கீழத்தானியம் உத்தமதானேசுவரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கீழத்தானியம் உத்தமதானேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கீழத்தானியம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு உத்தமதானேசுவரர் கோவில்
ஆள்கூறுகள்:10°24′10″N 78°36′42″E / 10.40285°N 78.61157°E / 10.40285; 78.61157
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:கீழத்தானியம், பொன்னமராவதி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருமயம்
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:உத்தமதானேசுவரர்
வரலாறு
கட்டிய நாள்:ஒன்பதாம் நூற்றாண்டு

வரலாறு தொகு

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 2008 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை சீரமைப்பு செய்தது. இக்கோயிலின் குறிப்பிடத்தக்க அளவுக்கு கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் கோ இளங்கோ முத்தரையரின் ஆட்சியில் கட்டப்பட்டது. கோ இளங்கோ முத்தரையர் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்தார். அவர் சிறீ உத்தமதானேசுவரரை தெய்வமாகக் கொண்ட மற்றொரு கோயிலை கீரனூரிலும் கட்டியுள்ளார். இக்கோயிலில் உள்ள மண்டபம் மற்றும் சிறீ அம்பாளை வழிபடும் இடம் ஆகியவை பிற்காலத்தில் கட்டப்பட்டவை. மண்டபத்தின் கட்டடக்கலை கி.பி. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வடிவமைப்பிற்கு சாட்சியாக உள்ளது. சிறீ அம்பாளை வழிபடும் இடம் பிற்காலப் பாண்டியர் சகாப்தத்தின் போது கட்டப்பட்டது. ஆரம்ப கால சோழர் காலத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்ட கற்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.[2]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு