குங்ஃபூ ஹசில் (திரைப்படம்)

குங்ஃபூ ஹசில் (Kung Fu Hustle ) என்பது ஆங்காங் - சீனா தற்காப்புக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது 2004 ஆம் ஆண்டில் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் இயக்கம் , தயாரிப்பு, எழுத்து ஆகிய பணிகளை மேற்கொண்டவர் ஸ்டீபன் சௌ ஆவார். மேலும் இவர் முக்கியக் கதாப்பத்திரத்திலும் இதில் நடித்தார். சூ போ சூ மற்றும் ஜெஃப்ரி லா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஹோ சின், சன் மன் கங், சாங் கன் சிங் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

குங்ஃபூ ஹசில்
இயக்கம்ஸ்டீபன் சௌ
இசைரேமண்ட் ஊங்
ஒளிப்பதிவுபூன் ஹாங் சங்
படத்தொகுப்புஅங்கீ லம்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 14, 2004 (2004-09-14)(TIFF)
23 திசம்பர் 2004 (China)
22 ஏப்ரல் 2005 (United States)
ஓட்டம்98 நிமிடங்கள்[1]
நாடுஆங்காங்
ஆக்கச்செலவு$20 மில்லியன்
மொத்த வருவாய்$102 மில்லியன்[2]

2001 ஆம் ஆண்டில் வெளியான சாவோலின் சாசர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் ஓவர்சீஸ் குங்ஃபூ ஹசில் திரைப்படத்தின் கதையை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. இந்தத் திரைப்படத்தில் 1970 களின் ஆங்காங் அதிரடித் திரைப்படங்களான குரௌச்சிங் டைகர் , ஹிடன் டிராகன், மற்றும் ஹீரோ அகிய திரைப்படங்களின் நாயகர்கள் பலர் நடித்துள்ளனர்.

டிசம்பர் 23, 2004 இல் சீனாவில் வெளியானது. ஜனவரி 25, 2005 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியானது. அழுகியத் தக்காளிகள் இந்தத் திரைப்படத்திற்கு 90 விழுக்காடு நேர்மறை விமர்சனத்தையும், மெட்டகிரிடிக் வலைத்தளம் 100 க்கு 78 புள்ளிகள் வழங்கியது. வட அமெரிக்காவில்$17 பில்லியன் அமெரிக்க டாலரும் மற்ற பகுதிகளில் $17 பில்லியன் அமெரிக்க டாலரும் வசூலைப் பெற்றது. ஆங்காங்கில் வெளியான சீனத் திரைப்படங்களில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் எனும் சாதனையை இந்தத் திரைப்படம் பெற்றது. அதன் பின் 2011 இல் வெளியான யூ ஆர் தெ ஆப்பிள் ஆஃப் மை லைஃப் திரைப்படம் இந்த சாதனையை தகர்த்தது.

இது வரை அமெரிக்காவில் வெளியான வெளிநாட்டுத் திரைப்படங்களின் வசூலில் முதல் இடத்தைப் பிடித்தது. பல விருதுகளை இந்தத் திரைப்படம் பெற்றுள்ளது. குறிப்பாக ஆறு ஆங்காங் திரை விருதுகள், ஐந்து தங்கக் குதிரை விருதுகள் வென்றுள்ளது. இதன் பத்தாம் ஆண்டை சிறப்பிக்கும் விதமாக ஆசியா மற்றும் அமெரிக்காவில் முப்பரிமாண படிமத்தில் வெளியிடப்பட்டது.

கதைச் சுருக்கம்

தொகு

1930 ஆம் ஆண்டு சாங்காய் நகரில் சிங் (ஸ்டீபன் சௌ) மற்றும் அவரது நண்பர் போன் ஆகிய இருவரும் கோடாலி குழுவில் இணைய வேண்டும் என நினைக்கின்றனர். எனவே அவர்களிடம் அந்தக் குழுவின் தலைவன், அங்கு குடியிருப்பில் உள்ளவர்களை காலி செய்ய வேண்டும் எனக் கூறுகிறான். ஆனால் அந்தக் குடியிருப்பின் உரிமையாளர்களால் இவர்கள் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். எனவே சிறையிலிருக்கும் பீஸ்ட் என்பவரை அனுப்பி காலி செய்ய வைக்கிறான். நில உரிமையாளர்களை கடுமையாகத் தாக்கி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார் பீஸ்ட். அதுமட்டுமல்லாது அவர் சிங்கையும் கடுமையாகத் தாக்குகிறார். பின் எவ்வாறு சிங் , பீஸ்ட்டை வீழ்த்தினார் என்பதனை நகைச்சுவை கலந்து காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

கதை மாந்தர்கள்

தொகு
  • ஸ்டீபன் சௌ (கோடாலி குழுவில் சேர விருப்பம் உள்ளவர்)
  • டேன்னி சன் (கோடாலி குழுவின் தலைவர்)
  • யுன் வா (நில உரிமையாளர்)

தயாரிப்பு

தொகு

இந்தத் திரைப்படத்தை பெய்ஜிங் திரைப்பட நிறுவனம் மற்றும் ஆங்காங் ஸ்டார் ஓவர்சீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தது.[3] 2001 ஆம் ஆண்டின் வெளியான சாவோலின் சாசர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் ஸ்டீபன் சௌ உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தது.இதற்கு ஸ்டீபன் சௌ ஒப்புக்கொண்டார். குங்ஃபூ ஹசில் எனப் பெயரிட்டனர்.[4] இந்தத் திரைப்படம் சுமார் $20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தயாரிக்கப்பட்டது.[5]

சான்றுகள்

தொகு
  1. "Kung Fu Hustle - BBFC". BBFC.
  2. "Kung Fu Hustle". The Numbers (website). பார்க்கப்பட்ட நாள் 26 March 2016. {{cite web}}: Text "The Numbers" ignored (help)
  3. Szeto, Kin-Yan. "The politics of historiography in Stephen Chow's Kung Fu Hustle". Jump Cut. Archived from the original on 25 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-05-05.
  4. "Kung Fu Hustle Production Notes". sensasain.com. Archived from the original on 22 December 2005. பார்க்கப்பட்ட நாள் 7 October 2012.
  5. "Kung Fu Hustle general information". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2007-05-13.

வெளியிணைப்புகள்

தொகு