குங்சாங் சோடென்
குங்சாங் சோடென் (Kunzang Choden, பிறப்பு:1952)[1] பூட்டானிய எழுத்தாளர். ஆங்கில மொழியில் புதினம் ஒன்றை எழுதிய முதல் பூட்டானியப் பெண் என்ற பெருமை படைத்தவர்.
குங்சாங் சோடென் | |
---|---|
வாசிங்டன், டி. சி.யில் நூல் வாசிப்பின்போது சொடென். | |
பிறப்பு | 1952 (அகவை 71–72) டாங், பும்தாங்: பூட்டான் |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | பூட்டானியர் |
கல்வி நிலையம் | நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி சர்க்கிள் ஆப் கர்மா (2005), பூட்டானீசு டேல்சு ஆப் தி எதி (1997), போக்டேல்சு ஆப் பூட்டான் (1994) |
பிள்ளைகள் | 2 மகள்கள், 1 மகன் |
இணையதளம் | |
www |
சோடென் பும்தாங் மாவட்டத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் நிலவுடமை நிலக் கிழார்கள். அவரது ஒன்பதாவது அகவையில் இந்தியாவிற்கு பள்ளியில் படிக்க அனுப்பப்பட்டு ஆங்கிலக் கல்வி பெற்றார்.[2] தில்லியின் இந்திரபிரஸ்தா கல்லூரியில் உளத்தியலில் சிறப்பு இளங்கலைப் பட்டமும் நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலைப் பட்டமும் பெற்றவர். பூட்டானில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தில் பணியாற்றினார். சுவிட்சர்லாந்து நாட்டவரைத் திருமணம் செய்து தற்போது இருவரும் திம்புவில் பணி புரிகின்றனர்.[3]
தி சர்க்கிள் ஆப் கர்மா என்ற இவரது முதல் புதினம் பெங்குவின் (இந்தியா) நிறுவனத்தால் 2005இல் பதிப்பிக்கப்பட்டது. கதைக்களம் 1950களில் பூட்டானின் நவீனத்துவ காலத்தில் அமைந்துள்ளது. முதன்மை கதைமாந்தரான சாலை போடும்பூட்டானியப் பெண் நவீனமய பூட்டானுக்கு முந்தைய பாரம்பரியமான ஆணாதிக்க பாலினப் பாத்திரங்களுடனும் புதிய பாலின வாதம் உருவாக்கிய பாத்திரங்களுடனும் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக கொண்டது.[4] பெரும்பாலான நிகழ்வுகள் வட இந்தியாவில் நடப்பதாகவும் உள்ளது.
2020இல் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், வீட்டில் அடைபட்டிருந்த காலத்தில் சோடெனின் திரைத் தயாரிப்பாளரான மகள், டெச்சென் ரோடெர், தனது அன்னை கதைகளை வாசிப்பதை ஒளிதக் காட்சிகளாக படம் பிடித்து யூடியூப்பில் குழந்தைகளுக்காக தரவேற்றினார்.[5]
நூற்பட்டியல்
தொகு- போக்டேல்சு ஆப் பூட்டான் (1994) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 974-8495-96-5
- பூட்டானீசு டேல்சு ஆப் தி எத்தி (1997) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-879155-83-4
- தாவா: தி இசுடோரி ஆப் எ இசுட்ரே டாக் இன் பூட்டான் (2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99936-644-0-5
- தி சர்க்கிள் ஆப் கர்மா (2005) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86706-79-8
- சில்லி அன்டு சீஸ் - புட் அன்டு சொசைட்டி இன் பூட்டான் (2008) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-974-480-118-0
- டேல்சு இன் கலர் அன்டு அதர் இசுடோரீசு (2009) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89884-62-8
- மெம்பார் டிஷோ - தி பிளேமிங் லேக் (2012) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9993689912
மேற்கோள்கள்
தொகு- ↑ Zubaan Books. Circle of Karma website பரணிடப்பட்டது 2007-10-20 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Avijit Ghosh. "Coming full circle." தி டெலிகிராஃப். 3 April 2005.
- ↑ Zubaan Books பரணிடப்பட்டது 2007-10-20 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Mathai, Anna Sujatha (17 July 2005). "Rooted in the soil and earth". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 டிசம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20151220152133/http://www.thehindu.com/mag/2005/07/17/stories/2005071700370500.htm. பார்த்த நாள்: 14 January 2019.
- ↑ "Tell Me A Story: Rediscovering The Lost Art Of Oral Narrations".