குசராத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம்

குசராத்து மாசுக்கட்டுபாட்டு வாரியம் (Gujarat Pollution Control Board) 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளன்று குசராத்து அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், குசராத்து மாநிலத்தில் நீர் மாசுபாட்டைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இவ்வாரியம் அமைக்கப்பட்டது. நாட்டின் முற்போக்கான மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் இவ்வாரியம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அவ்வப்போது அறிவிக்கப்படும் மாசு கட்டுப்பாட்டுக்கான மத்திய சட்டங்கள் மற்றும் தொடர்புடைய விதிகள் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குசராத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம்
Gujarat Pollution Control Board
ગુજરાત પ્રદૂષણ નિયંત્રણ બોર્ડ
துறை மேலோட்டம்
அமைப்பு15 அக்டோபர் 1974 (1974-10-15)
ஆட்சி எல்லைகுசராத்து அரசு
தலைமையகம்குசராத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பர்யவரன் பவன், பிரிவு-10A, காந்திநகர்-382010.
அமைப்பு தலைமை
  • ஆர். பி.பாரத்து இ.ஆ.ப., தலைவர்
வலைத்தளம்https://gpcb.gujarat.gov.in/webcontroller/page/head-office

குசராத்து மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைமை அலுவலகம் குசராத்தின் காந்திநகரிலும், 27 பிராந்திய அலுவலகங்கள் அகமதாபாத், பரூச், பாவ்நகர், கோத்ரா, ஜாம்நகர், மெக்சானா, ராச்கோட், சூரத், வடோதரா மற்றும் வாபி போன்ற நகரங்களிலும் உள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "About GPCB", Gujarat Pollution Control Board

வெளி இணைப்புகள்

தொகு