கீரிப்பல்லன் சுறா
கீரிப்பல்லன் சுறாக்கள் (Thresher shark) என்பவை உலகின் அனைத்து மித வெப்ப, வெப்பமண்டலப் பெருங்கடல்களில் காணப்படும் அலோபிடே குடும்பத்தின் பெரிய லாம்னிஃபார்ம் சுறாக்கள் ஆகும். இந்த குடும்பத்தில் தற்போது மூன்று இனங்கள் உள்ளன. இவை அனைத்தும் அலோபியாஸ் இனத்திற்குள் உட்பட்டவ.
கீரிப்பல்லன் சுறா புதைப்படிவ காலம்: Lutetian to Recent | |
---|---|
பசிபிக் கீரிப்பல்லன் சுறா | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Alopias |
மாதிரி இனம் | |
Alopias vulpinus Bonnaterre, 1788 | |
வேறு பெயர்கள் | |
|
2007 முதல் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் இந்த மூன்று சுறா இனங்களும் அழிவாய்புள்ள இனம் என்று பட்டியலிடப்பட்டுள்ளன.[2] இவை அனைத்தும் பிரபலமான மீன் பிடி விளையாட்டுக்கான மீன்கள் ஆகும்.[சான்று தேவை] இந்த சுறாக்களானது, அவற்றின் இறைச்சி, கல்லீரல் (சுறா கல்லீரல் எண்ணெய்க்கு ), தோல், துடுப்பு (சுறா சூப்புக்காக) போன்றவற்றிற்காக வேட்டையாடப்படுகிறன.
இவை மனிதர்களுக்கு அச்சுறுத்தலானவையாகத் தெரியவில்லை.[சான்று தேவை]
வகைபாடு
தொகுஇந்த சுறாவின் இனம் மற்றும் குடும்பத்தின் பெயரானது கிரேக்கச் சொல்லான ἀλώπηξ , alṓpēx, என்ற சொல்லில் இருந்து வந்தது. இது கிரேக்க மொழியில் நரி யைக் குறிக்கும் சொல்லாகும். மேலும் இது, நீண்ட வால் சுறா, சாதாரண அறுவாள் சுறா, அலோபியாஸ் வல்பின், நரி சுறா என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொதுவான அறுவாள் சுறா என்ற பெயரானது இதற்கு உள்ள அறுவாள் போன்ற வால் துடுப்பினால் உண்டானது. இது சுறாவின் உடலில் நீண்டு இருக்கும்.
குறிப்புகள்
தொகு- ↑ Bourdon, J. (April 2009). Fossil Genera: Alopias. The Life and Times of Long Dead Sharks. Retrieved on October 6, 2009.
- ↑ Error on call to வார்ப்புரு:cite press release: Parameter title must be specified