேருந்தில் இரவுப் பயணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. பயணத்தில் ஏற்படும் ஒரு திடீர் நிகழ்வால் கோவிந்த் கீதாவின் பார்வையில் கெட்டவனாக தெரிகிறார். இதற்கிடையில், கீதாவின் சகோதரர் பனேந்திராவுக்கும் (சுப்பாராஜூ) கோவிந்த்தின் சகோதரிக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதன் பிறகு கோவிந்த் கீதா ஆகியோருக்கு இடையில் மேலும் சிக்கல்கள் தோன்றுகின்றன. இந்தச் சிக்கல்களில் இருந்து, கோவிந்த் எப்படி மீள்கிறார், ஒன்றாக இருக்க வேண்டியிருந்தாலும் சூழ்நிலையால் வரும் சண்டைகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.[6]
ஒலித் தடம்
தொகுகீத கோவிந்தம் | ||||
---|---|---|---|---|
ஒலித் தடம்
| ||||
வெளியீடு | ஜூலை 29 2018 | |||
ஒலிப்பதிவு | 2018 | |||
இசைப் பாணி | சிறப்பு திரைப்பட ஒலி பாடல் | |||
நீளம் | 16:56 | |||
மொழி | தெலுங்கு | |||
இசைத்தட்டு நிறுவனம் | ஆதித்யா மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | கோபி சுந்தர் | |||
கோபி சுந்தர் காலவரிசை | ||||
|
இப்படத்தின் இசையை கோபி சுந்தர் இசையமைத்துள்ளார், ஆடியோவை ஆதித்யா மியூசிக் வெளியிட்டது. முதல் பாடல் "இன்கெம் இன்கெம் இன்கெம் காவாலே" 10 ஜூலை 2018 அன்று வெளியிடப்பட்டது.
எண் | பாடல் | வரிகள் | பாடியவர்கள் | நீளம் |
---|---|---|---|---|
1 | வச்சிந்தம்மா | ஸ்ரீ மணி | சித் ஸ்ரீராம் | 4:10 |
2 | வாட் த வாட் த லைஃப் | ஸ்ரீ மணி | விஜய் தேவரகொண்டா | 3:03 |
3 | இன்கெம் இன்கெம் இன்கெம் காவாலே | அனந்த ஸ்ரீராம் | சித் ஸ்ரீராம் | 4:27 |
4 | யேண்ட்டி யேண்ட்டி | ஸ்ரீ மணி | சின்மயி | 2:34 |
5 | கணுரெப்பல காலம் | சாகர் | கோபி சுந்தர் | 2:42 |
நடிகர்கள்
தொகு- விஜய் கோவிந்த்தாக விஜய் தேவரகொண்டா
- கீதாவாக ராஷ்மிகா மந்தண்ணா
- பனேந்திராவாக சுப்பாராஜூ
- ராமகிருஷ்ணாவாக ராகுல் ராமகிருஷ்ணா
- மணமகனாக வின்னேலா கிஷோர்
- கோவிந்த்தின் தந்தையாக நாகபாபு
- கீதாவின் பாட்டியாக அன்னபூர்ணா
- கீதாவின் தாத்தாவாக கிரிபாபு
- காவல் துறை அதிகாரி ரவியாக ரவி பிரகாஷ்
- கோவிந்த்தின் சகோதரியாக மௌராணி
- கல்யாணி நடராசன் (கல்லூரி மாணவியின் தாய், கீதாவின் நிர்வாக இயக்குநர்)
- விஜய் கோவிந்த்தின் நண்பராக ராகுல் ராமகிருஷ்ணா
- விஜய் கோவிந்த்தின் நண்பராக அபய் பெத்திகந்தி
- பாசர்பியாக நித்யா மேனன் (சிறப்புத் தோற்றம் )
- பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பெண்ணாக அனு இம்மானுவேல் (சிறப்புத் தோற்றம் )
- கல்லூரி மாணவி நீலுவாக அனிஷா தாமா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Geetha Govindam is a small budget movie that is made on a shoe-string budget of ₹5 crore". ibtimes.co.in. பார்க்கப்பட்ட நாள் 23 August 2018.
- ↑ Geetha Govindam enters Rs 100 cr club; Kolamaavu Kokila becomes highest-grossing heroine-led film in Tamil - https://www.firstpost.com/entertainment/geetha-govindam-enters-rs-100-cr-club-kolamaavu-kokila-becomes-highest-grossing-heroine-led-film-in-tamil-5059371.html
- ↑ Geetha Govindam storms box-office, enters 100 crore club - Times of India - http://toi.in/BNsJ2Z/a31gj
- ↑ Chowdhary, Y. Sunita (2018-08-15), "'A sure-shot hit': Director Parasuram on 'Geetha Govindam'", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-07-20
- ↑ "Geetha Govindam first look: Vijay Devarakonda, Rashmika Mandanna share adorable chemistry in this new age romcom- Entertainment News, Firstpost". Firstpost இம் மூலத்தில் இருந்து 12 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://www.firstpost.com/entertainment/geetha-govindam-first-look-vijay-devarakonda-rashmika-mandanna-share-adorable-chemistry-in-this-new-age-romcom-4581671.html. பார்த்த நாள்: 12 July 2018.
- ↑ Purushothaman, Praveen Kumar (15 August 2018). "Story of Geetha Govindam – Every bachelor's dream to have such a love story!". My Adventures இம் மூலத்தில் இருந்து 19 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180819132018/https://blog.praveen.science/story-of-geetha-govindam-every-bachelors-dream-to-have-such-a-love-story/. பார்த்த நாள்: 16 August 2018.